வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...? -வீடியோ!

மலிவான விலையில் காரின் பின்பக்கத்தில் ஏசி நிறுவுவது எப்படி என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...? -வீடியோ!

மனிதனுக்கு எப்படி உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் தங்குவதற்கு வீடு அவசியமோ, அதேபோன்று கார்களில் ஏசி இருப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கின்றது. அதிலும், கோடைக் காலங்களில் அவற்றின் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...? -வீடியோ!

ஆகையால், பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது தயாரிக்கும் புதிய ரக மாடல்களில் ஏசி நிறுவுவதை தவிர்ப்பதில்லை. அதேசமயம், முன் மற்றும் பின் பக்கங்களில், பயணிகளின் சொகுசான பயண அனுபவத்திற்காக ஏசி வெண்டுகள் அமைக்கப்படுகின்றன.

வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...? -வீடியோ!

ஆனால், முந்தையக் காலங்களில் வெளியான கார்களில் முன் பக்கத்தில் மட்டுமே ஏசி நிறுவப்பட்டது. அதேபோன்று, என்ட்ரி லெவல் கார்களிலும் முன் பக்கத்தில் மட்டும்தான் ஏசி நிறுவப்படுகின்றது. இதனால், பின்னிருக்கையில் அமரும் பயணிகள் மிகவும் அசௌகர்யத்தை உணரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...? -வீடியோ!

எனவே, இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும் விதமாக, மிகவும் எளிமையான வழியில் பின்பக்கத்தில் எப்படி ஏசி நிறுவுவது என்பதற்கான ஐடியாவை காரின் உரிமையாளருக்கு அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றினை ஈசி லைஃப் ஐடியாஸ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...? -வீடியோ!

இந்த வீடியோவின்படி, காரின் பின்பக்கத்தில் ஏசி அமைக்க வெறும் ரூ. 80 மட்டுமே செலவாகும் என வீடியோ வெளியிட்டுள்ள குழு தெரிவித்துள்ளது. வீடியோவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன்ஆர் காருக்குதான் பின்பக்கத்தில் ஏசி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியை பயன்படுத்தி அனைத்து கார்களின் பின்பக்கத்திலும் ஏசி வெண்டை அமைக்கலாம் என கூறப்படுகிறது.

வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...? -வீடியோ!

வீடியோவின் வழிமுறையின்படி அமைக்கப்படும் ஏசி வெண்டுகள், காரின் மத்தியில் அடிப்பகுதியாக செல்கின்றன. ஆகையால், இது எளிதில் பாதித்து விடுமோ என்ற அச்சம் தேவையில்லை. மேலும், இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ உங்களை வழி நடத்தும்.

இதற்கு மூன்று முதல் நான்கு அடி நீளமுள்ள டிரைன் பைல் பைப் மட்டுமே போதுமானது. இது ஹார்டுவேர்ஸ் ஸ்டோர்களில் மலிவான விலையில் கிடைக்கும். இந்த பைப்பை, காரின் முன்பகுதியில் கால்களுக்கு காற்று வீசும் விதமாக கொடுக்கப்பட்டுள்ள ஏசி வெண்டில் இருந்து பின் பக்க இருக்கை வரை செல்லும் வகையில் துண்டித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...? -வீடியோ!

பின்னர் அதனை பின் பக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக் கிளாடிங்கில் துளையிட்டு பொருத்த வேண்டும். மேலும், அதனை அப்படியே கிளாடிங்கின் டணல் வழியாகவே கொண்டு வந்து, கால்களுக்கு ஏசியை செலுத்தும் வெண்டுகளில் பொருத்த வேண்டும். இப்போது, ஏசியை ஆன் செய்து அட்ஜெஸ்ட் செய்தால் பின்பக்கத்திற்கும் ஏசி செலுத்தப்படுத்துவதை நம்மால் உணர முடியும்.

வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...? -வீடியோ!

மிகவும் சுலபான இந்த வழிமுறையை செய்ய ரூ. 80 மட்டுமே போதுமானது. மேலும், மலிவான விலையில் பின் பக்க இருக்கையில் அமர்பவர்களும் சொகுசான பயண அனுபவத்தை அனுபவிக்க முடியும். ஆனால், இதனை வெளியில் செய்தால் ஆயிரக்கணக்கில் பணத்தை நம்மிடம் இருந்து பிடிங்கிவிடுவார்கள். இந்த வீடியோ வழிமுறையைக் கடைபிடித்து நீங்களே செய்தால், உங்களின் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car Rear AC Vent Jugaad Done For Rs 80 –Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X