இனி புதுசா வரப்போற கார் எதுலயும் இந்த பிரேக் இருக்காது! சென்னை நிறுவனம் வேற லெவல்ல ஒன்ன தயாரிச்சிருக்காங்க!

கார்களில் இருக்கும் பார்க்கிங் பிரேக்களுக்கு மாற்றாக டிரம் பிரேக்களிலேயே மோட்டாரை செட் செய்து சென்னை நிறுவனம் ஒன்று சாதனை செய்துள்ளது. இது எதிர் எதிர்காலத்தில் கார்களில் பார்க்கிங் பிரேக் என்ற ஒன்றே தேவையில்லாமல் செய்யப்போகிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
.
ஒரு வாகனத்திற்கு மிகவும் முக்கியமானது பிரேக் தான். பிரேக் ஒரு வாகனத்தில் இல்லை என தெரிந்தால் யாரும் அந்த வாகனத்தை ஓட்ட முன் வரமாட்டார்கள். பிரேக் இருந்தால் தான் வாகனத்தை விபத்திலிருந்து தடுக்க முடியும். பிரேக்கில் வாகனம் பயணிக்கும் போது பயன்படுத்தும் பிரேக் மற்றொன்று பார்க்கிங் பிரேக், பொதுவாக கார்களுக்கு பார்க்கிங் பிரேக் அவசியமாகிறது.

காரை ஒரு இடத்தில் பார்க் செய்து வைத்துவிட்டு வேறு இடத்திற்கு நாம் செல்லும் போது கார் தானாக நகர்வதை இந்த பார்க்கிங் பிரேக் தடுக்கிறது. இன்று வெளியாகும் சிறிய ரக கார்கள் முதல் பெரிய ரக கார்கள் வரை அனைத்து விதமான கார்களிலும் பார்க்கிங் பிரேக் இருக்கிறது. அதுவும் டிரைவர் இருக்கைக்கு இடதுபுறம், முன்பக்க பயணிகள் இருக்கைக்கும், டிரைவர் இருக்கைக்கும் இடையில் டிரைவர் சுலபமாக ஆப்ரேட் செய்யும் வகையில் பார்க்கிங் பிரேக் லிவர் வைக்கப்பட்டிருக்கும்.

இப்படியாக பார்க்கிங் பிரேக் காருக்கு முக்கியமானது என்பதால் அது சிறிய கார்களில் இடத்தை அடைத்தாலும் வேறு வழியில்லாமல் வைக்க வேண்டிய நிலைக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த பிரச்சனைக்கு தற்போது ஒரு தீர்வு ஒன்றைக் கண்டு பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் இந்த தயாரிப்பு இனி வருங்காலத்தில் பார்க்கிங் பிரேக்கே இல்லாத அளவிற்கு கார்களை மாற்றும்.

சென்னை சேர்ந்த பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பிரேக்குகளை தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர். இவர்கள் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் தங்களது புதிய மற்றும் வித்தியாசமான தயாரிப்பு ஒன்றைக் காட்சிப்படுத்தினர். அது இனி கார்களிலும் பார்க்கிங் பிரேக்களுக்கு மாற்றாகச் செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக டிரம் பிரேக் கொண்ட கார்களில் டிரம் பிரேக்கில் புதியதாக மோட்டார் ஒன்றைப் பொருத்தி இதைச் சாத்தியப்படுத்தியுள்ளனர். இந்த பிரேக் கார்களில் பொருத்தப்பட்டால் கார்களில் பார்க்கிங் லிவரை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் இந்த தயாரிப்பை இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களிலும் பயன்படுத்தும்படி சத்தம் இல்லாமல் செயல்படும்படி வடிவமைத்துள்ளனர். இது மட்டுமல்ல இது வாகனங்களுக்கான ஹில் ஹோல்டு பிரேக்காவும் செயல்படும்.

பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் இந்த பிரேக்கை முழுமையாக இந்தியாவிலேயே வடிவமைத்துள்ளது. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்த டிரம் பிரேக்கில் மோட்டாரை பொருத்தும் தொழிற்நுட்பத்தில் புரோட்டோ டைப்பிலிருந்து டெஸ்டிங், டெவலப்பிங் மற்றும் தயாரிப்பு என அனைத்தும் இந்தியாவிலேயே நடக்கும்படி திட்டமிட்டுள்ளது. இதனால் இது முற்றிலுமாக இந்திய தொழிற்நுட்பம் என்று கூடச் சொல்லலாம்.

இந்த தொழிற்நுட்பம் சிறிய ரக கார்கள் குறிப்பாக எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தச் சிறந்த சாதனம் எனக் கூறப்படுகிறது. இந்த பிரேக் பொருத்தப்பட்டால் எதிர்காலத்தில் கார்களில் இந்த பார்க்கிங் பிரேக்கே காணாமல் போகக் கூட வாய்ப்பு இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Brakes India man developed motor on drum brakes to replace hand brake in cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X