தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரும் வாய்ப்பு தற்போது இல்லை, எதிர்காலத்தில் நாம் அமைக்கும் பொருளாதார திட்டத்தை பொருத்து வாயப்புகள் அமையலாம் என நிதி அயோக் துணைதலைவர் ரஜிவ் குமார்

By Balasubramanian

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரும் வாய்ப்பு தற்போது இல்லை, எதிர்காலத்தில் நாம் அமைக்கும் பொருளாதார திட்டத்தை பொருத்து வாயப்புகள் அமையலாம் என நிதி அயோக் துணைதலைவர் ரஜிவ் குமார் தெரிவித்துள்ளார்

தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்கும் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெட்ரோல் விலையை கணிசமாக குறைக்க முடியும் என பலர் பேசி வருகின்றனர்.

தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்

ஆனால் இப்போதைக்கு பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான சாத்தியமே இல்லை என நிதி அயோக் துணை தலைவர் ரஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்

இது குறித்து அவர் அளித்த தெரிவான விளக்கத்தில் : " தற்போது பெட்ரோலிய பொருட்கள் மூலம் மாநில அரசுகளுக்க கிடைக்கும் வருமானத்தை எத்தனை மாநிலங்கள் இழக்க தயாரிக்க இருக்கிறது என்பது சந்தேகம் தான். இதனால் பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது தற்போதைக்கு சாத்தியம் இல்லை. எனினும் தற்போதைய முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்

முதல் மாற்றமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த தங்கள் வரியை குறைக்க வேண்டும். தற்போது ரூ2.5 லட்சம் கோடி பணம் வரியாக வசூல் செய்யப்பட்டால் அதில் ரூ2 லட்சம் கோடி மாநில அரசிற்கே செல்கிறது.

தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்

அந்த வகையில் பெட்ரோலியத்தில் இருந்து வரும் வருமானத்தை தவிர்த்து மாற்ற வகையிலான வருமானத்தை அதிகரித்தால் மட்டுமே பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை பற்றி யோசிக்கலாம்.

தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்

தற்போது ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விரும்புவதாகவே தெரிவிக்கிறது. போக்குவரத்து துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்ளிட்ட சில பா.ஜ., அமைச்சர்களும் இதற்கு ஆதரவே தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்

நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியும் ராஜ்யசபாவில் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரவே மத்திய அரசு விரும்புவதாகவும், மாநில அரசுகள் இதற்கு துணை புரிய வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்

தற்போது மஹாராட்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமே அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்

நடப்பதை எல்லாம் பார்க்கும் போது தற்போது பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி வரப்பிற்குள் கொண்டு வருவது என்பது சாத்தியமே இல்லை. ஆனால் எதிர்காலத்தில் கொண்டு வர அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அதை எவ்வளவு சீக்கரமாக கொண்டு வருகிறோம் என்பதில்தான் நிர்வாக திறன் இருக்கிறது " இவ்வாறு கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Bringing Petrol And Diesel Under GST Is Impractical, Says NITI Aayog Vice Chairman. Read in Tamil
Story first published: Tuesday, June 26, 2018, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X