விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

விமானங்கள் புவி பரப்பில் இருந்து 30,000 - 40,000 அடி உயரத்தில் பறப்பதால், நாம் எதிர்பார்க்காத சில பிரச்சனைகள் பயணத்தின்போது ஏற்படுவது சகஜமே. இதில் ஒன்று, விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது. விமானத்தில் பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்டை புக் செய்தால் நன்கு சவுகரியமாக படுத்து கொண்டு கூட பயணம் செய்யலாம்.

விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

ஆனால் எக்னாமிக் கிளாஸை தேர்வு செய்தால் அவ்வாறான சவுகரியங்களை எதிர்பார்க்க முடியாது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்...

விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

ஜன்னல் இருக்கையை புக் செய்யுங்கள்

விமானத்தில் தூங்கிக்கொண்டு செல்ல நினைக்கிறீர்கள். ஆனால் பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்டை முன்பதிவு செய்ய இயலாத போது, உங்களது அடுத்த தேர்வு ஜன்னல் இருக்கையை முன்பதிவு செய்வதாக இருக்க வேண்டும். ஏனெனில் நேராக அமர்ந்தப்படி தூங்குவதை காட்டிலும், அருகில் ஏதேனும் பொருள் மீது தலையை சாய்த்தவாறு தூங்குவது சவுகரியமாக இருக்கும்.

விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

"எக்ஸ்யூஸ் மீ" என பக்கத்து இருக்கைக்காரர்களின் தொந்தரவு இருக்காது, நிம்மதியாக உறங்கலாம். அதுமட்டுமின்றி, ஜன்னல் இருக்கையில் விளக்குகளின் ஒளி சற்று குறைவாக படும் என்பதாலும், ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தப்படி செல்வதாலும் எளிதாக உறக்கத்திற்கு செல்ல முடியும்.

விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

தரமான ஐ மாஸ்க்கை வாங்குங்கள்

விமான பயணத்தில் தூங்குவதற்கு ஐ மாஸ்க் மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனை திரைப்படங்களில் கூட பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், விலை குறைவான ஐ மாஸ்க்குகள் சற்றுநேர பயன்பாட்டிற்கு பிறகு ஏதேனும் ஒரு பகுதியில் ஒளியை ஊடுருவ செய்துவிடும். ஆதலால் சற்று பணம் போனாலும் பரவாயில்லையென நன்கு சவுகரியமான ஐ மாஸ்க்கை, கடையிலேயே சோதித்து பார்த்து வாங்குங்கள்.

விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

குறைவாக சாப்பிடுங்கள்

பொதுவாக அதிகமாக சாப்பிட்டால் தான் நன்கு தூக்கம் வரும் என சொல்வார்கள். ஆனால் அது, வீட்டில் சற்று தூரம் நடந்துவிட்டு, நன்கு படுத்து உறங்கும்போது. விமானத்தில் அவ்வாறு நீண்ட தூரத்திற்கு நடப்பது சாத்தியமில்லை என்பதால், உண்ட உணவு விரைவில் செரிமானம் அடையாது. இதனால் உடல் நீண்ட நேரத்திற்கு விழிப்புடன் இருக்கும். ஆதலால் குறைவாக சாப்பிட பாருங்கள்.

விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

படுக்கை விரிப்பு உடன் சீட்பெல்ட்

விமானத்தில் உறங்குவதற்கு படுக்கை விரிப்பு (Bed Sheet) கொடுப்பார்கள். அதனை போர்த்திக்கொண்டு எப்படியோ உறக்கத்திற்கு சென்றுக் கொண்டிருப்பீர்கள். அந்த நேரம் பார்த்துதான் பணிப்பெண் வந்து சீட்பெல்ட் அணிந்துள்ளீர்கள் தானே? என வினவுவார்.

விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

அது அவர்களது பணி... அவர்களை குறை சொல்ல முடியாது. அத்தகைய தொந்தரவுகளை தவிர்க்க வேண்டுமெனில் சீட்பெல்ட்டை பெட் ஷீட்டிற்கு மேலாக அணிந்து உறங்குங்கள். இவ்வாறு உறங்குவதால், தேவையற்ற தொந்தரவுகளை தவிர்ப்பதுடன், பெட் ஷீட் கீழே விலகி செல்வதையும் தவிர்க்கலாம்.

விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

பயணத்திற்கு முன்பாக உடற்பயிற்சி

உடற்பயிற்சி எப்போதுமே இரவில் நன்கு உறக்கத்தை வரவழைக்கக்கூடியது. ஆகையால் விமானத்தில் நீண்ட நேரத்திற்கு எதுவும் செய்யாமல் அமைதியாக அமர்ந்து செல்லவுள்ளீர்கள் எனில், பயணத்திற்கு முன்பாக சற்று உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாதீர்கள். ஏனெனில் அது உங்களை பலவீனமடைய செய்யலாம். சில காரணங்களினால் விமான பயணத்திற்கு உங்களுக்கு சற்று எனர்ஜி தேவை.

விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

வழக்கமான விஷயங்களை செய்யுங்கள்

வீட்டில் இருக்கும்போது தூங்குவதற்காக சிலர் சில விஷயங்களை செய்வார்கள். அதாவது, புத்தகங்களை படிப்பது, பாடல் கேட்பது, திரைப்படங்களை பார்ப்பது போன்றவை. அவற்றை விமானத்திலும் செய்ய பாருங்கள். அதேபோல் வீட்டில் வழக்கமாக எந்த நேரத்தில் உறங்க செல்வீர்களோ அதேநேரத்தில் விமானத்திலும் உறங்க செல்லுங்கள்.

விமானத்தில் தூக்கம் வராமல் தவிப்பது பிரச்சனைதான்... ஜன்னல் இருக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

தண்ணீர் & காபியை தவிருங்கள்

உறங்குவதற்கு முன்னர் சற்று தண்ணீர் குடிப்பது நல்லதுதான். மருத்துவ ரீதியிலாக இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் இயற்கை உபாதைகளினால் பாதியில் எழ வேண்டியிருக்கும். அதேபோல் தண்ணீரை அருந்தாமல் படுத்தால், தாகத்தால் முழிப்பு வந்துவிடும். காபி & டீ உள்ளிட்டவை மூளையை விழிப்படைய செய்பவை, அவற்றை உறங்குவதற்கு குறைந்தது 1 மணிநேரத்திற்கு முன் அருந்தாதீர்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Can never sleep on an flight read these tips
Story first published: Saturday, August 13, 2022, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X