Just In
- 11 hrs ago
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!
- 12 hrs ago
மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலையே ரூ. 1.49 லட்சம்தான்!
- 12 hrs ago
ஹூண்டாய் அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வு அறிமுகம்! பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!
- 13 hrs ago
எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 ஆனா வளர்ச்சியில் செம அடி...
Don't Miss!
- Movies
குஷ்பு முதல் மோகன்லால் வரை... இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- News
"மாநிலங்களை ஆண்ட இசைஞானி" - இளையராஜாவுக்கு மிட் நைட்டில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Finance
தவறான வங்கி கணக்கிற்கு 7 லட்சம்.. லாட்டரி என நாடகம்.. போராடி பெற்ற பெண்..!
- Technology
இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விமானங்களில் ஏற விஐபிகளுக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 கார்... டில்லி ஏர்போட்டில் புதிய ஏற்பாடு...
டில்லி ஏர்போர்ட்டில் விஐபிகளை அழைத்து செல்ல பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை முழுமையாக காணலாம் வாருங்கள்.

நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். பலருக்கு அது சாத்தியமாகியிருக்கும். சிலருக்கு இன்னும் அந்த பாக்கியம் கிடைக்காமல் இருக்கும். விமானத்தில் பயணிப்பது என்பது ஒரு தனி அனுபவம். விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு விமான பயணத்திற்கு முன்பு உள்ள நடைமுறைகள் தெரியும்.

விமான நிலையங்களில் விமானங்களை நிறத்துவதற்கான இடம் இருக்கும். அங்கு விமானம் வந்து நின்றவுடன் விமானத்தின் கதவு அருகே பயணிகள் உள்ளே செல்ல வசதியாக நடைமேடை இணைக்கப்படும். இதன் பின்னர் விமானத்தின் கதவு திறக்கப்பட்டு அதன் வழியாக பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சில நேரங்களில் விமான நிலைய டெர்மனில்களில் கேட்கள் எல்லாம் முழுமையாக நிறந்துவிட்டால் விமான நிலையத்திலேயே ஆங்காங்கே விமானங்களை நிறுத்தி அங்கு வைத்து பயணிகளை விமானங்களில் ஏற்றுவார்கள். இதற்காக டெர்மனில்களிலிருந்து கார், பஸ், வேன் போன்ற வாகனங்களை பயன்படுத்தி பயணிகளை அழைத்து செல்வார்கள்.

இப்படியாக வாகனங்களை பயன்படுத்தி விமானங்களுக்கு அழைத்து செல்லும் போது அங்கு பயணிகள் தனது சொந்த வாகனங்களில் எல்லாம் செல்ல முடியாது. இதற்காக விமான நிலையம் சார்பில் நியமிக்கப்படும் வாகனங்களில் தான் கட்டாயம் பயணிக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பாலும் பஸ்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

வெளிநாடுகளில் ஒருவர் பயணிக்கும் வகுப்பை பொருத்து அவர் அழைத்து செல்லும் காரும் மாறுபடும். இப்படியாக இந்தியாவில் பொது வாகனங்களுக்கு இப்படி வசதியில்லை. ஆனால் தற்போது டில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் 4வது டெர்மினிலை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 4வது ரன்வே தயாராகி வருகிறது. அத்துடன் சேர்ந்து இந்த 4வது டெர்மனிலும் திறக்கப்படும்.

இந்த டெர்மினலில் விமானங்களில் ஏறுவதற்காக பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்திற்கு பஸ் உடன் சேர்ந்து பிஎம்டபிள்யூ காரையும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக பிஎம்டபிள்யூ X7 வாங்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் பிஸ்னஸ் மேன்கள், சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள மனிதர்கள் விமானத்தில் செல்லும் போது அவர்களை விமானத்தின் அருகே அழைத்து செல்ல இந்த பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல 4வது டெர்மினலில் உள்ள விஐபி லாஞ்ச்சில் பிஎம்டபிள்யூ லைஃப்ஸ்டைல் கலெக்ஷன்கள் ஷோக்கேஷ் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் அதன் ஸ்டைல் மற்றும் சொகுசு வசதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இனி படிப்படியாக இந்தசேவை மற்ற விமான நிலையங்களுக்கும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
-
யாரோ அடிச்சு விட்றத நம்பாதீங்க... விமானம் கிளம்பும் முன் ஏன் புகை வருகிறது தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!
-
பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு! படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள்ல டெலிவரி கொடுத்திருக்காங்க!
-
சைலெண்டாக டிவிஎஸ் ஐக்யூப் செய்த சாதனை.... இதை யாருமே எதிர்பாக்கலயே...