Just In
- 8 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 11 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 12 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 13 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பறவைகளால் விமானங்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா... இந்த விஷயம் தெரிஞ்சா விமானத்துல ஏறவே பயப்படுவீங்க!!
பறவைகளால் விமானங்களுக்கு என்ன மாதிரியான ஆபத்துகள் நிலவுகின்றன, ஆபத்துகளை தவிர்க்க என்ன மாதிரியான யுக்திகள் கையாளப்படுகின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என கூறுவர். இந்த பழமொழிக்கு உதாரணமாக பலவற்றை நம்மால் கூற முடியும். மிக சிறந்த உதாரணம், ஓர் சிறிய எறும்பு நினைத்தால் பிரமாண்ட உருவம் கொண்ட யானையையே வீழ்த்திவிட முடியும். அதுபோல தான் மிக சிறிய உருவம் கொண்ட பறவை நினைத்தால் எந்த மாதிரியான விமானமாக இருந்தாலும் வீழ்த்திவிட முடியுமாம்.

எனவேதான், இன்று வரை உலகெங்கிலும், விமான போக்குவரத்துக்கு மிகவும் சக்திவாய்ந்த அச்சுறுத்தல்களில் ஒன்றாக பறவைகள் பார்க்கப்படுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட இரண்டு வாத்துகள் விமானத்தின் எஞ்ஜின் பகுதியில் மோதியதன் காரணத்தினால் அமெரிக்கா விமானபோக்குவரத்து துறைக்கு சொந்தமான விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக ஹுட்சன் ஆற்று பகுதியில் தரையிறங்கியது.

இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது உலகில் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது. இதனை விமானிகள் எவ்வாறு தவிர்க்கின்றனர் மற்றும் பறவைகளின் திடீர் வழி மறைப்பினால் வேறு என்ன பின்விளைவுகள் எல்லாம் விமானத்திற்கு ஏற்படுகின்றன என்பதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் காண இருக்கின்றோம்.

பறவைகளின் திடீர் வழி மறைப்பால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
பொதுவாக, பறவைகள் தன்னுடைய எல்லைப் பகுதியை வேறு இன பறவைகளுடன் பகிர்ந்துக் கொள்வதில்லை. அவற்றால் பேராபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து, அவை, பிற இன பறவைகளை தன்னுடைய எல்லைப் பகுதியில் இருந்து விரட்ட முயற்சிக்கும். உதாரணமாக, காக்கைக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து வல்லூறு போன்ற பாரிய உருவம் கொண்ட பறவைகளை விரட்டியடிப்பதை நாம் கண்டிருப்போம். சில நேரங்களில் சிறிய குறுவிகள்கூட இதுபோன்று செயல்படுவதை நாம் பார்த்திருப்போம்.

அந்தவகையில், சில நேரங்களில் பறவைகள் தங்களின் பெரிய எதிரியாக நினைத்து விமானங்கள் மீது மோதலை ஏற்படுத்துவதுண்டு. சில சமயங்களில் ஏதேர்ச்சையாக பறவைகளின் கூட்டத்திற்குள் விமானங்கள் புகுவது உண்டு. இந்த மாதிரியான நேரங்களிலேயே விமானம்-பறவை மோதல் ஏற்படுகின்றது.

இதுபோன்ற பறவை மோதலால் ஆண்டு ஒன்றிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இழப்புகள் ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை 91 நாடுகளில் எடுத்த சர்வேவின் அடிப்படையில் ஐசிஏஓ வெளியிட்டுள்ளது.

பறவை-விமான மோதல் என்பது எங்கேயோ, எப்பொழுதோ ஒரு நாள் நடைபெறக் கூடியது என நினைத்துக் கொள்ள வேண்டும். உலகளவில் குறைந்தபட்ச பட்சம் ஒரு நாளைக்கு 34 பறவை மோதல்கள் அரங்கேறிவிடுகின்றதாம். இதுகுறித்த தகவலையும் ஐசிஏஓ அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

அதேசமயம், அனைத்து மோதல்களும் பெரியளவில் செலவீணத்தை ஏற்படுத்துவதில்லை என்றும் அது தெரிவித்துள்ளது. 92 சதவீத மோதல்கள் எந்தவித இழப்புகளை ஏற்படுத்தா வண்ணம் அமைகின்றன. ஆகையால், மீதமுள்ள 8 சதவீதம், அதாவது, மிக அரிதாகவே அதிக செலவீணத்தை ஏற்படுத்தும் வகையில் பறவை-விமான மோதல் விபத்துகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பறவை மோதல்களை தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
பறவைகளை விமானத்தின் எஞ்ஜினில் இருந்து அப்புறப்படுத்த விமான நிறுவனங்கள் சில தனித்துவமான யுக்திகளைக் கையாண்டு வருகின்றன. எஞ்ஜின் பகுதியில் வலை பயன்படுத்தப்படுவது, விநோதமான ஒலியை எழுப்பி பறவை அப்புறப்புடத்துவது என கணிசமான செயல்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும், சில நேரங்களில் தவிர்க்க முடியாத வகையில் விபத்துகள் ஏற்படுத்து விடுகின்றது. எஞ்ஜின் பகுதியில் வலை பயன்படுத்தப்பட்டாலும், அதிக எடைக் கொண்ட பறவை வந்து மோதும்போது, அந்த வலை சேதமடைந்துவிடுவிதாக விமானிகள் கூறுகின்றனர்.

எனவே மற்றுமொரு விஷயமாக விமானத்தின் நிறத்தின் வாயிலாக பறவைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. பறவைகளைக் கவரக்கூடிய அடர் நிறங்களை பயன்படுத்தவதற்கு பதிலாக வானத்துடன் ஒத்துப்போக கூடிய நிறங்களை விமான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதன்மூலம், வானில் பறக்கும்போது பறவைகளின் கண்களில் இருந்து விமானங்களை மறைய முடியும்.

இதுதவிர, விமான நிலையங்களுக்கு அருகில் பறந்துக் கொண்டிருக்கும் பறவைகளை விரட்ட செயற்கை பறவைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, பறவைகள் அனைத்து பூச்சி உண்ணியாக இருப்பதால், விமான நிலையங்களில் இருக்கும் பூச்சிகளை உண்ண அங்கு உலா வந்த வண்ணம் இருக்கின்றன.

அவ்வாறு வரும் பறவைகளை விரட்டியடிக்க செயற்கை பறவைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலக நாடுகள் சிலவற்றிலேயே இந்த முறை கையாளப்படுகின்றது. இதுபோன்று பறவைகளை பயமுறுத்தக் கூடிய ஸ்டிக்கர் போன்றவற்றையும் விமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதன்வாயிலாக, ஒரு சில நிறுவனங்கள் நல்ல பலனை சந்தித்திருக்கின்றன.