பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...

கார் ஓட்டுபவர்களை விட பைக் ஓட்டுபவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...

மோட்டார்சைக்கிள்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நபர்களை நீங்கள் சந்தித்திருந்தால், 'பைக் ஓட்டுவதை போன்ற சுகமான அனுபவம் வேறு எதுவுமே இல்லை' என அவர்கள் உங்களிடம் கூறியிருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஒரு சிலருக்கு இது கொஞ்சம் ஓவராக தெரியலாம். எனினும் பைக் ஆர்வலர்களை பொறுத்தவரை இது உண்மையான ஒரு அனுபவம்தான்.

பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...

சிலர் கார் ஓட்டுவதுதான் மகிழ்ச்சி என்பார்கள். இன்னும் சிலரோ பைக் ஓட்டுவதுதான் மகிழ்ச்சி என்பார்கள். ஆனால் ஆய்வுகள் என்ன சொல்கின்றன? என்பதுதான் விஷயமே. பெரும்பாலான கார் ஓட்டுனர்களை விட, பைக்குகளை ஓட்டுபவர்கள்தான் அதிக மகிழ்ச்சியாக உள்ளனர். அத்துடன் அவர்களுக்கு மன அழுத்தமும் குறைவாக உள்ளது. சமீபத்திய ஆய்வின் மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.

பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...

ஆஸ்திரேலியாவின் ஐஎன்ஜி (ING) சமீபத்தில் நடத்திய ஆய்வில், சராசரி கார் ஓட்டுனர்களை விட, சராசரி பைக் ஓட்டுனர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பது தெரியவந்துள்ளது. பைக் ஓட்டுவது என்பது மனதிற்கு கிடைக்கும் சிகிச்சையை போன்றது என்பதை இந்த ஆய்வு வெளிக்கொண்டு வந்துள்ளது. மோட்டார்சைக்கிளை ஓட்டுவதில் உண்மையில் அவ்வளவு நல்ல விஷயங்கள் உள்ளன.

பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...

பைக் ஓட்டுவது தங்களை ஆனந்தப்படுத்துவதாக 82 சதவீதம் பேர் இந்த ஆய்வில் ஒப்பு கொண்டுள்ளனர். ஆனால் கார் ஓட்டுவது மகிழ்ச்சியை அளிப்பதாக ஒப்பு கொண்டவர்களின் சதவீதமோ சுமாராக 55தான். பைக் ஓட்டுவதன் மூலம் மனம் எப்படி மகிழ்ச்சி அடையும்? மன அழுத்தம் எப்படி குறையும்? என்ற சந்தேகத்திற்கு நீங்கள் தற்போது ஆளாகலாம். அதை விளக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...

மன அழுத்தத்தை குறைக்கிறது!

போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வோம் என்பதே பொதுவாக நாம் வீட்டை விட்டு வெளியே செல்வதை வெறுப்பதற்கு முக்கியமான காரணம். ஆனால் பைக் ஓட்டுபவர்களுக்கு இந்த பிரச்னை கிடையாது அல்லது மிகவும் குறைவு. உண்மையில் பைக் ஓட்டுபவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான். சிறிய இடைவெளி கிடைத்தால் கூட, அதில் நுழைந்து வந்து விடலாம்.

பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...

இல்லை... இல்லை... நான் பைக்தான் ஓட்டுகிறேன், எனினும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கிறேன் என நீங்கள் கூறலாம். ஆனால் கார் ஓட்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டு பாருங்கள். குறைந்தபட்சம் அவர்கள் அளவிற்கு நீங்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டீர்கள். இதனால் மோட்டார்சைக்கிள் ஓட்டும் நபர்களுக்கு போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மன அழுத்தம் இயல்பாகவே குறைவு.

பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது!

பைக் ஓட்டும்போது உங்கள் இரண்டு கண்களும், காதுகளும் சுறுசுறுப்பாக செயல்படும். சாலையின் மீது முழு கவனமும் இருக்கும். புலன்கள் சார்ந்த இந்த கவனம், தங்களை சுற்றிலும் என்ன நடக்கிறது? என்பதில் பைக் ஓட்டுபவர்களை அதிக எச்சரிக்கையுடன் இருக்க வைக்கிறது. இதன் விளைவாக மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது.

பைக் ஓட்டுவதன் மூலமாக, எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்கும் திறன்கள் ஒருவருக்கு அதிகரிக்கின்றன. அதாவது ஒரு கப் காபி குடிப்பதை போன்று!

பைக் ஓட்டுபவர்களுக்கு மன அழுத்தம் ரொம்ப கம்மியாம்... காரணம் தெரிஞ்சா இனி காரை தொடவே மாட்டீங்க...

பைக் ரைடிங் குழுக்களின் ஒரு அங்கமாக நீங்கள் இருக்கலாம்!

பைக் ஓட்டுவது உங்களுக்கு 2 விதமான நன்மைகளையும் தரும். நீங்கள் பைக் ஓட்டி கொண்டு தனியாகவும் நேரம் செலவிடலாம். அல்லது மிகப்பெரிய பைக் ரைடிங் குழுக்களின் ஒரு அங்கமாகவும் இருக்கலாம். பைக் ஆர்வலர்கள் பலர் பைக் ரைடிங் குழுக்களில் நிச்சயம் உறுப்பினர்களாக இருப்பார்கள். இது அவர்களுடைய மகிழ்ச்சியின் அளவை அதிகரிப்பதுடன், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bike Riders Are Happier And Have Less Stress Than Car Drivers: Study. Read in Tamil
Story first published: Wednesday, September 23, 2020, 0:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X