மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ் கார் கலெக்ஷன்!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ் முடிவு எடுப்பத்தில் கெட்டிக்காரர் என்று புகழப்படுகிறார். காரணம் ஒவ்வொரு நிலையிலும் மிகச்சரியான முடிவை எடுத்ததன் காரணமாகவே இன்று அவர் உலக கோடீஸ்வர்களில் ஒருவராக மாற முடிந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

17 வயதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நண்பருடன் சேர்ந்து துவங்கிய பில்கேட்ஸ் கம்ப்யூட்டரை மட்டுமே உயிர் மூச்சாக கொண்டிருந்தார். அவரை அந்த உலகத்திலிருந்து மற்றுமொரு உலகத்திற்கு கொண்டு சென்றது கார்கள்தான். ஆம், பில்கேட்ஸுக்கு கம்ப்யூட்டர் போன்றே கார்கள் மீதும் அலாதி பிரியம்.

அதுசரி, முடிவு எடுப்பதில் கெட்டிகாரர் என்று கூறுகிறார்களே, அப்படியெனில், அவர் எந்த கார்களை விரும்பி வாங்க முடிவு எடுத்தார் என்பது தெரிய வேண்டுமா... ஸ்லைடருக்கு வந்துவிடுங்களேன்.

 போர்ஷே ரசிகர்

போர்ஷே ரசிகர்

கம்ப்யூட்டர் போன்றே அதிவேக கார்கள் பில்கேட்ஸுக்கு பிடித்தமானதுதான். அதில், அவருக்கு பிடித்த நிறுவனம் போர்ஷேதான். ஆம், போர்ஷே கார்களையே அவர் விரும்பி வாங்குவதோடு மட்டுமின்றி, அதிகம் பயன்படுத்தவும் செய்கிறார். எந்தெந்த போர்ஷே கார்கள் பில்கேட்ஸ் வசம் உள்ளது என்பதை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

 போர்ஷே 911 டர்போ

போர்ஷே 911 டர்போ

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் துவங்கப்பட்டு சில ஆண்டுகளில் போர்ஷே 911 டர்போ காரை பில்கேட்ஸ் வாங்கினார். இந்த காரில் செல்வது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக அவ்வப்போது குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த காரை 1990ம் ஆண்டு விற்பனை செய்துவிட்டார்.

விலை போகாத கார்

விலை போகாத கார்

டோரோதியம் என்ற ஏல நிறுவனம் பில்கேட்ஸ் பயன்படுத்திய 1979 ஆண்டு மாடல் போர்ஷே 911 டர்போ காரை ஏலத்தில் விற்பனை செய்தது. 80,000 டாலர் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த கார் வெறும் 62,000 டாலருக்கு மட்டுமே விலை போனது. இந்த காரில் 300 எச்பி பவரை அளிக்கும் 3.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

போர்ஷே 911 கரீரா

போர்ஷே 911 கரீரா

பில்கேட்ஸ் கராஜில் 1999 போர்ஷே 911 கரீரா கேப்ரியோலெட் கார் ஒனறும் இடம்பிடித்தது. பல கார் பிரியர்களை கட்டிப்போட்ட இந்த உயர்வகை கார் மாடல் பில்கேட்ஸ் மனதையும் சுண்டி இழுத்துள்ளது. வேக விரும்பியான பில்கேட்ஸுக்கு போர்ஷே கரீரா கார் எந்தளவு கவர்ந்தது என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

போர்ஷே 911 கரீரா காரில் 296 எச்பி பவரை அளிக்கும் 3.4 லிட்டர் 6 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் எட்டும். இதுதவிர, மிகவும் பிரத்யேகமான போர்ஷே கார் ஒன்றையும் அடம் பிடித்து பில்கேட்ஸ் தனது கராஜில் இணைத்தார். அது எந்த மாடல் என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

போர்ஷே 959

போர்ஷே 959

போர்ஷேவிடமிருந்து வந்த மிகவும் பிரத்யேகமான கார் மாடல்களில் ஒன்று போர்ஷே 959. ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு கார்களை இறக்குமதி செய்வது எளிதான விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்த கார் சேகரிப்பாளர்களுக்கான மாடலாக குறிப்பிட்டு கிராஷ் டெஸ்ட்டுகளுக்கு உட்படுத்தவில்லை. இதனால், இந்த காரை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் எழுந்தன.

விடாத கேட்ஸ்!

விடாத கேட்ஸ்!

ஆனால், 500 கார்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் கார்களுக்கு விலக்கு அளிக்கப்படுவது வழக்கம். இதனை வைத்து பில்கேட்ஸ் போர்ஷே 959 காரை பெருமுயற்சிக்கு பின் இறக்குமதி செய்துள்ளார். தற்போதும் இந்த காரில் அவ்வப்போது செல்வது பில்கேட்ஸுக்கு பிடித்தமான ஒன்றாக தெரிவிக்கின்றனர்.

 ஃபோர்டு ஃபோகஸ்

ஃபோர்டு ஃபோகஸ்

விலையுயர்ந்த கார் மட்டுமின்றி, தனது சொந்த நாட்டு தயாரிப்பான ஃபோர்டு நிறுவனத்தின் ஃபோக்ஸ் கார் மாடலையும் பில்கேட்ஸ் வைத்திருந்தார். 2008ம் ஆண்டு மாடல் ஃபோர்டு ஃபோகஸ் காரில் அவ்வப்போது செல்வதையும் வழக்கம். கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த 50 கார்களில் ஃபோர்டு ஃபோகஸ் கார் மாடலும் ஒன்று என இங்கிலாந்தை சேர்ந்த கார் என்ற ஆட்டோமொபைல் இதழ் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதர கார் மாடல்கள்

இதர கார் மாடல்கள்

போர்ஷே விரும்பியாக இருந்தாலும், பில்கேட்ஸ் வசம் இதர விலையுயர்ந்த மாடல்களும் இல்லாமல் இல்லை. மெர்சிடிஸ் பென்ஸ், லெக்சஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் இருப்பதாக பேட்டி ஒன்றில் பில்கேஸ்ட் கூறியிருக்கிறார். வாஷிங்டன் மேன்சனில் உள்ள பில்கேட்ஸ் வீட்டு கராஜில் 10க்கும் அதிகமான கார் மாடல்கள் உள்ளன.

 
Most Read Articles

English summary
Aside from computers and poverty alleviation, Gates is also known for being fascinated with vehicles. Gates’ favorites are cars from the German manufacturer Porsche.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X