“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

இந்தியாவில் சுமார் 95% மக்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவதில்லை என உத்திர பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

பெட்ரோல் & டீசல் விலை விண்ணை எட்டிவரும் தற்போதைய சூழலில் எரிபொருள் விலையுயர்விற்கு ஆதரவாக யாராவது குரல் எழுப்பினாலே அன்றைக்கு அவர் தான் நெட்டிசன்களின் கான்செப்ட் ஆகிவிடுவார். இவ்வாறு தற்போது பிரபலமாகி இருப்பவர் தான் உத்திர பிரதேச மாநில அமைச்சர் உபேந்திர திவாரி.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

உத்திர பிரதேசத்தில் பாஜக கட்சியை சேர்ந்த யோகி ஆதித்தியநாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வர் யோகியின் தலைமையில் பணியாற்றும் உபேந்திர திவாரி, 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவைப்படவில்லை என்றும், 4-சக்கர வாகனங்களை பயன்படுத்தும் மீதி 5 சதவீதத்தினருக்கு மட்டுமே பெட்ரோல் & டீசல் தேவைப்படுவதாகவும் சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேட்டியளித்துள்ளார்.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

மேலும், பெட்ரோல் & டீசல் விலை உயர்வுக்கு அரசாங்கம் இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதும் ஒரு காரணமாகும் என்பது போன்றும் இவர் பேசியுள்ளார். உபேந்திர திவாரி அளித்த பேட்டி வருமாறு, பெட்ரோல் & டீசல் விலையை பொறுத்தவரை, இப்போது நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஒரு சிலர் மட்டுமே பெட்ரோல் தேவைப்படும் நிலையில் உள்ளனர்.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

அதாவது தற்போது சமூகத்தில் 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை. அரசாங்கம் 100க்கும் அதிகமான மக்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. மேலும் இலவச கோவிட் சிகிக்சையையும் அளித்துள்ளது. மருந்துகள் வீடு வீடாக விநியோகிக்கப்படுகின்றன என கூறிய உபேந்திர திவாரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்தியநாத் ஆகியோரின் ஆட்சியில் தனி நபரது வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாம்.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

தனி நபரது வருமானம் அதிகரித்திருக்கும் அளவிற்கு ஒன்றும் பெட்ரோல் & டீசல் விலைகள் உயரவில்லையாம். மத்தியில் ஆளும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் பெட்ரோல் & டீசல் விலையுயர்விற்கு இவ்வாறு ஒரே மாதிரியான பதிலையே கூறுகின்றனர். இதை ஏன் இப்போது கூறுகிறேன் என்றால், சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் ஒருவர், உபேந்திர திவாரியை போன்று எரிபொருள் விலை உயர்விற்கு இலவச கொரோனா தடுப்பூசியை காரணமாக கூறியுள்ளார்.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

இதை கூறியது வேறு யாரும் இல்லை, மத்திய பெட்ரோலியம் & எரிவாயு துறை அமைச்சர் ராமேஷ்வர் டெலி ஆவார். "எரிபொருள் விலைகள் அதிகமாக இல்லை, ஆனால் அவற்றிற்கு விதிக்கப்பட்ட வரிகள் அதிகமாகும். நீங்கள் ஒரு இலவச தடுப்பூசியை எடுத்திருக்க வேண்டும். இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது. நீங்கள் பணம் செலுத்தவில்லை. அப்படியென்றால், இதற்கு பணம் எங்கிருந்துவரும்?" என பொதுமக்களை ராமேஷ்வர் டெலி கேள்வி எழுப்பி இருந்தார்.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

இந்தியாவில் தற்சமயம் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல் & டீசலின் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டில் வாகன ஓட்டிகளின் மிக பெரிய பிரச்சனையாக எரிபொருள்கள் விலை உயர்வு மாறி வருகிறது. பெட்ரோல் & டீசல் விலைகளின் உயர்வால் கிட்டத்தட்ட அனைத்து விதமான சரக்கு போக்குவரத்திற்கான கட்டணத்தையும் கனரக வாகன உரிமையாளர்கள் உயர்த்தி வருகின்றன.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

இதனால் வாகனமே பயன்படுத்தாதவர்கள் கூட பெட்ரோல் & டீசல் விலை உயர்விற்கு மறைமுகமாக உட்படுகின்றனர். ஆதலால் இந்தியாவில் 95% மக்களுக்கு மட்டுமே பெட்ரோல் தேவைப்படுகிறது என உத்திர பிரதேச அமைச்சர் தெரிவித்திருப்பது அவரது அறியாமையை தான் வெளிக்காட்டுகின்றது. உண்மையில் அவர் கூறுவது போல் நாட்டில் வெறும் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே பெட்ரோல் தேவைப்பட்டாலும், பெட்ரோல் & டீசல் விலை உயர்வு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ஏதேனும் ஒரு வழியில் எழுதப்படுகிறது.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

நமது தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தற்சமயம் ரூ.105.84 ஆக உள்ளது. அதுவே 1 லி டீசலின் விலை ரூ.94.57 ஆக உள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.111.77 மற்றும் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.102.52 ஆகும். நம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103.61 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.92க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

நாட்டில் பெட்ரோல் & டீசலின் விலைகள் நாள்தோறும் அதிகாலை 6 மணியளவில் அப்டேட் செய்யப்படுகின்றன. இதனால் மேற்கூறப்பட்டவை அனைத்தும் தற்போதைய பெட்ரோல் & டீசலின் விலைகளாகும். நாளைக்கே இவற்றில் மாற்றம் கொண்டுவரப்படலாம். உபேந்திர திவாரி போன்ற சில அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினாலும், சில பிஜேபி தலைவர்கள் மக்களுக்கு தலைவலியாக மாறியுள்ள எரிபொருள் விலைக்கு தாங்கள் தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!

இந்த வகையில் அஸ்ஸாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா, 1 லி பெட்ரோலின் விலை ரூ.200ஐ தொட நேர்ந்தால், இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் அமர்ந்து செல்வதற்கு அஸ்ஸாம் அரசு அனுமதி வழங்க வேண்டும் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது வாகன ஓட்டிகளின் மத்தியில் சற்று ஆறுதலை உண்டாக்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
95% Indians Don’t Need Petrol says Uttar Pradesh Minister.
Story first published: Friday, October 22, 2021, 23:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X