முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகள் மனதை கவர்ந்த 737-10 விமானம்! போயிங் மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய விமானம்

போயிங் அதன் புதிய 737-10 விமானத்தின் முதல் சோதனையோட்டத்தை வெற்றி கரமாக செய்து முடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த மேலும் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகளின் மனதை கவர்ந்த போயிங் 737-10 விமானம்... போயிங் மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்...

பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் அதன் 737 மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய விமானத்தை வடிவமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய விமானத்திற்கு நிறுவனம் போயிங் 737-10 எனும் பெயரை வைத்திருக்கின்றது.

முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகளின் மனதை கவர்ந்த போயிங் 737-10 விமானம்... போயிங் மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்...

இந்த விமானம் தற்போது தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கின்றது. வாஷிங்கடன் நகரத்தில் உள்ள ரென்டன் ஃபீல்டு எனும் பகுதியில் காலை 10.07 மணிக்கு புறப்பட்ட இவ்விமானம் மதியம் 12.38 மணிக்கு சியாட்டில் விமானத்தில் தரையிறங்கியிருக்கின்றது.

முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகளின் மனதை கவர்ந்த போயிங் 737-10 விமானம்... போயிங் மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்...

இவ்விமானம் வானத்தில் பறந்தது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இந்த நிகழ்வை போயிங் கொண்டாடி வருகின்றது. விமானத்தை தலைமை விமானி கேப்டன் ஜெனிஃபர் ஹேண்டர்சன் இயக்கியிருக்கின்றார். விமானத்தை இயக்கிய பின்னர் "இது ஓர் அழகிய நிகழ்வு. அனைத்து விதத்திலும் போயிங் 737-10 விமானம் சிறப்பாக செயல்பட்டது" என்றார்.

முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகளின் மனதை கவர்ந்த போயிங் 737-10 விமானம்... போயிங் மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்...

மேலும், "விமானத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் விமானத்தை சுலபமாகக் கட்டுப்படுத்த ஏதுவாகவும், சிறந்த கன்ட்ரோலையும் வழங்கியதாக" அவர் கூறினார். போயிங் 737-10 ஓர் 230 இருக்கைகள் வசதிக் கொண்ட மிகப் பெரிய விமானம் ஆகும்.

முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகளின் மனதை கவர்ந்த போயிங் 737-10 விமானம்... போயிங் மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்...

இவ்விமானத்தை, தற்போது 178 முதல் 220 இருக்கைகள் வசதியுடன் பயன்பாட்டில் இருக்கும் 737-9 விமானத்திற்கும், 185 முதல் 240 இருக்கைகள் வசதியுடன் பயன்பாட்டில் இருக்கும் ஏ321 நியோ ஆகிய இரு விமானங்களுக்கும் இடையில் அமரும் வகையில் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. மேலும், புதிய விமானம் ஜெட் விமானங்களைப் போல் 3,300 நாட்டிக்கல் மைல் (6,100 கிமீ) எனும் வேகத்தில் இயங்கக் கூடியது.

முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகளின் மனதை கவர்ந்த போயிங் 737-10 விமானம்... போயிங் மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்...

தொடர்ந்து, எரிபொருள் சிக்கனம், குறைந்த மாசு வெளிப்பாடு மற்றும் ஒலி வெளிப்பாடு ஆகிய திறன்களுடன் 737-10 வடிவமைக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்களைக் காட்டிலும் இப்புதிய பிரமாண்ட விமானம் 14 சதவீதம் குறைவான மாசையும், 50 சதவீதம் குறைவான ஒலி மாசையும் வெளிப்படுத்துமாம்.

முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகளின் மனதை கவர்ந்த போயிங் 737-10 விமானம்... போயிங் மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்...

737-10 விமானம் இன்னும் பல்வேறு சோதனை ஓட்டங்களைச் சந்திக்க இருக்கின்றது. இதற்கு தொடக்க புள்ளியாகவே தற்போதைய முதல் சோதனையோட்டம் அமைந்திருக்கின்றது. இவ்விமானம் வரும் 2023ம் ஆண்டில் இருந்து பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பணியில் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகளின் மனதை கவர்ந்த போயிங் 737-10 விமானம்... போயிங் மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்...

இதனடிப்படையிலேயே சோதனையோட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டான் டீல் கூறியதாவது, "எங்கள் குழு விமானத்தை மிக உயர்ந்த தரம் மற்றும் நம்பகத் தன்மையுடன் வடிவமைக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே 737-10 விமானம் உருவாக்கப்பட்டிருக்கின்றது" என்றார்.

முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகளின் மனதை கவர்ந்த போயிங் 737-10 விமானம்... போயிங் மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்...

மேலும் பேசிய அவர், இந்த விமானம் அதிக இட வசதி, அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் சக பயணிகளுடன் எந்தவொரு அசௌகரியமான உணர்வும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இது ஏர் சிறந்த விமானமாக இருக்கும்" என கூறினர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Boeing 737-10 Successfully Completes First Flight: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Tuesday, June 22, 2021, 10:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X