சில வினாடிகளில் புது காரை லபக்கிய திடீர் பள்ளம்... பரபரப்பு சம்பவத்தின் வைரல் வீடியோ!

மும்பையில், பார்க்கிங் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீர் பள்ளத்தில் விழுந்து சில வினாடிகளில் மாயமானது. இந்த சம்பவத்தின் பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

சில வினாடிகளில் புது காரை லபக்கிய திடீர் பள்ளம்... வீடியோ

கடந்த சில நாட்களாக மும்பையில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறி இருக்கின்றன. மேலும், மழை வெள்ளத்தால் போக்குவரத்திலும் பெரும் பாதிப்புகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், மும்பையின் கட்கோபர் என்ற இடத்தில் பார்க்கிங் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹூண்டாய் வெனியூ கார் ஒன்று திடீரென தோன்றிய பள்ளத்தில் விழுத்து மூழ்கியது. அடுத்த சில வினாடிகளில் அந்த கார் அந்த பள்ளத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி மாயமானது.

இந்த சம்பவத்தை அருகில் உள்ள வீட்டில் இருந்து ஒருவர் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது சில வினாடிகளில் அந்த கார் திடீர் பள்ளத்திற்குள் விழுந்து மாயமாகிறது.

ஆரம்ப கட்ட தகவல்களின்படி, அந்த இடத்தில் கிணறு இருந்ததாகவும், அதனை கான்கிரீட் பலகை கொண்டு மூடப்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. அதன்மேல்தான் அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த கான்க்ரீட் பலகை உடைந்து கார் கீழே இருந்த கிணற்றுக்குள் மூழ்கியதும் தெரிய வந்துள்ளது.

நல்ல வேளையாக அந்த பள்ளம் குறிப்பிட்ட அளவில் இருந்ததால் ஒரு காரோடு போனது. அருகிலும் பல கார்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவை அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பி உள்ளன.

கார்களை வெளியிடங்களில் பார்க்கிங் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, மழை நேரங்களில் பாதுாப்பான இடங்களில் கார் பார்க்கிங் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதும் அவசியம். சாக்கடை கால்வாய், கிணறு, பழைய கட்டடங்கள், பாழடைந்த கட்டங்களின் சுவர்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள் இருக்கும் பகுதிகளை தவிர்ப்பது நல்லது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Car drowns in sinkhole in Mumbai. Watch viral video.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X