மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

குஜராத்தை சேர்ந்த ஒருவர், மாட்டு சாணத்தால் தனது காரை கோட்டிங் செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

மே மாதம் பிறந்து விட்டாலே இந்திய மக்களை நடுக்கம் ஆட்கொண்டு விடுகிறது. இந்த நடுக்கம் குளிரின் காரணமாக ஏற்படுவது அல்ல. மிகவும் கடுமையான கோடை வெயிலை எப்படி எதிர்கொள்ள போகிறோம்? என்ற அச்சத்தினால் ஏற்படும் நடுக்கம்தான் இது.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

தற்போது இந்தியாவில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் சுட்டெரித்து கொண்டுள்ளது. இனி வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

இதனால் மக்கள் விழி பிதுங்கி போயுள்ளனர். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிகளை தேடி அலைந்து கொண்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை மே மாதத்தில், ஏசி இல்லாமல் காரில் பயணிப்பது என்பது மிகவும் கடினமான காரியம்.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

அதுவும் நல்ல ஏசி கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். ஹீட்டை பீட் செய்ய கார் உரிமையாளர்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வரும் நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது வித்தியாசமான சிந்தனையின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

டெஃப்லான் கோட்டிங் உள்பட பல்வேறு கோட்டிங்குகள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்வதை பற்றி எங்கேயாவது கேள்விபட்டுள்ளீர்களா? நிச்சயமாக நீங்கள் கேள்விபட்டிருக்க வாய்ப்பே இல்லை.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

இதைதான் அந்த கார் உரிமையாளர் செய்துள்ளார். தனது கார் முழுவதும் மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்துள்ளார். சம்மர் சீசனில் காரை கூலாக வைத்திருப்பதற்காக அவர் இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

MOST READ: சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

ரூபேஸ் கவுரங்கா தாஸ் என்பவர் இந்த காரை படம் பிடித்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் இதுவரை பார்த்ததிலேயே மாட்டு சாணத்தின் சிறந்த பயன்பாடு இதுதான்'' என கூறியுள்ளார்.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

இந்த புகைப்படங்கள் அகமதாபாத் நகரில் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 45 டிகிரி ஹீட் டெம்ப்பரேச்சருக்கு கவுண்டர் கொடுக்கவும், சூடாவதில் இருந்து காரை பாதுகாக்கவும் ஷேஜல் ஷா என்பவர் தனது காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

MOST READ: இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அத்துடன் விவாத பொருளாகவும் மாறியுள்ளன. மாட்டு சாணத்தில் இருந்து வாசனையை காரில் பயணிப்பவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

இன்னும் சிலரோ, மாட்டு சாணத்தால் அமைக்கப்பட்டிருக்கும் லேயர் காரை எந்த அளவிற்கு கூலாக வைத்திருக்கும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர். படங்களை வைத்து பார்க்கையில் இது பழைய தலைமுறை டொயோட்டா கரொல்லா அல்டிஸ் கார் என தெரியவருகிறது.

MOST READ: மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். சம்பந்தப்பட்ட நபர் மாட்டு சாணத்தால் கார் முழுவதையும் மிக நேர்த்தியாக கோட்டிங் செய்துள்ளார். எனவே இந்த பணியில் தொழில்முறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வீடுகளின் தரை மற்றும் சுவர்களில் மாட்டு சாணத்தை பூசும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. இது குளிர்காலங்களில் வெதுவெதுப்பையும், கோடை காலங்களில் குளுமையையும் தரும் என நம்பப்படுகிறது.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

அத்துடன் மாட்டு சாணம் இயற்கையான கிருமி நாசினியாகவும், கொசுக்களை விரட்டியதற்கான ஒரு ஆயுதமாகவும் பார்க்கப்படுகிறது. எனவே கிராமப்புற பகுதிகளில் இன்றளவும் மாட்டு சாணத்தின் பயன்பாடு மிக முக்கியமானாதாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

முன்னதாக பசு மாட்டின் சிறுநீர் மற்றும் சாணத்தால் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது. சரி, இனி மாட்டு சாணம் பூசப்பட்ட டொயோட்டா கரொல்லா அல்டிஸ் காருக்கு வருவோம்.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

இதன் உண்மையான நிறம் வெள்ளையாக இருக்கலாம். டொயோட்டா கரொல்லா அல்டிஸ் காருக்கு வெள்ளைதான் மிகவும் பிரபலமான கலர் சாய்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் மாட்டு சாணம் பூசியவர்கள் உண்மையில் தங்கள் வேலையை மிக சிறப்பாக செய்துள்ளனர்.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

ரியர் பம்பர் ரெப்லெக்டர்கள், டொயோட்டா பேட்ஜ் மற்றும் லோகோ, நம்பர் பிளேட், பார்க்கிங் சென்சார்களுக்கான துளைகள் ஆகியவற்றுக்கு இடம்விட்டு சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படங்களை பார்த்தாலே அது நன்றாக தெரிகிறது.

Source: Animal Helpline-Karuna Foundation, Rupesh Gauranga Das

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car Coated With Cow Dung: Pics Viral. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X