Just In
- 3 hrs ago
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- 4 hrs ago
2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...
- 5 hrs ago
இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக?
- 6 hrs ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
Don't Miss!
- News
இந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு
- Movies
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலிவான விலையில் வெங்காயம் வாங்க குவிந்த மக்கள்... பயத்தில் வியாபாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?
மலிவான விலையில் வெங்காயம் வாங்க அதிகாலை முதல் மக்கள் குவிந்ததால், பயத்தில் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் செய்த ஒரு காரியம் கவனம் ஈர்த்துள்ளது.

கார்களுடன் ஒப்பிடும்போது, டூவீலர்கள்தான் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் விபத்துக்குளில் உயிரிழப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆனால் ஹெல்மெட் அணியும் பட்சத்தில், விபத்தில் உயிரிழப்பதற்கான வாய்ப்பை குறைக்க முடியும். சாலை விபத்தின்போது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலையில் அடிபடுவதை ஹெல்மெட் தடுக்கிறது.

எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிர் பிழைத்து கொள்ள முடியும். அத்துடன் மருத்துவமனையில் வீணாக செலவிடுவதையும் தவிர்க்கலாம். தலையில் அடிபடுவது அல்லது மரணத்திற்கு எதிரான முழுமையான பாதுகாப்பை ஹெல்மெட் வழங்குகிறது. எனவே இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை கண்டு கொள்வதே இல்லை. டூவீலர்களில் பயணம் செய்பவர்களே ஹெல்மெட் அணிவதில் அதிக ஆர்வம் காட்டாத சூழலில், வெங்காய விற்பனையில் ஈடுபட்ட ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்து கொண்டு தங்களது வியாபாரத்தை கவனித்த சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றான வெங்காயத்திற்கு இந்தியாவில் தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் ஆம்லெட் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

வெங்காய விலை உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காயத்தை இருப்பு வைக்கும் விஷயத்தில், வியாபாரிகளுக்கு அதிரடியாக உச்சவரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை அதிகளவில் இறக்குமதி செய்து, தட்டுப்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான முயற்சிகளுக்கு மத்தியிலும் முக்கியமான நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் 75 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் வெங்காய விலை உயர்வை கிண்டல் அடிக்கும் வகையில், சமூக வலை தளங்களில் தற்போது அதிக அளவிலான மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் மலிவான விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டி கொண்டுள்ள சூழலில், அங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

பாட்னாவில் உள்ள அரசின் கூட்டுறவு அங்காடியில்தான் இவ்வாறு மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அங்கு வெங்காயம் விற்பனை செய்த கூட்டுறவு அங்காடி ஊழியர்கள், ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதற்கு அவர்கள் அளித்த வித்தியாசமான பதில்தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''நாங்கள் மலிவான விலையில் வெங்காயம் விற்பனை செய்கிறோம். எனவே எங்கள் மீது யாரேனும் கல்வீசி தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதில் இருந்து எங்களை பாதுகாத்து கொள்ளவே நாங்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வெங்காயத்தை விற்பனை செய்கிறோம்'' என்றனர்.

கூட்டுறவு அங்காடியில் மலிவான விலையில் வெங்காயத்தை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக நீண்ட வரிசையில் 'க்யூ' நின்று கொண்டிருந்தது. ஒரு சிலர் அதிகாலை 4 மணி முதல் வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கி சென்றனர். நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாமல், யாரேனும் பொறுமையிழந்து கல் வீச்சு தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் ஊழியர்களிடம் இருந்தது.

போதாக்குறைக்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட எவ்விதமான பாதுகாப்பு வசதிகளையும் நிர்வாகம் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. எனவேதான் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தலைகவசம் அணிந்தபடி வெங்காய விற்பனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பிற்கு எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை என அங்கு ஊழியர்கள் புலம்புவதையும் காண முடிந்தது.

தலையில் காயம் ஏற்படுவதை தடுக்கும் விஷயத்தில், ஹெல்மெட்டின் அவசியத்தை வெங்காய வியாபாரிகள் கூட புரிந்து கொண்டுள்ள சூழலில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களும் தலை கவசத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டிய நேரமிது. மோட்டார்சைக்கிள் விபத்துக்களில் உயிரிழப்பு நிகழ்வதற்கான முக்கிய காரணம் தலையில் ஏற்படும் காயம்தான்.

தலையில் காயம் ஏற்படுவதை தவிர்ப்பதுடன், கண்களில் காயம் உண்டாகாமல் இருக்கவும் ஹெல்மெட் மிக அவசியம். தூசி மற்றும் குப்பைகள் வந்து கண்ணில் விழுவதால், சாலை விபத்து ஏற்படும் வாய்ப்பையும் ஹெல்மெட் குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெல்மெட் அணிவதன் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் முன்மாதிரியாகவும் மாற முடியும்.

ஆனால் வெறுமனே ஏதோ ஒரு ஹெல்மெட்டை அணிந்தால் மட்டும் போதாது. தரமற்ற ஹெல்மெட்கள் எந்த வகையிலும் உங்களுக்கு பலன் அளிக்காது. உங்கள் தலைக்கு ஏற்ற மற்றும் தரமான ஹெல்மெட்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். இதன் மூலம் போலீசார் விதிக்கும் அபராதங்களில் இருந்தும் நீங்கள் தப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு அங்காடி தொழிலாளர்களைப் போலவே இங்கு ஓர் இளைஞர் முற்றிலும் வித்தியாசமான காரணத்திற்காக காரில் செல்லும்போதுக் கூட ஹெல்மெட்டுடன் வலம் வந்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் உரையவைக்கும் உள்ளது. இதனை நீங்கள் கீழே காணலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே முக்கிய காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் இதற்கு முன்பு இவ்வளவு கடுமையாக உயர்த்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல்தான் அபராத தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

அபராதம் செலுத்த பயந்து கொண்டு இனி வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது. புதிய விதிமுறைகள் அனைத்தையும் மிக தீவிரமாக அமல்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை களையெடுக்க அவர்களும் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர்.

இந்த சூழலில் மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ் காரில் வந்தவருக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி போலீசார் தற்போது அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்த பியூஷ் வர்ஷ்னே என்பவருக்குதான் இப்படி ஒரு வினோத காரணத்திற்காக போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

இ-சலான் முறையில் பியூஷ் வர்ஷ்னேவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி பியூஷ் வர்ஷ்னே சலானை பெற்றுள்ளார். அதாவது புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே அவருக்கு இ-சலான் வழங்கப்பட்டுள்ளது. எனவே பழைய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு காரில் செல்லும்போதெல்லாம் ஹெல்மெட் அணிந்தபடியேதான் பியூஷ் வர்ஷ்னே பயணம் செய்து கொண்டிருக்கிறார். போக்குவரத்து போலீசாருக்கு எதிரான ஒரு போராட்டமாக இதனை பியூஷ் வர்ஷ்னே முன்னெடுத்திருப்பதுதான் தற்போது சமூக வலை தளங்கள் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது.

மீண்டும் அபராதம் விதித்து விடுவார்களோ? என்ற அச்சம் காரணமாகவே, காரில் பயணிக்கும் போதெல்லாம் ஹெல்மெட் அணிந்து வருவதாக பியூஷ் வர்ஷ்னே தெரிவித்துள்ளார். பியூஷ் வர்ஷ்னேவின் வித்தியாசமான போராட்டம், இணையத்தில் வைரல் ஆனதால் தற்போது இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

தவறான காரணத்திற்காக பியூஷ் வர்ஷ்னேவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவைப்பட்டால் அபராதத்தை ரத்து செய்வோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இ-சலானை வினியோகிக்கும் ஆபரேட்டர், அதற்கான காரணத்தை தவறாக குறிப்பிட்டு விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காரில் பயணம் செய்பவர்களுக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி போலீசார் அபராதம் விதிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் கூட இதுபோன்ற சம்பவங்கள் பல முறை நடைபெற்றுள்ளன. இ-சலானில்தான் தவறு நடக்கிறதா? என்றால், கையால் எழுதி கொடுக்கப்படும் ரசீதுகளிலும் கூட போலீசார் சில சமயங்களில் காரணத்தை தவறாக குறிப்பிட்டு விடுகின்றனர்.
மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என்ற காரணத்திற்காக போலீசார் கடந்த ஆண்டு அபராதம் விதித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இச்சம்பவம் கோவாவில் நடைபெற்றது. ஸ்பாட்டிலேயே வழங்கப்பட்ட அபராத ரசீதில்தான் போலீசார் இவ்வாறு தவறான காரணத்தை குறிப்பிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.