பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

பேருந்து ஓட்டுனரின் திறமையால், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கிட்டத்தட்ட மறு ஜென்மம் எடுத்துள்ளனர்.

பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

வாகன ஓட்டிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு காரணமாக இந்தியாவில் தினந்தோறும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பலர் பரிதாபமாக உயிரிழப்பதுடன், ஏராளமானோர் படுகாயமும் அடைந்து வருகின்றனர். ஆனால் சில சமயங்களில் வாகன ஓட்டுனர்களின் சாமர்த்தியம் காரணமாக பெரும் விபத்துக்கள் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்படுகின்றன.

பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

இதற்கு உதாரணமான ஒரு சம்பவம் மதுரை அருகே உள்ள சோழவந்தானில் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று ஒரு ஆணும், பெண்ணும் இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது மும்முனை சந்திப்பு ஒன்றின் அருகே வந்த போது, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஆண் சாலையை கடந்து விடுவதற்கு முயற்சி செய்தார்.

பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

ஆனால் சாலையின் இடது புறத்தில் இருந்து பேருந்து ஒன்று வந்து கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. எனவே சாலையின் மைய பகுதிக்கு அவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து விட்டார். அந்த நேரத்தில் பேருந்து, இரு சக்கர வாகனத்தை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. இதை பார்த்தவுடன் இரு சக்கர வாகன ஓட்டிக்கு, பதற்றத்தில் என்ன செய்வது? என தெரியவில்லை.

பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

எனவே இரு சக்கர வாகனத்தை அப்படியே சாலையின் நடுவே அவர் நிறுத்தி விட்டார். இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி விடும் சூழல் உருவான நிலையில், பேருந்தின் ஓட்டுனர் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டார். தக்க சமயத்தில் பிரேக் பிடித்து அவர் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தினார். இதன் காரணமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் நூலிழையில் தப்பினர்.

பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகளை பார்ப்பதற்கே பிரம்மிப்பாக உள்ளது. பேருந்திற்கும், இரு சக்கர வாகனத்திற்கும் மிக சிறிய இடைவெளி மட்டுமே இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுனர் தக்க நேரத்தில் பிரேக் பிடிக்காமல் போயிருந்தால், பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.

பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மிகவும் வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை திடீரென பிரேக் பிடித்து நிறுத்துவதில் பல்வேறு ஆபத்துக்கள் உள்ளன. வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழக்கூடும். ஆனால் அப்படியான அசம்பாவிதங்களும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக நிகழவில்லை.

பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. பாதசாரிகளோ, மற்ற வாகன ஓட்டிகளோ அல்லது கால்நடைகளோ திடீரென உங்கள் வாகனத்தின் குறுக்கே இப்படி வரக்கூடும். அந்த சமயங்களில் நீங்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தால், வாகனத்தை கட்டுப்படுத்தி நிறுத்துவது சிரமமாகி விடும்.

எனவே எப்போதும் மிதமான வேகத்தில் பயணிப்பது நல்லது. அத்துடன் சாலையின் மீது கூடுதல் கவனத்தை வைத்திருப்பதும் அவசியம். இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகன ஓட்டி பேருந்து வருவதை கவனிக்காதது போல தெரிகிறது. கொஞ்சம் தாமதமாக அவர் பேருந்தை கவனித்திருந்தாலும், பேருந்து வருவதற்குள் சாலையை கடந்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர் முன்னோக்கி வந்திருக்கலாம்.

பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

ஆனால் அந்த சமயத்தில் பேருந்து நெருங்கி வந்து விட்டதால், என்ன செய்வது? என தெரியாமல், பதற்றத்தில் இரு சக்கர வாகனத்தை அவர் அப்படியே சாலையின் மைய பகுதியில் நிறுத்தியிருக்க கூடும். வாகனங்களை ஓட்டும்போது குழப்பமும், பதற்றமும் இல்லாமல் தெளிவான மனநிலையில் இருப்பது அவசியமாகிறது என்பதையும் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

இதுதவிர இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேருமே தலைகவசம் அணியவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக நிகழும் விபத்துக்களில் இருந்து, தலைகவசம்தான் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களின் உயிரை காப்பாற்றும். ஒரு வேளை இந்த சம்பவத்தில் விபத்து நிகழ்ந்திருந்தால், அவர்கள் இருவருக்கும் தலைகவசம் மட்டுமே பாதுகாப்பாக இருந்திருக்கும்.

பஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு

நல்ல வேளையாக விபத்து நிகழவில்லை என்றாலும், தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை இன்னமும் பலர் புரிந்து கொள்வதில்லை. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் அதிகபட்ச பாதுகாப்பே தலைகவசம்தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். மதுரை அருகே நடந்த இந்த சம்பவம் குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Biker, Pillion Rider's Narrow Escape From Speeding Vehicle - Viral Video. Read in Tamil
Story first published: Friday, September 25, 2020, 16:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X