இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

இந்திய பெண் பாடகிகளிடம்- காணப்படும் மிக மிக விலையுயர்ந்த சொகுசு கார்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாகனங்கள் மற்றும் வாகனங்கள் சார்ந்த பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை சிறப்பு தொகுப்புகளாக தொடர்ந்து வழங்கி வருகின்றது. அந்தவகையில், இந்தியாவின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளைப் பற்றியும் அவர்கள் பயன்படுத்தும் பல மடங்கு அதிக விலைக் கொண்ட ஆடம்பர ரக கார்களைப் பற்றிய தகவலையும் வழங்கி வருகின்றது.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

அந்தவகையில், இம்முறை இந்தியாவின் முன்னணி பாடகிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் மிக மிக அதிக விலைக் கொண்ட கார்களைப் பற்றிய தகவலைதான் நாம் இப்பதிவில் பார்க்கவிருக்கின்றோம்.

இந்த பதிவில் பாலிவுட் திரையுலகில் லக்சூரி வாழ்க்கையை வாழும் பெண் பாடகிகளைப் பற்றிய தகவலைதான் வழங்கியுள்ளோம். ஒரு சில பாடகிகளின் ஆடம்பர வாழ்க்கை சில முன்னணி நட்சத்திர நடிகைகளைக்கூட பொறாமைப்படுத்தும் வகையில் இருக்கின்றது. வாருங்கள் அதுகுறித்த தகவலை பார்க்கலாம்.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

பொதுவாக திரையுலகைச் சார்ந்து இயங்கும் பிரபலங்கள் என்றாலே சொகுசுக்கும், லக்சூரி வாழ்க்கைக்கும் பெயர்போனவர்களாகவே இருக்கின்றனர். இதை உறுதி செய்யும் வகையிலேயே பாலிவுட் திரையுலக பாடகிகளின் வாழ்க்கையும் உள்ளது. குறிப்பிட்ட சில பாடகிகள் பல லட்சம் தொடங்கி கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இதில், பாடகி நேஹா கக்கர் முதல் இடத்தில் இருக்கின்றார். இவரை பற்றிய தகவலைதான் முதலில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

நேஹா கக்கர்

பாலிவுட் திரையுலகின் இசைத்துறையில் தற்போது முன்னணியாக திகழ்ந்து வருபவர்களில் நேஹா கக்கர்-ம் ஒருவர். இவர் நான்கு வயதிலிருந்தே தனது பணியை பாலிவுட்டில் மேற்கொண்டு வருகின்றார். ஆகையால், பாலிவுட் மட்டுமின்றி இந்தியாவின் மற்ற திரையுலகிற்கும் பரீட்சையமானவராக உள்ளார்.

இவர் கடந்த காலங்களில் இந்தியன் சிங்கிங் ரியாலிட்டி ஷோவான இந்தியன் ஐடோல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

இந்நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். ஆனால், 'காக்டெய்ல்' படத்தின் 'செகண்ட் ஹேண்ட் ஜவானி' என்ற நடன பாடலின் மூலமே அதிக பிரபலமடைந்தவராக மாறினார். இதன் பின்னரே அவர் அதிக ஆடம்பர வாழ்க்கைக்கு வாழ ஆரம்பித்துள்ளார். இதன் வெளிப்பாடகவே இவர் பயன்படுத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்350ஐ சொகுசு கார் உள்ளது. இந்த காரை அவர் கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

கனிகா கபூர்

இந்திய இசைத்துறையில் அதிகம் புகழ்வாய்ந்தவர்களில் கனிகா கபூர்-ம் ஒருவர். ஜுக்னி ஜி என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியவர் இவரே. இந்த பாடல் அதிகப்படியானோரால் விரும்பப்பட்ட பாடலாக மாறியது. மேலும், அதிக வருமானத்தை இந்த பாடல் ஈட்டிக் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் பேபி டார் என்ற பாடலின் மூலமாகவே பாலிவுட் இசைத்துறையில் பயணத்தைத் தொடங்கினார். இவர் பாடுவதில் தனக்கென தனி ஸ்டைல் மற்றும் யுக்தியைக் கையாண்டு வருகின்றார்.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

இதன் காரணமாகவே இவரின் பாடலுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் பாலிவுட் நிலவுகின்றது. தொடர்ந்து, பல திரைப்பட விருதுகளையும் அவர் வாரி குவித்துள்ளார். தற்போது மும்பையில் வசித்து வரும் இவர் ஆடி க்யூ7 எஸ்யூவி காரை பயன்படுத்தி வருகின்றார். சொகுசு அம்சங்களுக்கு சற்றும் குறைவில்லாத கார் இது. இதனாலயே பல நேரங்களில் இவரை இந்த காரிலேயே காண முடிகின்றது.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

நேஹா பாஷின்

இவர் பாடகி மட்டுமல்ல நல்ல பாடலாசிரியரும் கூட. இதனாலயே பாலிவுட் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய திரையுலகிலும் இவரின் புகழ் கொடிகட்டி பறக்கின்றது. இவர் திரைத்துறைக்கு மட்டுமின்றி யுடியூப் மற்றும் அவரின் சொந்த தளங்களுக்காகவும் பாடல்களை இயற்றி வெளியிட்டு வருகின்றார். குறிப்பாக, இந்தியன் பாப் மற்றும் பஞ்சாபி மியூசிக்கில் கை தேர்ந்தவராக இருக்கின்றார்.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

இதுபோன்ற பல துறைகளில் கால் தடம் பதித்திருக்கும் நேஹா பாஷின் இதுவரை இரு ஃபிலிம் ஃபேர் விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் தற்போது தனது சொகுசான பயண அனுபவத்திற்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ-கிளாஸ் காரை பயன்படுத்தி வருகின்றார். ஆனால் இந்த காரை அவரின் பெயரில் வாங்காமல், அவரது கணவர் பெயரில் வாங்கியுள்ளார்.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

சோனா மஹபத்ரா

இந்தியாவின் பிரபலமான பாடகிகள் சோனா மஹபத்ராவும் ஒருவர். இவர் ஆல்பம், இசை நிகழ்ச்சிகள், ஒற்றையர் பாடல், வீடியோவுடன் கூடிய மியூசிக் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் என அனைத்திலும் ஒரு ரவுண்டு விளையாடி வருகின்றார்.

இவர் 'சத்யமேவ் ஜெயதே' என்ற நிகழ்ச்சி மூலம் திரைத்துறைக்கு அறிமுமாகியுள்ளார். இதைத்தொடர்ந்தே பாலிவுட் திரையுலகின் பிரபல படங்களான டெல்லி பெல்லி, ஃபுக்ரே, தாலாஷ் உள்ளிட்ட படங்களில் குரல் திறமையைக் காண்பித்துள்ளார். இவர் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எம்-கிளாஸ் 250 சிடிஐ காரைப் பயன்படுத்தி வருகின்றார்.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

சோனு கக்கர்

இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகிகளில் சோனு கக்கர் அதிகம் பிரபலமானவராக திகழ்கின்றார். இவர் இந்தியில் பாபுஜி ஜாரா தீரே சலோ என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர். இவரின் குயிலிசை குரலின் காரணமாக அவர் பாடிய அனைத்து பாடல்களுக்கும் இந்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.

இந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..? அடேங்கப்பா நம்பவே முடியலையே..

இவர் சோனு கக்கரின் தங்கை என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்ட் நியூ 6 செரீஸ் ஜிடி சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் அவரின் கணவர் நிரஜ் ஷர்மாவால் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Female Singers & Their Costliest Cars. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X