எழுத படிக்க தெரியாத ஓட்டுனர்களுக்கு பெரும் சிக்கல்... ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு இதுதான்... !!

படிப்பறிவு இல்லாதவர்கள் தொடர்பாக அதிரடியான உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மிக தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

இதன் ஒரு பகுதியாக குறைந்தபட்சம் எட்டாவது வரை படித்திருந்தால் மட்டுமே எந்தவிதமான போக்குவரத்து லைசென்ஸையும் பெற முடியும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

இந்த சூழலில் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் அல்லது திரும்ப பெற வேண்டும் என ராஜஸ்தான் மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அம்மாநில ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

Illiterate People என்ற வார்த்தையை குறிப்பிட்டு இந்த உத்தரவு ராஜஸ்தான் மாநில ஐகோர்ட் தற்போது இந்த உத்தரவை அதிரடியாக பிறப்பித்துள்ளது. Illiterate People என்றால் படிப்பறிவு இல்லாத நபர்கள் என அர்த்தம்.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் literate என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களால் படிக்க முடியும் ஆனால் எழுத தெரியாது அல்லது அதற்கு அப்படியே நேர்மாறாக எழுத முடியும் ஆனால் படிக்க தெரியாது என்றால் நீங்கள் Illeterates என கருதப்படுவீர்கள்.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

இத்தகைய நபர்களுக்கு வழங்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் அல்லது திரும்ப பெற வேண்டும் என்றுதான் ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து வாகன லைசென்ஸ் கேட்டு ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

படிப்பறிவு இல்லாத டிரைவர்களின் லைசென்ஸை ரத்து செய்வது அல்லது திரும்ப பெறுவது தொடர்பான அதிரடி உத்தரவை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் ஷர்மா பிறப்பித்தார். பாதசாரிகளுக்கும், இதர வாகன ஓட்டிகளுக்கும் படிப்பறிவு இல்லாத டிரைவர்கள் ஓர் அச்சுறுத்தல் என அவர் வர்ணித்துள்ளார்.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

படிப்பறிவு இல்லாத நபர்களுக்கு எந்தவிதமான வாகனங்களை இயக்குவதற்கான லைசென்சும் வழங்கப்பட கூடாது. ஏனெனில் பாதசாரிகள் மற்றும் இதர வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் கிட்டத்தட்ட ஒரு அச்சுறுத்தலாகவே விளங்குகின்றனர்.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

அவர்களால் எச்சரிக்கை அறிகுறிகளை புரிந்து கொள்ள முடியாது. அத்துடன் பாதுகாப்பு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகர சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பலகைகளில் எழுதப்பட்டுள்ள விஷயங்களையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என நீதிமன்றம் கருதுகிறது.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

எனவேதான் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு பலன் அளிக்கும் அதே சமயத்தில், சாலையை பயன்படுத்தும் பாதசாரிகள் உள்ளிட்ட இதர மக்களின் பாதுகாப்பையும் மோட்டார் வாகன விதிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என கோர்ட் கூறியுள்ளது.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

அத்துடன் இது தொடர்பான அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஜூலை 5ம் தேதி நடைபெறவுள்ளது.

படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதை உடனே ரத்து செய்யுங்கள்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்

ராஜஸ்தான் ஐகோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால், படிப்பறிவு இல்லாத வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 1,50,785 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cancel Or Withdraw Driving License Of Illiterate People - Rajasthan High Court. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X