வித்தியாசமான காரை ரொம்ப ஆசைப்பட்டு வாங்கிய நடிகை... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இந்திய நடிகை ஒருவர் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல நடிகை வாங்கிய புதிய கார் இதுதான்... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

பாலிவுட் திரையுலகின் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா பத்ரா (Pooja Batra). மிஸ் இந்தியா ஆசியா பசிபிக் பட்டத்தை கடந்த 1993ம் ஆண்டு பூஜா பத்ரா வென்றுள்ளார். பூஜா பத்ரா-நவாப் ஷா ஆகியோரின் திருமணம் கடந்த ஜூலை மாதம்தான் டெல்லியில் நடைபெற்றது. கடந்த 1997ம் ஆண்டு வெளியான விராசாத் எனும் திரைப்படத்தில் பூஜா பத்ரா நடித்திருந்தார்.

பிரபல நடிகை வாங்கிய புதிய கார் இதுதான்... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

அனில் கபூர் மற்றும் தபு ஆகியோருடன் இணைந்து இந்த படத்தில் பூஜா பத்ரா நடித்திருந்தார். இந்த படம்தான் பூஜா பத்ராவிற்கு பெயர் வாங்கி கொடுத்த படங்களில் மிகவும் முக்கியமானது. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு வெளியான மிரர் கேம் திரைப்படத்தில் பூஜா பத்ரா நடித்திருந்தார். இந்த சூழலில் பூஜா பத்ரா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

பிரபல நடிகை வாங்கிய புதிய கார் இதுதான்... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

பாலிவுட் நடிகை பூஜா பத்ரா டெஸ்லா மாடல் 3 (Telsa Model 3) காரை தற்போது வாங்கியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தில் வெளிவரும் உலகப்புகழ் பெற்ற எலெக்ட்ரிக் செடான் ரக கார்தான் மாடல் 3. டெஸ்லா நிறுவனம் இன்னும் இந்தியாவில் தனது விற்பனையை தொடங்கவே இல்லை. அப்படி இருக்கையில் பூஜா பத்ரா இந்த காரை எப்படி வாங்கினார்? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

பிரபல நடிகை வாங்கிய புதிய கார் இதுதான்... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

டெஸ்லா மாடல் 3 காரை பூஜா பத்ரா இந்தியாவில் வாங்கவில்லை. அவர் அமெரிக்காவில்தான் இந்த காரை வாங்கியுள்ளார். தனது புதிய டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா பத்ரா வெளியிட்டுள்ளார். இதில், எனது காரை காதலிக்கிறேன் எனவும் பூஜா பத்ரா கூறியுள்ளார்.

பிரபல நடிகை வாங்கிய புதிய கார் இதுதான்... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

பூஜா பத்ரா கருப்பு நிற டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்லா நிறுவனம் தனது அதிநவீன எலெக்ட்ரிக் கார்கள் மூலமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் பயணிப்பது, அதிநவீன பாதுகாப்பு வசதிகள், சொகுசு வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் டெஸ்லா கார்கள் அசத்துகின்றன.

பிரபல நடிகை வாங்கிய புதிய கார் இதுதான்... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

எனவே உலகம் முழுக்க டெஸ்லா கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று டெஸ்லா நிறுவனம் இன்னும் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கவில்லை. டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகைக்காக நம் நாட்டு வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் காத்து கொண்டுள்ளனர்.

பிரபல நடிகை வாங்கிய புதிய கார் இதுதான்... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

எனவே வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டிலும் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக டெஸ்லா நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது கார்களின் விற்பனையை தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை எப்போது? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

பிரபல நடிகை வாங்கிய புதிய கார் இதுதான்... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

எனினும் பாலிவுட் நடிகை பூஜா பத்ரா வாங்கியுள்ள மாடல் 3 எலெக்ட்ரிக் கார் இந்திய மார்க்கெட்டில் டெஸ்லா நிறுவனம் களமிறக்கும் முதல் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த காரின் விலை குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் 45 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இந்தியர்களுக்கு இந்த கார் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகை வாங்கிய புதிய கார் இதுதான்... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை இது அதிகமான விலைதான். என்றாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே இந்திய மார்க்கெட்டிலும் டெஸ்லா நிறுவனம் சாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இந்திய நடிகர், நடிகைகள் ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களைதான் தேர்வு செய்வார்கள். ஆனால் அரிதிலும் அரிதாக இந்திய நடிகை ஒருவர் மிகவும் வித்தியாசமாக டெஸ்லா காரை வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பெற்ற நடிகை ஸ்ரீதேவி மகள்! விலையை விடுங்க... இந்த கனெக்ஸன்தான் ஹைலைட்

தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி கபூருக்கு எனவும் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாக தொடங்கியுள்ளது. மற்ற நடிகர், நடிகைகளை போலவே ஜான்வி கபூரும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்தான். இதனை நிரூபிக்கும் வகையில் புதிய கார் ஒன்றை ஜான்வி கபூர் தற்போது பெற்றுள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actress Pooja Batra Gifts Herself Tesla Model 3 Electric Sedan. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X