இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

தொடர் ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினால் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய அளவில் நஷ்டத்தை ஒவ்வொரு நாளும் அடைந்து வருகிறது. ஊரடங்கில் தற்போது சற்று தளர்வு கொண்டுவரப்பட்டிருந்தாலும் மொத்த ஆட்டோமொபைல் துறையும் பழைய நிலைமையை அடைய குறைந்தது 4 வருடங்களாவது ஆகும் என இந்தியாவில் வாகன பாகங்களை விற்பனை செய்துவரும் போஸ்ச் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை விட மிக வேகமாகவும் தீவிரமாகவும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸினால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

இதில் பெரிய அளவில் பாதித்த நாடு என்று பார்த்தால் அமெரிக்கா. முதலில் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தீவிரம் காட்டிய இந்த வைரஸ் பின்னர் அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடிவிட்டு தற்போது தான் சற்று அடங்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இந்த வைரஸினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி வருகிறது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

உலகில் கொரோனாவினால் இறந்தவர்களில் 3ல் ஒருவர் அமெரிக்கராகவே உள்ளார். இந்தியாவை பொறுத்தவரையில் பொறுத்தவரையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் 49 ஆயிரம் பேர் குணம் பெற்று வீடு திரும்பி இருந்தாலும், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

இந்தியாவில் தற்போதுவரை 3,600 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இந்த வைரஸ் ஒருபுறம் உயிர்பலிகளை ஏற்படுத்தி கொண்டிருக்க இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த இரு மாதங்களாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மொத்த பொருளாதாரத்தையும் சரிவடைய செய்து கொண்டிருக்கிறது.

MOST READ: பருவமழை ஆரம்பமாக போது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...?

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

இதன் காரணமாக தான் தற்சமயம் அமலில் உள்ள நான்காவது ஊரடங்கில் சிறிய தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி சில தொழில் நிறுவனங்கள் அரசாங்கத்தின் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளோடு மீண்டும் தொழிலினை துவங்கியுள்ளன. இந்த வகையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் ஆங்காங்கே உள்ள தங்களது தொழிற்சாலைகளை ஒன்றன்பின் ஒன்றாக திறந்து வருகின்றன.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

இருப்பினும் கடந்த இரு மாதங்களில் அடைந்த நஷ்டத்தினாலும், இனி வரும் காலங்களில் ஏற்படவுள்ள நஷ்டங்களினாலும் ஆட்டோமொபைல் துறை மீண்டும் வழக்கமான நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாவது தேவைப்படும் என போஸ்ச் நிறுவனம் கூறியுள்ளது.

MOST READ: 5 நிமிடத்தில் துடி துடித்து சாகும் கொரோனா... ஒரு பைசா செலவில்லாமல் வைரசை அழிக்க புது வழி...

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

இதுகுறித்து போஸ்ச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சௌமித்ரா பட்டாச்சார்யா பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 2018-19 பொருளாதார ஆண்டில் 5 லட்ச கமெர்ஷியல் வாகனங்களும், 2 மில்லியன் பயணிகள் கார்களும், 25 மில்லியன் இருசக்கர வாகனங்களும் விற்பனையாகி மிக சிறப்பான ஆண்டாக அமைந்து இருந்தது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

ஆனால் அதன்பின் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை எங்களை நான்கு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டது. அத்துடன் தற்போதைய அசாதாரண சூழ்நிலை மேலும் 2 வருடங்களுக்கு பின்னோக்கி தள்ளியுள்ளது என கூறியுள்ளார்.

MOST READ: இவரை போன்ற தொழிலதிபர் இருப்பது இந்தியாவிற்கே பெருமை... பிரம்மிக்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா...

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

வாகனங்களுக்கான தேவை வாடிக்கையாளர்கள் இடையே மிக பெரிய அளவில் குறைந்துள்ளதால் இந்த தேவை குறைவு வாகன பாகங்களை வாங்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்களிடமும் எதிரொலித்துள்ளது. இதனால் இந்த 2020-21 பொருளாதார ஆண்டில் இந்தியன் ஆட்டோமோட்டிவ் துறை சுமார் 30 சதவீத வீழ்ச்சியை சந்திக்கவுள்ளதாக போஸ்ச் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

மேலும் இந்நிறுவனம், முன்னணி ஆட்டோமேட்டிவ் தொழிற்நுட்ப நிறுவனமாக எங்களது 80 சதவீத வருவாய் மொபைலிட்டி வணிகங்கள் மூலமாக கிடைக்கிறது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்று சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

MOST READ: நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்

இதனால் போஸ்ச் நிறுவனம் அத்தியவாசியமற்ற எலக்ட்ரிக் பாகங்கள் போன்றவற்றின் தயாரிப்பு பணிகளுக்கான முதலீடுகளை சில மாதங்களுக்கு தவிர்க்க முடிவு செய்துள்ளது. இதில் இருந்து வேகமாக மீண்டுவர எங்களது முயற்சிகள் அனைத்தும் அரசாங்கத்தின் பொருளாதார மீட்பு அறிவிப்புகளை பொறுத்தும், வாகனங்களுக்கான தேவையை பொறுத்துமே இருக்கும் என பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

Most Read Articles

மேலும்... #போஸ்ச் #bosch
English summary
Bosch warned that a turnaround of the Indian automobile industry has been pushed back by about 4-6 years due to Covid-19.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X