மது அருந்தாத நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கைது... மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த ஆச்சரியம்

மது அருந்தாத நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த தகவலால் உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

குடிபோதையில் வாகனம் இயக்குபவர்களால், அதிகளவிலான சாலை விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளிலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. ஏனெனில் இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

குடிபோதையில் வாகனங்களை இயக்கியவர்களால் விபத்து என்பது போன்ற செய்திகள் இல்லாமல் இங்கு பத்திரிக்கைகள் வெளிவந்தால் உண்மையில் ஆச்சரியம்தான். இந்தியாவின் நிலைமை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இங்கு குடிபோதையில் வாகனம் இயக்குபவர்களிடம் முன்பு 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

இது மிகவும் குறைவான அபராத தொகை என்பதால், அலட்சியம் காரணமாக ஏராளமானோர் தொடர்ந்து குடிபோதையில் வாகனங்களை இயக்கி கொண்டேதான் இருந்தனர். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையை மத்திய அரசு தற்போது 10,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதனால் இனி இந்த விதிமீறல் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வந்தது. இதில்தான் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

ஆனால் மது அருந்தாத உங்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக புகார் தெரிவித்து காவல் துறை நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள்? அதுவும் உங்களை கைது செய்தால் எப்படி இருக்கும்? இப்படி தவறே செய்யாத ஒருவரை கடந்த 2014ம் ஆண்டு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

ஆனால் உண்மையில் அவர் மது அருந்தவே இல்லை. இதை போலீசாரிடம் அவர் சொல்லி பார்த்தார். ஆனால் அவர்கள் நம்பவில்லை. அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் 5 மடங்கு அதிக ஆல்கஹாலை அவர் எடுத்து கொண்டதாக சோதனை முடிவுகளும் தெரிவித்தன. எனவே காவல் துறை அவரை அதிரடியாக கைது செய்தனர்.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

இதனால் சம்பந்தப்பட்ட அந்த நபர் நொந்து போனார். மேலும் குழப்பமும் அடைந்தார். தற்போது 5 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. உண்மையில் அந்த நபர் மது அருந்தவில்லைதான். ஆனால் சோதனை முடிவுகள் ஏன் அவர் மது அருந்தியதாக காட்டின? என நீங்கள் நினைக்கலாம்.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

உண்மையில் அவரின் வயிறுதான் பீர் உற்பத்தி செய்துள்ளது. ஆம், நீங்கள் சரியாகதான் படித்துள்ளீர்கள். அவரது உடலில் இப்படி ஒரு வினோதமான பிரச்னை இருப்பது இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சிண்ட்ரோம்தான் (Syndrome) இதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்த சிண்ட்ரோம் இவ்வளவு ஆண்டுகளாக கண்டறியப்படாமல் இருந்து வந்தது.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

மருத்துவ ரீதியில் இதனை ஏபிஎஸ் அல்லது ஆட்டோ-ப்ரீவெரி சிண்ட்ரோம் (ABS-Auto-Brewery Syndrome) என்கின்றனர். அதாவது அவரது உடலில் சாக்கரோமைசஸ் செரிவிசியா (Saccharomyces Cerevisiae) எனப்படும் பூஞ்சை (Fungus) உற்பத்தியாகியுள்ளது. இந்த பூஞ்சை பீரின் ஈஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

அத்துடன் கார்போஹைட்ரேட்களை (Carbohydrates) ஆல்கஹாலாக மாற்ற பீர் உற்பத்தியாளர்கள் இந்த பூஞ்சையைதான் பயன்படுத்துகின்றனர். மது அருந்தாதபோதும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் எவ்வளவு கார்போஹைட்ரேட்டை எடுத்து கொள்கிறாரோ, இந்த பூஞ்சை காரணமாக அது அவரது வயிற்றில் பீராக மாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரிச்மாண்ட் யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் நிபுணர்களை இது தொடர்பாக அந்த நபர் கலந்தாலோசித்துள்ளார். அங்குதான் அவரது உடலில் உள்ள இந்த பிரச்னை கண்டறியப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு அவரது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆண்டிபயோடிக்குகளை அவர் எடுத்து கொண்டுள்ளார்.

ஒயின்ஷாப் தேவையே இல்ல... வயிற்றில் பீர் உற்பத்தியாகும் அதிசய மனிதர்... எப்படி நடக்குது தெரியுமா?

அதன்பின்புதான் இப்படி ஒரு வினோதமான பிரச்னை அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் புதிய மருத்துவ சிகிச்சையின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது நிலை நன்கு மேம்பட்டுள்ளது. இப்படி ஒரு வினோதமான பிரச்னை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையில் மிக அரிதானதொரு பாதிப்புதான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bizarre: Sober Man Arrested For Drunk-Driving. Then He Found Out His Stomach Makes Beer. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X