பள்ளி மைதானத்தில் அபாயகரமான ஸ்டண்ட்... கார், பஸ் டிரைவர் சிக்கினர்... என்ன நடந்தது தெரியுமா?

பள்ளி மைதானத்தில் அபாயகரமான முறையில் ஸ்டண்ட் செய்த கார், பஸ் டிரைவர் சிக்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

பள்ளி மைதானத்தில் அபாயகரமான ஸ்டண்ட்... கார், பஸ் டிரைவர் சிக்கினர்... என்ன நடந்தது தெரியுமா?

கேரள பஸ் ஒன்று பள்ளி மைதானத்தில் ஸ்டண்ட்டில் ஈடுபடும் வீடியோ சமீபத்தில் வைரலாக பரவியது. இது டூரீஸ்ட் பஸ் ஆகும். சுற்றுலா செல்வதற்காக இந்த பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி மைதானத்தில் மிகவும் அபாயகரமான முறையில் அந்த பஸ் இயக்கப்பட்டது. இதன்பின் ஒரு கார் மற்றும் சில பைக்குகள் அந்த பஸ்சுடன் இணைந்து கொண்டு அதே இடத்தில் ஸ்டண்ட் செய்தன.

பள்ளி மைதானத்தில் அபாயகரமான ஸ்டண்ட்... கார், பஸ் டிரைவர் சிக்கினர்... என்ன நடந்தது தெரியுமா?

இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, பஸ் டிரைவர் மற்றும் கார் டிரைவர் ஆகிய இருவரும் கேரளா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில், ஸ்டண்ட் செய்த பஸ் டிரைவரின் பெயர் ரஞ்சு என்று தெரியவந்துள்ளது. இந்த பஸ் ஸ்டண்ட் நடந்த இடத்திற்கு அருகில் கார் ஒன்றும் அபாயகரமான ஸ்டண்ட்டில் ஈடுபட்டது.

பள்ளி மைதானத்தில் அபாயகரமான ஸ்டண்ட்... கார், பஸ் டிரைவர் சிக்கினர்... என்ன நடந்தது தெரியுமா?

அதன் டிரைவரான அபிஷேத் என்பவரும் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 22 வயது மட்டுமே ஆகிறது. பெயில் கட்டணத்தை செலுத்திய பின் இரண்டு டிரைவர்களும் விடுவிக்கப்பட்டனர். கேரளாவின் மோட்டார் வாகன துறை பஸ்ஸை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. அதே சமயம் கார் டிரைவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மைதானத்தில் அபாயகரமான ஸ்டண்ட்... கார், பஸ் டிரைவர் சிக்கினர்... என்ன நடந்தது தெரியுமா?

மாணவர்களின் சுற்றுலாவிற்காக பள்ளியால் இந்த டூரிஸ்ட் பஸ் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ வைரலாக பரவிய பின்பு, டூர் சென்ற பஸ் திரும்ப வருவதற்காக மோட்டார் வாகன துறை அதிகாரிகள் காத்திருந்தனர். அந்த பஸ் திரும்பிய உடனேயே அதிகாரிகள் அதனை அதிரடியாக பறிமுதல் செய்து விட்டனர்.

MOST READ: டாடா டிகோர் இவி காரின் டெலிவரி துவங்கியது.. முதல் கார் எந்த நகரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா?

பள்ளி மைதானத்தில் அபாயகரமான ஸ்டண்ட்... கார், பஸ் டிரைவர் சிக்கினர்... என்ன நடந்தது தெரியுமா?

அந்த பஸ்ஸின் ஆர்சி புக்கையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த டிரைவரின் டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. தற்போது மோட்டார் வாகன துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பஸ்ஸில் ஸ்பீடு கவர்னர்கள் இல்லாமல் இருந்ததும் அதிகாரிகளின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

MOST READ: சாக்கடையில் கவிழ்ந்த கார்... மனைவி மீது போலீஸில் கணவன் புகார்! எதற்காக என தெரிந்தால் சிரிக்க கூடாது...

பள்ளி மைதானத்தில் அபாயகரமான ஸ்டண்ட்... கார், பஸ் டிரைவர் சிக்கினர்... என்ன நடந்தது தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரை கனரக வாகனங்களில் ஸ்பீடு கவர்னர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்கள் குறிப்பிட்ட ஸ்பீட் லிமிட்டை கடக்காமல் இருப்பதை இது உறுதி செய்கிறது. மேலும் பிரஷர் ஹாரன்கள், லவுடு ஸ்பீக்கர்களை ஆகியவையும் அந்த பஸ்ஸில் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

MOST READ: பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

பள்ளி மைதானத்தில் அபாயகரமான ஸ்டண்ட்... கார், பஸ் டிரைவர் சிக்கினர்... என்ன நடந்தது தெரியுமா?

மோட்டார் வாகன துறை விதிகளின்படி இவை அனைத்தும் சட்ட விரோதம். இந்த வீடியோவில் டூவீலர்களும் ஸ்டண்ட் செய்துள்ளன. எனவே அபாயகரமான முறையில் ஸ்டண்ட் செய்த 7 பைக்குகளை மோட்டார் வாகன துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோவில் இருந்த மற்ற பைக்குகளின் பதிவு எண்ணை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

எனவே மற்ற பைக்குகளும் பறிமுதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் இதுபோல் வாகனங்களை மாடிபிகேஷன் செய்து அபாயகரமான முறையில் ஸ்டண்ட் செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Mathrubhumi News/YouTube

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bus, Car Drivers Arrested For Performing Dangerous Stunts: Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X