உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

உங்கள் கார் கலர் உங்களை பற்றி என்ன சொல்கிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்த விஷயங்கள் துல்லியமாக இருந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

கார் வாங்குவது தொடர்பான முடிவில் கலர் ஆதிக்கம் செலுத்துவதாக 85 சதவீத வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். காரை போக்குவரத்திற்கான ஒரு சாதனமாக மட்டும் பலர் பார்க்கவில்லை. தங்களது ஆளுமையின் பிரதிபலிப்பாக பலர் காரை கருதுகின்றனர். எனவே காரின் கலருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

ஒருவரது காரின் கலரை வைத்தே அவர்களது குணநலன்களை ஓரளவிற்கு உறுதியாக கூற முடியும். கார் உரிமையாளர்கள் பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் கார் கலரை வைத்தே உங்கள் குணநலன்களை சொல்ல முடியும். உங்கள் கார் உங்களை பற்றி என்ன சொல்கிறது? என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

கருப்பு

கருப்பு கலரானது, சொகுசு, நுட்பம், அதிநவீனம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. மேலும் கருப்பு கலரை, வலிமையுடனும் தொடர்புபடுத்த முடியும். எனவே கருப்பு கலர் கார் வைத்திருப்பவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பார்களாம். மற்றவர்கள் தன்னை சக்தி வாய்ந்த மற்றும் வெற்றிகரமான மனிதராக கருத வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக இருக்குமாம்.

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

கருப்பு கலர் காரை வைத்திருப்பவர்களின் டிரைவிங் ஸ்டைல் வித்தியாசமானது. அவர்கள் சாலையில் சற்று திமிரான மற்றும் கர்வமான நடத்தையை வெளிப்படுத்துவார்கள் என கூறப்படுகிறது. இனிமேல் கருப்பு கலர் கார் வைத்திருப்பவர்களிடம் எதற்கும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் போல இருக்கே!

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

சாம்பல்

சாம்பல் கலரானது, உளவியல் நடுநிலைமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இது ஸ்திரத்தன்மை, திட நிலையை பிரதிபலிக்கிறது. சாம்பல் கலர் கார் வைத்திருப்பவர்கள் முதிர்ச்சியான மற்றும் பெருந்தன்மையான குணம் உடையவர்களாக இருப்பார்களாம். எனவே சாம்பலர் கலர் கார் வைத்திருப்பவர்களின் டிரைவிங் ஸ்டைலும் சிறப்பாக இருக்குமாம்.

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

அதாவது சாம்பல் கலர் கார் வைத்திருப்பவர்கள், சாலையில் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான டிரைவர்களாக நடந்து கொள்வார்களாம். சாலையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வாக்குவாதம் போன்ற செயல்களிலும் அவர்கள் ஈடுபட மாட்டார்களாம். ரொம்ப நல்லவங்களாக இருக்கீங்களே பாஸ்!

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

ப்ளூ

ப்ளூ கலரானது, அமைதியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. 'கூல்' என கூறலாம். ப்ளூ கலர் கார் வைத்திருப்பவர்கள் வம்பு, தும்புகளை வெறுப்பார்களாம். அதே நேரத்தில் புத்தி கூர்மையுடனும், படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இவர்களின் டிரைவிங் ஸ்டைல் நம்பிக்கையுடன் இருக்குமாம். சாலையில் மற்றவர்களுடன் மோதலை விரும்ப மாட்டார்களாம்.

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

சிகப்பு

பொதுவாக சிகப்பு கலர் எச்சரிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும் சிகப்பு கலரானது, வலிமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அதிகம் கவனம் பெறும் கலர்களில் ஒன்றாகவும் இருக்கிறது. எனவே சிகப்பு கலர் கார் வைத்திருப்பவர்கள், மற்றவர்களின் கவனம் தன் மேல் விழ வேண்டும் என விரும்புவார்கள் என கூறப்படுகிறது.

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

மேலும் மற்றவர்களுக்கு தன்னை ஆற்றல் மிக்க ஆளுமையாக காட்டி கொள்ள அவர்கள் விரும்புவார்களாம். அதே நேரத்தில் டிரைவிங் ஸ்டைலை பொறுத்தவரை, சிகப்பு கலர் கார் வைத்திருப்பவர்கள் சாலையில் ரிஸ்க் எடுக்க பயப்பட மாட்டார்கள். கொஞ்சம் ஆக்ரோஷமான குணம் உடையவர்களாக இருப்பார்களாம். அவங்க கிட்ட பாத்து நடந்துக்கங்கப்பா!

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

வெள்ளை

உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் வெள்ளைதான் பலருக்கும் விருப்பமான கார் கலர். ஏனெனில் வெள்ளை கலரானது, தூய்மை மற்றும் நேர்த்தி ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. வெள்ளை கலர் கார் வைத்திருப்பவர்கள் நேரடியான அணுகுமுறை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். அதே நேரத்தில் சமீப காலமாக செல்போன்ற போன்ற சாதனங்களில் வெள்ளை கலர் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

எனவே வெள்ளை கலர் கார் வைத்திருப்பவர்கள் தங்களை இளமை துடிதுடிப்பு கொண்டவராகவும், நவீனமானவர் எனவும் மற்றவர்களுக்கு காட்ட முயற்சி செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளை கலர் கார் வைத்திருப்பவர்களின் டிரைவிங் ஸ்டைல் விபத்துக்களை தவிர்க்க உதவும் என கூறப்படுகிறது.

உங்க கார் கலரே உங்களை பத்தி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிரும்... அட, எல்லா விஷயமும் அப்படியே மேட்ச் ஆகுதே!

ஏனெனில் வெள்ளை கலர் கார்களை வைத்திருப்பவர்கள் சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க விரும்புவார்களாம். சாதாரண போக்குவரத்து விதிமுறைகளை கூட பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது வெள்ளை கலர் கார் வைத்திருப்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படும் எனவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Black grey blue red white car colour and personality
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X