ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

பிரபல நடிகர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலவும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. உலகிலேயே சாலை பாதுகாப்பு மோசமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாததே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியது.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் அனைவருக்கும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில நடிகர்கள் சில சமயங்களில், தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். சினிமா ரசிகர்களை மிக அதிக அளவில் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

இங்குள்ள ரசிகர்கள் பெரும்பாலானோர், தங்களுக்கு விருப்பமான நடிகர்கள் திரையில் செய்வதை அப்படியே நிஜ வாழ்க்கையில் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் ஸ்போர்ட்ஸ் பைக்கில் பயணம் செய்துள்ளார்.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் நடைபெறும் விபத்துக்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவது, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான். இதனால் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவது கிடையாது.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

இப்படிப்பட்ட சூழலில், ஹெல்மெட் அணியாமல் ஸ்போர்ட்ஸ் பைக்கில் பயணித்து அந்த நடிகர் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பது பிரபல நடிகரான அக்ஸய் குமார்தான். பாலிவுட் திரையுலகம் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க அக்ஸய் குமாருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

முன்னணி இயக்குனர் ரோகித் ஷெட்டியின் இயக்கத்தில், சூர்யவன்சி என்ற திரைப்படத்தில் அக்ஸய் குமார் தற்போது நடித்து வருகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் ஷெட்டில் இருந்து தற்போது ஒரு வீடியோ கசிந்துள்ளது. இதில், அக்ஸய் குமார் ஹெல்மெட் அணியாமல் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்டி வருகிறார். அந்த பைக்கின் பின்னால், காத்ரீனா கைஃப் அமர்ந்துள்ளார்.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

அவர்கள் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. அக்ஸய் குமார் ஓட்டி வந்தது ஹோண்டா சிபிஆர்650எஃப் (Honda CBR650F) மிட்-கெபாசிட்டி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக் சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் விலை 7.70 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்). இருந்தபோதும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில்தான் அக்ஸய் குமார் பைக் ஓட்டியுள்ளார்.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

இது பொது சாலை கிடையாது. எனினும் அக்ஸய் குமார் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்கிறார். அத்துடன் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளார். அவர்களுக்கு எல்லாம் இது தவறான மெசேஜை அனுப்புவது போல் உள்ளது. அதே சமயம் சக்தி வாய்ந்த மோட்டார்சைக்கிள் ஒன்றை அக்ஸய் குமார் ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது இது முதல் முறை கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

இதற்கு முன் இதே திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்றுக்காக பாங்காக் சாலைகளில், டுகாட்டி மான்ஸ்டர் (Ducati Monster) மோட்டார்சைக்கிளை அக்ஸய் குமார் ஹெல்மெட் அணியாமல் ஓட்டினார். தமிழ் திரை உலகை பொறுத்தவரை அஜித் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் உண்மையிலேயே ஒரு பந்தய வீரர்.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நடிகையுடன் உலா வந்த உச்ச நடிகர்... யார்னு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

அதை நிரூபிக்கும் வகையில், தனது திரைப்படங்களில் வாகனங்களை ஓட்டுவது போன்ற காட்சிகள் வந்தால், ஹெல்மெட் அணிவது போன்ற போக்குவரத்து விதிகள் அனைத்தையும் கடைபிடிப்பார். படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே, தல இப்படி நடந்து கொள்கிறார். இதை மற்ற நடிகர்களும் பின்பற்றலாமே!

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actor Akshay Kumar Spotted Riding A Honda CBR650F Without Helmet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X