பள்ளத்தில் மூழ்கிய கார் மீட்பு!! விபத்திற்கான காரணம் என்ன தெரியுமா? நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்

மும்பையில் சமீபத்தில் பெய்த கனமழையில் ஹூண்டாய் வென்யூ கார் ஒன்று நீர் நிரம்பிய பள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியது இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் மூழ்கிய அந்த காரை பள்ளத்தில் இருந்து வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

பள்ளத்தில் மூழ்கிய கார் மீட்பு!! விபத்திற்கான காரணம் என்ன தெரியுமா? நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்

மும்பையில் காட்கோபர் மேற்கு பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் குடியிருப்பு பகுதியில் மற்ற கார்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நீல நிற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி கார் எவ்வாறு மெதுவாக நீருக்குள் மூழ்குகிறது என்பதை காட்டும் வீடியோவை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள்.

இந்த வென்யூ காருக்கு அருகாமையில் மாருதி வேகன்ஆர் உள்பட 2,3 கார்கள் நிறுத்தப்பட்டு இருப்பினும், அவற்றிற்கு எந்த விதத்திலும் சேதமில்லை. இந்த கார் மட்டுமே முன்பக்கமாக குழிக்குள் நுழைந்துள்ளது. அதாவது, காரின் முன் சக்கரங்கள் இருந்த மண் தரையில் தான் குழி ஏற்பட்டுள்ளது.

பள்ளத்தில் மூழ்கிய கார் மீட்பு!! விபத்திற்கான காரணம் என்ன தெரியுமா? நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்

யாரும் தங்களது காரை குழிக்கு அருகில் பார்க் செய்யமாட்டார்கள். அதனால் இந்த குழி நிச்சயம் மழையினாலேயே திடீரென ஏற்பட்டிருக்கும். முன் சக்கரங்கள் குழிக்குள் நுழைந்ததை அடுத்து பேலன்ஸை இழந்த கார் முற்றிலுமாக உள்ளே சென்றுவிட்டது.

பள்ளத்தில் மூழ்கிய கார் மீட்பு!! விபத்திற்கான காரணம் என்ன தெரியுமா? நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்

இதில் ஆச்சிரியம் என்னவென்றால், அந்த குழி அவ்வளவாக ஆழமாக இருந்துள்ளது. காம்பெக்ட் எஸ்யூவி கார் தான் என்றாலும், வென்யூவின் நீளம் 4 மீ இருக்கும். நல்ல வேளையாக அந்த சமயத்தில் காருக்குள் யாரும் இல்லை. ஆதலால் இந்த சம்பவத்தினால் காரை தவிர்த்து வேறு யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை.

பள்ளத்தில் மூழ்கிய கார் மீட்பு!! விபத்திற்கான காரணம் என்ன தெரியுமா? நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்

இந்த சம்பவம் குறித்து விசாரித்ததில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு சரியாக கீழே 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று இருந்துள்ளது. இந்த கிணற்றின் அடிப்பகுதி வரையில் சென்ற இந்த வென்யூ காரை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர்.

பள்ளத்தில் மூழ்கிய கார் மீட்பு!! விபத்திற்கான காரணம் என்ன தெரியுமா? நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்

கிரேனின் உதவியினால் சம்பவம் நடைபெற்ற அன்றிரவே கார் பள்ளத்தில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டுவிட்டது. ஒரு காலத்தில் பயன்பாட்டில் இருந்த இந்த கிணறு பிறகு கான்கிரீட் சிமெண்ட் மூலமாக அடைக்கப்பட்டுள்ளது.

பள்ளத்தில் மூழ்கிய கார் மீட்பு!! விபத்திற்கான காரணம் என்ன தெரியுமா? நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்

குடியிருப்புகள் அதிகமான பின்னர் அந்த பகுதி பார்க்கிங் இடமானதாகவும், தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ள அந்த பகுதி முழுவதுமாக போலீஸாரால் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பிரஹன் மும்பை மாநகராட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளத்தில் மூழ்கிய கார் மீட்பு!! விபத்திற்கான காரணம் என்ன தெரியுமா? நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்

கார் மீட்கப்பட்டாலும், மீண்டும் பயன்படுத்துவதற்கு கார் எந்த அளவில் பாதிப்படைந்துள்ளது என்பது குறித்த விபரங்கள் இல்லை. இதுகுறித்த படங்களில் பார்த்தவரையில் காரை மீண்டும் பயன்படுத்த முடியும் என்றே தோன்றுகிறது. படங்களில் நம்மால் பார்க்க முடிந்த வரையில் மீட்கப்பட்ட காரில் ஜன்னல் கண்ணாடிகள் எதுவும் உடையவில்லை.

பள்ளத்தில் மூழ்கிய கார் மீட்பு!! விபத்திற்கான காரணம் என்ன தெரியுமா? நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்

இதனால் காரின் உள்ளே தண்ணீர் புகுந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அதுமட்டுமில்லாமல் மூழ்கிய சில மணிநேரங்களிலேயே மீட்கப்பட்டதால் என்ஜினும் பெரிய அளவில் பாதிப்படைந்திருக்காது. கிணற்றின் பக்கவாட்டு சுவரில் தேய்த்ததலில் கீறல்கள் அதிகளவில் ஏற்பட்டிருக்கலாம். படங்களில் காரின் முன்பகுதி சேதமடைந்திருப்பது தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car Rescued From Sinkhole Mumbai Latest Update Of Hyundai Venue Mishap.
Story first published: Monday, June 14, 2021, 20:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X