ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

கார் பேட்டரிகளின் சிசிஏ ரேட்டிங் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

நமது பயணங்களை சுலபமாக்குவதில் கார்களுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே தற்போதைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கார்கள் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டன. அப்படிப்பட்ட கார்களை நாம் கவனமாக பராமரிக்க வேண்டும். கார்களை பொறுத்தவரையில் ஒரு சில பாகங்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றுவது அவசியம்.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

இதற்கு காரின் பேட்டரியை உதாரணமாக கூறலாம். உங்கள் காருக்கு புதிய பேட்டரி வாங்கும்போது, பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் வாங்கும் பேட்டரியின் சிசிஏ ரேட்டிங் எவ்வளவு? என்பதை பார்ப்பது மிகவும் முக்கியமானது. ஆனால் நம்மில் பலரும் சிசிஏ ரேட்டிங்கை கவனிப்பதில்லை.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

இன்னும் சொல்லப்போனால் நம்மில் பலருக்கும் சிசிஏ ரேட்டிங் என்றால் என்ன? பேட்டரி வாங்கும்போது அதற்கு ஏன் முக்கியத்துவம் வழங்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாது. எனவே சிசிஏ ரேட்டிங் பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு நிச்சயமாக பலன் அளிக்கும் வகையில் இருக்கும்.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

கோல்டு க்ராங்க்கிங் ஆம்ப்ஸ் என்பதைதான் சுருக்கமாக சிசிஏ (Cold Cranking Amps - CCA) என்று அழைக்கின்றனர். குளிரான சூழ்நிலைகளின்போது (Cold Temperatures) கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்வதில் பேட்டரிக்கு இருக்கும் திறனை வரையறுப்பதற்காக பேட்டரி தொழில்துறையினரால் பயன்படுத்தப்படும் ஒரு ரேட்டிங்தான் சிசிஏ.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

பொதுவாக குளிரான சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது வெப்பமான சூழல்களில் காரின் இன்ஜினை ஸ்டார்ட் செய்வது எளிமையானது. குளிர்காலங்களில் காலை நேரத்தில் காரை ஸ்டார்ட் செய்ய முடியாமல் பலர் சிரமப்படுவதை நீங்கள் பார்க்கலாம். இதுபோன்ற மோசமான அனுபவங்கள் உங்களுக்கும் கூட ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

இதுபோன்ற பிரச்னைகளை நீங்கள் தவிர்க்க வேண்டுமென்றால், அதிக சிசிஏ ரேட்டிங் கொண்ட பேட்டரிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். சிசிஏ ரேட்டிங் அதிகமாக இருந்தால் பேட்டரியின் 'ஸ்டார்ட்டிங் பவர்' (Starting Power) மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் குளிரான சூழ்நிலைகளிலும் கூட உங்கள் கார் எளிதாக ஸ்டார்ட் ஆகி விடும்.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

குறைந்தபட்சம் 7.2 வோல்ட் மின்னழுத்தத்தை பராமரிக்கும்போது 12 வோல்ட் பேட்டரி 0°F (0 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையில் 30 வினாடிகளுக்கு வழங்க கூடிய ஆம்ப்ஸ்களின் (Amps) எண்ணிக்கையை இந்த ரேட்டிங் குறிப்பிடுகிறது. எனவே ஏற்கனவே கூறியபடி சிசிஏ ரேட்டிங் அதிகமாக இருந்தால், இன்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கான பேட்டரியின் திறனும் அதிகமாக இருக்கும்.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

எனவே உங்கள் காருக்கு புதிய பேட்டரி வாங்கும்போது அதிக சிசிஏ ரேட்டிங் கொண்ட பேட்டரியை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக நீங்கள் குளிரான சூழல்களில் வசிக்க கூடியவர் என்றால், சிசிஏ ரேட்டிங்கிற்கு அதிக முக்கியத்தும் வழங்குங்கள். வெப்பமான சூழ்நிலைகளில் வசிப்பவர்களை காட்டிலும், குளிரான சூழல்களில் வசிப்பவர்கள் சிசிஏ ரேட்டிங்கை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

பேட்டரிக்கு வயது ஆக ஆக அதன் ஸ்டார்ட்டிங் பவர் குறைந்து கொண்டே வரும். எனவே அதிக ஸ்டார்ட்டிங் பவர் கொண்ட பேட்டரியை நீங்கள் வாங்குவது அவசியம். நீங்கள் புதிதாக வாங்க கூடிய பேட்டரியானது ரேட்டிங்கில் ஒரிஜினல் பேட்டரிக்கு இணையாகவோ அல்லது அதைக்காட்டிலும் அதிகமாகவோ இருக்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

ஒரிஜினல் பேட்டரியின் சிசிஏ ரேட்டிங்கை காட்டிலும் குறைவான சிசிஏ ரேட்டிங் கொண்ட பேட்டரியை நீங்கள் பொருத்தினால் செயல்திறனில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே இனி வரும் காலங்களில் உங்கள் காருக்கு புதிதாக பேட்டரி வாங்கும்போது சிசிஏ ரேட்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவீர்கள் என நம்புகிறோம்.

ஏமாந்து போயிராதீங்க... எப்பவும் அதிக CCA ரேட்டிங் இருக்கற பேட்டரியைதான் வாங்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே

குளிர் காலங்களில் காலை நேரத்தில் காரை ஸ்டார்ட் செய்ய முடியாமல் தடுமாறி கொண்டிருப்பவர்களுக்கும், குளிர் வாட்டி வதைக்கும் மலை பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும் இந்த தகவல்கள் மிகவும் முக்கியமானது. இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car battery cold cranking amps cca rating here s everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X