துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

பெங்களூரில் நடைபெற்ற பாரத் பந்த்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் துணை ஆணையரின் காலின் மீது வாகனத்தை ஏற்றியதற்காக கன்னட அமைப்பு ஒன்றின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறு இந்த நிகழ்வு நடந்தது உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

டெல்லியில் போராடிவரும் விவசாயிக்களுக்காக நாடு தழுவிய பாரத் பந்த் கடந்த செப்.27ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த பந்த்தினால் பல வங்கிகள் செயல்படவில்லை. பெங்களுரில் நாடு தழுவிய பாரத் பந்த்தின் காரணமாக பல அமைப்பினர் தங்களது வாகனங்களில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஊர்வலமாக சென்றனர்.

துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

இதில் ஒரு கன்னட அமைப்பினரின் டாடா ஹெரியர் காரின் சக்கரம் எதிர்பாராத விதமாக பாதுகாப்பு பணியில் இருந்த பெங்களூர் காவல் துணை ஆணையர் தர்மேந்த்ரா மீனாவின் கால் மீது ஏறியுள்ளது. உடனடி கார் ஓட்டியவரை பிடித்து விசாரித்த போலீஸார், அவர் கன்னட சங்காதனா அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஹரிஷ் கவுடா என்பதை கண்டறிந்தனர்.

துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

பெங்களூர், டுமாகுரு சாலையில் உள்ள கோராங்குந்த்ரே பல்யா சந்திப்பிற்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறிது நேரத்தில் அந்த பகுதியையே பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த நிகழ்வை தொடர்ந்து காரை ஓட்டிவந்த ஹரிஷ் கவுடா போலீஸாரால் அழைத்து செல்லப்பட்டார். மேலும் அவரது டாடா ஹெரியர் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

ஹரிஷ் கவுடா போராட்ட அமைப்பு ஒன்றின் தலைவர் என்பதை முதலாவதாக உறுதிப்படுத்தி கொண்ட டிசிபி தர்மேந்திரா மீனா இதுகுறித்து கூறுகையில், காரின் முன் கண்ணாடியின் ஒரு பக்கம் போராட்டம் சம்பதமான சுவரொட்டியால் மறைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகள் உருவாகின.

இதனாலேயே அந்த கார் தனது காலின் மீது ஏறியதாக தெரிவித்துள்ளார். சில நொடிகளில் காரின் ஒரு சக்கரம் டிசிபி-யின் பாதி காலிற்கு மேல் ஏறியதால், அவர் காயமடைந்தார். எனினும் தற்போது அவர் சீரான உடல்நிலையில் உள்ளதால், விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

பாரத் பந்த்தினால் இந்தியா முழுவதும் முக்கிய சாலைகள் தடுக்கப்பட்டதால் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. கடந்த செப்.27ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையில், கிட்டத்தட்ட 4 மணிநேரங்கள் இந்த எதிர்ப்பு போராட்டம் நீடித்தது. போராட்டக்காரர்கள் நாட்டின் பல பகுதிகளில் ரயில்களை வழியில் நிறுத்தியதாக செய்திகள் கூறுகின்றன.

துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

இந்தியாவில், கடந்த காலங்களில் பல காவல்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளால் எதிர்பாராமல் காயமடைந்துள்ளனர். சில சமயங்களில் வேண்டுமென்றே வாகன ஓட்டி தனது வாகனத்தை போலீஸார் மீது மோதுவதும் நடைபெற்றுள்ளது. சாலையில் வேகமாக வரும் காரை நிறுத்த மற்றவர்கள் வேண்டுமானாலும் அஞ்சுவார்கள், ஆனால் போலீஸார் நேரடியாக வாகனத்திற்கு எதிராகவே சென்று மடக்குவார்கள்.

துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

காக்கி சட்டை தான் போலீஸாருக்கு மிக பெரிய அடையாளம் மற்றும் தனி தைரியத்தை வழங்கக்கூடியது. இருப்பினும் சில சட்ட விரோதிகள் போலீஸார் என்று கூட பார்க்காமல் அவர்கள் மீது வாகனத்தை மோதியுள்ளதை சில முறை வீடியோக்களில் பார்த்துள்ளோம். அந்த மாதிரியான நேரங்களில் நசுங்குவதில் இருந்து காப்பாற்றி சில போலீஸார் காரின் பொனெட்டின் மீது எகிறியது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

இருப்பினும் இவ்வாறு தப்பித்து செல்பவர் எப்படி இருந்தாலும் போலீஸாரிடம் சிக்கி கொள்வர். ஏனெனில் தற்போதைய காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து போலீஸ் குழுவிடமும் வயர்லெஸ் வாக்கி டாக்கிகல் உள்ளன. இவை போலீஸாருக்கு நிற்காமல் செல்லும் வாகன ஓட்டியை அடுத்த சந்திப்பில் பிடிக்க பெரிய உதவியாக உள்ளன.

துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

அதேநேரம் அரசாங்கமும் குற்ற செயல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபாரதம் மற்றும் செல்லான் வழங்கும் செயல்முறையை சீராக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இப்போதெல்லாம் பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் விதிமீறல்களில் ஈடுப்படுவோரின் மீது, அப்போதே எடுக்கப்படும் படங்களின் மூலமாக நடவடிக்கை எடுத்து அபராத ரசீதை அவர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை

சோதனை சம்பந்தமாக போலீஸார் வாகனத்தை நிறுத்த சொல்லும்போது, நிறுத்தாமல் செல்வது மிக பெரிய குற்றமாகும். தவறாக அபராதம் விதிக்கப்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் எப்போதும் நீதிமன்றத்தையோ அல்லது உயர் போலீஸ் அதிகாரிகளையோ அணுகலாம். என்ன இதற்கு சற்று நீண்ட செயல்முறைகள் உள்ளதே தவிர்த்து, இந்தியாவில் அரசாங்கத்தை ஒரு சாமானியன் தொடர்பு கொள்வது ஒன்றும் கஷ்டமல்ல.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Harrier runs over the foot of DCP Driver detained by police, car seized.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X