சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உத்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

மிகவும் பிரபலமான மனிதர் ஒருவர், சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்தார். அவரை உத்து பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர்.

சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உத்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் என்றாலே, விலை உயர்ந்த வாகனங்களின் மீது அதிக ஆர்வம் காட்ட கூடியவர்களாகதான் இருப்பார்கள். பாலிவுட் நடிகர் சல்மான் கானும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவரிடம் விலை உயர்ந்த கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக எஸ்யூவி ரக கார்களை சல்மான் கான் அதிகம் விரும்ப கூடியவர்.

சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உத்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

சமீபத்தில் கூட லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி காரை அவர் வாங்கினார். ஆனால் சல்மான் கான் சமீப காலமாக எங்குமே கார் ஓட்டி கொண்டு வெளியில் வரவில்லை. இதனால் சல்மான் கானின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். அந்த ஏமாற்றத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்து, சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உத்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

ஆம், மும்பையின் பந்த்ரா பகுதியில், மாருதி சுஸுகி ஜிப்ஸி (Maruti Suzuki Gypsy) காரை சல்மான் கான் ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் கேமராவின் கண்களில் சிக்கியுள்ளார். சல்மான் கான் ஓட்டி வந்த மாருதி சுஸுகி ஜிப்ஸி காரில், ஏராளமான மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான மாடிபிகேஷன்கள் ஆஃப் ரோடுக்கு ஏற்ற வகையில்தான் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உத்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

ஆஃப் ரோடுக்கு ஏற்ற பம்பர் மற்றும் புல்பார், முன் பகுதியில் டோ ஹூக் (Tow Hook), எலெக்ட்ரின் வின்ச், ஆஃப்டர் மார்க்கெட் ஹெட்லேம்ப்ஸ் ஆகியவற்றை குறிப்பிடத்தகுந்த மாடிபிகேஷன்கள் எனலாம். மேலும் கடினமான சாலைகளில் பயணிப்பதற்கு ஏற்ற வகையிலான டயர்களையும் இந்த கார் பெற்றுள்ளது. இது வெள்ளை நிற கார் ஆகும்.

சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உத்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

சல்மான் கான் ஓட்டி வந்த மாருதி சுஸுகி ஜிப்ஸி காரில் ஸ்னோர்க்கெல் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இன்ஜினில் எந்த பாதிப்பும் ஏற்படாமல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளை எளிதாக கடக்க ஸ்னோர்க்கெல் உதவுகிறது. இதேபோன்று இன்னும் பல்வேறு மாடிபிகேஷன்கள் இந்த காரில் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த கார் பற்றி ஒரு சந்தேகம் நிலவுகிறது.

சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உத்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

அதாவது இந்த மாருதி சுஸுகி ஜிப்ஸி சல்மான் கானுக்கு சொந்தமானதா? அல்லது வேறு ஒருவருடையதா? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் கார் யாருடையதாக இருந்தாலும், மிக அருமையாக மாடிபிகேஷன் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் நன்றாக பராமரிக்கப்பட்டும் வருகிறது. இங்கே கண்டிப்பாக மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உத்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

பாலிவுட் திரையுலகின் மற்றொரு முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜான் ஆபிரகாமிடமும் மாருதி சுஸுகி ஜிப்ஸி கார் உள்ளது. மும்பை வீதிகளில் அவர் பல முறை அந்த காரை ஓட்டி வந்துள்ளார். ஆனால் மாருதி சுஸுகி ஜிப்ஸி காரின் உற்பத்தி கடந்த ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உத்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

அரசாங்கத்தின் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க முடியாது என்பதால், மாருதி சுஸுகி ஜிப்ஸி பிரியாவிடை பெற்றது. ஆனால் ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்பவர்கள் மத்தியில் மாருதி சுஸுகி ஜிப்ஸி என்றென்றும் செல்வாக்கு பெற்றதாகவே இருக்கும். ஏனெனில் இது ஆஃப் ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்ற கார்.

சாதாரண காரில் மிகவும் எளிமையாக வலம் வந்த பிரபலம்... உத்து பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

இது லைட்வெயிட், பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய 4X4 எஸ்யூவி ரக கார் ஆகும். இதனால்தான் ஆஃப் ரோடு திறன்களில் மாருதி சுஸுகி ஜிப்ஸி தலைசிறந்து விளங்குகிறது. எப்பேர்பட்ட நிலப்பரப்புகளிலும் பயணம் செய்யக்கூடிய ஆற்றலை மாருதி சுஸுகி ஜிப்ஸி பெற்றுள்ளது. எனவேதான் இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளால் ஜிப்ஸி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actor Salman Khan Spotted Driving Maruti Suzuki Gypsy. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X