சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

சாகசம் செய்தவாறு சென்ற இருசக்கர வாகன ஓட்டியை, அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டியின் மேம்பாலத்தில் அரங்கேறியதாக ஓர் விபத்துகுறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆனால், இந்த சம்பவம் அங்குதான் நடைபெற்றது என்பதற்கான உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

இருப்பினும், யுடியூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த கோரமான விபத்து சம்பவம் பெங்களூருவிலேயே நடைபெற்றதாக தகவல்கள் பரவிய வண்ணம் இருக்கின்றது.

சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

வீடியோவில், ஓர் இளைஞர் தான் ஆபத்தில் இருக்கின்றோம் என்பதை உணராமல், இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்தவாறு நீண்ட தூரம் பயணித்து வருகின்றார். தொடர்ந்து, அடுத்த சாகசத்தில் ஈடுபடுவதற்காக வீலிங் செய்தவாறு பைக்கில் இருந்தபடியே எழும்புகின்றார்.

சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

அந்த நேரத்தில், அதே சாலையில் அதிவேகமாக சீறிப் பாய்ந்து வந்த கார் ஒன்று, இரு சக்கர வாகனத்தின்மீது வந்த வேகத்திலேயே மோதியது. இதில், பைக் எங்கு சென்றது என்றே தெரியவில்லை. ஆனால், மறுபுறம் காரில் இருந்தவாறு இந்த சம்பவம் அனைத்தையும் படம்பிடித்துக் கொண்டிருந்த காருக்கு அருகில் பைக்கின் ஒரு சில பாகங்கள் வந்து விழுவதை மட்டும் நம்மால் காண முடிகின்றது.

சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

அதேசமயம், இந்த சம்பம் ஓர் மேம்பாலத்தின்மீது நடைபெற்றிருப்பதையும் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் உறுதி செய்கின்றன.

இந்த சம்பவம் அனைத்தும் கண் இமைக்கும் நேரத்திலேயே அரங்கேறிவிடுகின்றது. இந்த விபத்தில் பைக்கர் மற்றும் காரில் பயணித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுகுறித்த தகவலும் வெளியாகவில்லை.

சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

இந்த கோரச் சம்பவம் பைக்கரின் அஜாக்கிரதை மற்றும் காரின் அதிவேகமே முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், அந்த சாலை முழுவதும் கடும் இருட்டாக இருந்ததும் மற்றுமொரு காரணமாக பார்க்கப்படுகின்றது.

MOST READ: எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

சாலையில் இதுபோன்று சாகசத்தில் ஈடுபடுவது எப்போதும் ஆபத்தையே விளைவிக்கும். அதனை வாகன ஓட்டிகளுக்கு கடுமையாக எடுத்துக்காட்டும் வகையிலேயே இந்த வீடியோ அமைந்துள்ளது.

MOST READ: அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா? எல்லாம் ஒரு காரணமாதான்...

சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

அண்மையில்கூட ஓர் இளைஞர் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ததற்காக போலீஸாரின் பிடியில் சிக்கினார். மேலும், இதுபோன்று பொதுவெளியில் சாகசத்தில் ஈடுபடுவதை இந்திய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக எதிர்க்கின்றது.

MOST READ: அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா? எல்லாம் ஒரு காரணமாதான்...

சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

தொடர்ந்து, இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதத்தை வழங்க புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ம் வழி வகைச் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இதுவரை இல்லாத அளவில் அபராதங்கள் கடுமையாக விதிக்கப்பட்டு வருகின்றது.

பெங்களூர் நகரில் நடைபெற்றதாக பரவி வரும் கோரமான விபத்து காட்சியை நீங்கள் கீழே காணலாம்.

அவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் சில நேரங்களில் வாகனங்களின் விலையைக் காட்டிலும் அதிகமானதாக காட்சியளிக்கின்றது.

இந்த உச்சபட்ச அபராத திட்டமானது, இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வாகன விபத்துகளே இல்லாத நாடாக மாற்றும் வகையில் மத்திய அரசு இதனை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த புதிய அபராதத் திட்டம் பெரும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car Crashes Into Biker Doing Wheelie Is It Bangalore? Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X