மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு!! கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி!!

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து டெலிவிரி எடுக்கப்படும் தார் வாகனங்கள் மாடிஃபை செய்யப்படுவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு!! கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி!!

அதேநேரம் சிலர் தங்களது புதிய தலைமுறை தாரை காட்டு பாதை போன்ற ஆஃப்-ரோடுகளுக்கு கொண்டு செல்லவதையும் வீடியோக்கள் மற்றும் படங்களின் மூலமாக பார்த்துள்ளோம். இந்த வகையில் கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு, இடையில் மணல் சேற்றில் சிக்கி கொண்ட மஹிந்திரா தாரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

Image Courtesy: Nishant Nariani

இது தொடர்பான வீடியோ நிஷாந்த் நாரியானி என்ற யுடியுப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. வாகனம் மணல் சேற்றில் சிக்கிய பிறகு தான் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் வார இறுதி நாட்களை அமைதியான இடத்தில் கழிக்க விரும்பியுள்ளார்.

மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு!! கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி!!

இதன்படி கடற்கரை ஒன்றிற்கு சென்ற அவர், 4-சக்கர ட்ரைவ் வாகனம் என்பதால் தனது தாரை தைரியமாக கடல் அலைகளுக்கு அருகாமையில் ஓட்டி சென்றுள்ளார். என்னதான் 4-சக்கர ட்ரைவ் வாகனமாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஒரு வரம்பு உள்ளது.

மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு!! கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி!!

அந்த வரம்பை தாண்டி சென்றதால் ஒரு கட்டத்தில் வாகனம் சேற்றில் சிக்கி கொள்ள, அதில் இருந்து தாரை வெளியே எடுக்க முடியாமல் அதன் உரிமையாளர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட வாகனத்தின் அனைத்து சக்கரங்களும் சேற்றில் கொண்டன.

மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு!! கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி!!

கடுமையாக முயற்சிகளை மேற்கொண்ட அவர், ஒரு கட்டத்தில் மனம் தளர்ந்து அருகில் இருந்தவர்களை அழைத்து வாகனத்தை மீட்க முயற்சி செய்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று ஏகப்பட்டோர் உதவி வந்தனர்.

இருப்பினும் நான்கு சக்கரங்களும் சேற்றில் சிக்கி கொண்டதால் அத்தனை பேர் தள்ளி பார்த்தும் வாகனம் ஒரு அடி கூட நகரவில்லை. நேரம் கடந்து கொண்டே இருக்க, கடல் அலைகள் மெதுவாக வாகனத்திற்கு அருகில் வர ஆரம்பித்துள்ளன.

மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு!! கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி!!

அதன் பின்னரே அருகில் ஜேசிபி வாகனத்தை வைத்திருப்போரை அழைக்க இந்த தாரின் உரிமையாளர் முடிவெடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த ஜேசிபி வாகனத்தை கடற்கரை மணலில் இறக்க அதன் ஓட்டுனர் மிகவும் தயங்கியதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு!! கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி!!

ஏனெனில் ஜேசிபி வாகனமும் சேற்றில் சிக்கி கொண்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும். இருப்பினும் ஒரு வழியாக ஜேசிபி ஓட்டுனர் தாரை சேற்றில் இருந்து வெளியே எடுக்க ஒப்பு கொண்டுள்ளார். இந்த முயற்சியே கடைசியில் பயன் தந்துள்ளது.

மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு!! கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி!!

கடற்கரைக்கு காரை எடுத்து செல்கிறீர்கள் என்றால், ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், அலைகள் குறைவாக இருக்கும்போது கடலுக்கு அருகாமையில் செல்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் எந்த இடத்தில் மணல் இறுக்கமாக உள்ளது, எந்த இடத்தில் தளர்வாக உள்ளது என்பதை கண்டுப்பிடிக்க முடியாது.

மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு!! கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி!!

நடந்து வந்தால் ஓரளவிற்கு அடையாளம் கண்டுவிடலாம், ஆனால் சற்று வேகத்தில் வாகனத்தில் பயணம் செய்தால் கண்டுப்பிடிப்பது மிகவும் கடினம். அதுமில்லாமல் ஒருவேளை வாகனம் இவ்வாறு சிக்கி கொண்டால், சிறிய அலைகள் பெரிய அலைகளாக மாறி வாகனத்தையே கடலுக்குள் இழுத்து செல்லும் வாய்ப்பும் உள்ளது.

மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு!! கடற்கரையில் சிக்கிய தார்... கடைசியில் உதவிய ஜேசிபி!!

மேலும், இவ்வாறான பயணங்களை நகரத்தில் உள்ள கடற்கரையில் மேற்கொள்ளவே முயற்சி செய்யுங்கள். அப்போது தான் தேவையான உதவி விரைவாக கிடைக்கும். காட்டுக்குள் இருக்கும் கடற்கரை என்றால் உதவி கிடைப்பதற்குள் நிலைமை மேலும் மோசமாகிவிடும்.

இவை எல்லாவற்றையும் விட ஆஃப்-ரோடு பயணங்களில் முன் அனுபவம் இருந்தால் மட்டுமே இவ்வாறான பயணங்களை மேற்கொள்ள பாருங்கள். இந்த உரிமையாளருக்கு ஆஃப்-ரோடு பயணங்களில் அவ்வளவாக அனுபவம் இல்லாதது போல் தான் தெரிகிறது.

Most Read Articles
உரிமையாளரால் மஹிந்திரா தாருக்கு உண்டான மரியாதையே போச்சு...!!

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Brand new Mahindra Thar gets stuck on the beach JCB to the rescue.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X