மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

பெண்கள் குழந்தை உண்டாகி இருக்கும் காலம் என சொல்ப்படுகிற மகிப்பேறு காலத்தில் அவர்கள் வாகனம் ஓட்டலாமா? வாகனம் ஓட்டுவதில் என்ன என்ன பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டும் என்பதை பற்றி இந்த செய்தியில் பார்

பெண்கள் குழந்தை உண்டாகி இருக்கும் காலம் என சொல்ப்படுகிற மகிப்பேறு காலத்தில் அவர்கள் வாகனம் ஓட்டலாமா? வாகனம் ஓட்டுவதில் என்ன என்ன பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டும் என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

இன்று பெண்கள் பலர் தாங்கள் சுயமாக உழைத்து முன்னேற துவங்கிவிட்டனர். அவர்களும், ஸ்கூட்டர், பைக், கார் என அனைத்து வாகனங்களையும் ஓட்ட துவங்கி விட்டனர். சொல்ப்போனால் பைக் கார் ரேஸில் கூட பல பெண்கள் சாதனை படைத்துள்ளனர். மேலும் பல பெண்கள் பைக்கில் நெடுதூர பயணம் செய்தும் சாதனைகள் செய்துள்ளனர்.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

இந்த நிலையில் பலருக்கு இருக்கும் சந்தோகம் மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா? அவர்கள் பல்வேறு அசெளகரியங்களை சந்திக்க வேண்டியது இருப்பதால் அதை சட்டம் அனுமதிக்கிறதா, அப்படி மகப்பேறு கால்த்தில் வாகனம் ஓட்டும் பெண்களுக்கு என்ன என் விளைவுகள் ஏற்படும் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்ட சட்டம் எந்த வகையிலும் தடை செய்ய வில்லை, 18 வயது பூர்த்தியடைந்து ஓட்டுநர் உரிமம் பெற்ற யார் வேண்டுமானாலும் வாகனம் ஓட்டலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் மகப்பேறு காலங்களில் வாகனம் ஓட்டுவது பெண்களுக்கு அசெளகிரியமும், ரிஸ்க்கும் உள்ளது.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

கார் ஓட்டுவதில் உள்ள சிரமங்கள்

மகப்பேறு காலத்தில் பெண்கள் கார் ஓட்டுவது என்பது சற்று அசெளகிரியம் வாய்ந்தது தான். கார் ஓட்டும் போது சற்று உடல் பருமனாக உள்ள பெண்களுக்கு சீட் பெல்ட் போட முடியாமல் போகும். இதனால் நீங்கள் கார் ஓட்டும் போது அசெளகரியம் இருக்கும். மேலும் மகப்பேறு காலத்தில் பெண்கள் காரில் ஏறவும், இறங்கவும் மிகவும் சிரமப்படுவர்.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

காரில் நீங்கள் செல்லும் போது சிறு விபத்து ஏற்பட்டாலும் உங்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி காரணமாக உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்புஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பிளைட் ஸ்பாட் பகுதிகளை திரும்பி பார்க்க சிரமமாக இருக்கும்.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

மகப்பேறு காலங்களில் வாகனம் ஓட்டினால் அவர்கள் வாகனம் ஓட்டுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது வரும் அதனால் அவர்கள் விரைவில் சோர்வடைவர். மகப்பேறு காலத்தில் சோர்வடைய கூடாது. இதனால் பலர் மகப்பேறு காலத்தில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்து வருகின்றனர்.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

மகப்பேறு காலத்தில் உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் அதிக கவனச்சிதறல் ஏற்படும் இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

ஸ்கூட்டர் /பைக் ஓட்டுவதில் உள்ள சிரமம்

ஸ்கூட்டர்/பைக் ஓட்டுவதில் சட்டப்படி மகப்பேறு பெண்களுக்கு எந்த தடையும் இல்லை. எனினும் அந்த காலகட்டத்தில் பைக் ஓட்டுவதிலும் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

இந்தியாவில் பல்வேறு ரோடுகள் குண்டும் குழியுமாக ஒரே சீரில் இல்லாமல் இருக்கும் இதனால் ரோட்டில் பல இடங்களில் வாகனம் குதித்து குதித்து செல்லும், மேலும் உங்கள் வாகனத்தின் தன்மை சரியில்லாமல் இருந்தாலும், ஸ்மூத்தான பயணம் கிடைக்காது. இதனால் உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

கார் போல கதவுகளின் கண்ணாடிகளை ஏற்றி கொண்டு வெளியில் உள்ள சத்தத்தின் அளவை குறைக்க முடியாது. சில டிராபிக்கான பகுதிகளில் 100 டெசிபெல்லிற்கும் அதிகமான அளவு சத்தம் இருக்கும் அந்த சத்தம் மகப்பேறு பெண்களுக்கு கேடுவிளைவிக்கும் சாதாரணமாக மனிதர்களுக்கே 85 டெசிபெல் வரையிலான சத்தமே பாதுகாப்பானது.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

பைக்கில் செல்லும் பல்வேறு அதிர்வுகளைகளை பெண்கள் சந்திக்க வேண்டியது இருக்கும். இது வயிற்றில் உள்ள குழந்தைக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சில நேரங்களில் அபாஷன் ஆக கூட வாய்ப்புள்ளது.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

மகப்பேறு காலங்களில் வாகனம் ஓட்டுவது என்பது அவர் அவர்களின் விருப்பம் சார்ந்தது. அதில் உள்ள ரிஸ்க்களை அவர்களால் சமாளிக்க முடியும் என்றால் அவர்கள் வாகனம் ஓட்டலாம். எனினும் அவர்களுக்கு பயணித்தின் போது பல்வேறு ஆபத்துக்கள் இருக்கிறது. மிகவும் தவிர்க்க முடியாத காரணத்தை தவிர மற்ற நேரங்களில் மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Can you drive when you are pregnant?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X