ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

ஏப். மாத ரிப்போர்ட் படி ஆட்டோ மொபைல் துறை நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. பல கார் நிறுவனங்கள் இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளனர். சில கார் நிறுவனங்கள் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன.

By Balasubramanian

2018-2019ம் நிதியாண்டிற்கான முதல் மாதம் கடந்த ஏப்., மாதத்துடன் முடிவடைந்தது. முதல் மாதமே ஆட்டோமொபல் துறையில் பல நிறுவனங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைத்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

ஏப். 2018 ம் ஆண்டின் விற்பனையை காட்டிலும் பல நிறுவனங்கள் இரண்டை இலக்க சதவீத வளர்ச்சியை அடைத்துள்ளன. மாருதி சுசூகி, டாடா, மஹேந்திரா, ஆகிய நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை அடைத்துள்ளது. அதே போல் ஃபோர்டு இந்தியா வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

ஏப்ரல் மாதம் விற்பனையான டாப் 6 கார் நிறுவனங்கள் குறித்து கீழே உள்ள பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

மாருதி சுசூகி இந்தியா

மாருதி சுசூகி நிறுவனம் கடந்த மாதம் 14.4 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. ஏப். மாதம் மட்டும் 1,72,986 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2017 ம் ஆண்டு ஏப். மாதத்தில் 1,51,215 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்திருந்தது. இப்பொழுதும அது 2016ம் ஆண்டு விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை விட 13 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

ஆக மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியை சந்தித்து வருகிறது. கமர்ஷியல் வாகனமும் 275 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு விற்பனை அதிகரித்ததால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் திறனை குறைத்துக்கொண்டது. இந்தாண்டு ஏற்றுமதியில் 19.1 சதவீதம் வீழ்ச்சியை அந்நிறுவனம் சந்தித்துள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் 46,735 வாகனங்களை விற்று 4.4 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. 2017 ஏப் மாதம் 44,758 வானகங்களையே விற்றுள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியிலும் 12 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. கடந்தாண்டு 11,610 வாகனங்களை ஏற்றுமதி செய்தது. இந்தாண்டு 13,009 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

புதிய தலைமுறை வெர்னா, மற்றும் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஐ20 ரக கார்கள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே போல் க்ரட்டா, மற்றும் கிராண்ட் ஐ10 ஆகிய கார்கள் ஒட்டு மொத்த விற்பனையில் 79 சதவீதத்தை பிடித்துள்ளன.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

மஹேந்திரா & மஹேந்திரா

மஹேந்திரா நிறுவனம் கடந்தாண்டு ஏப் மாதம் 39,417 வாகனங்களை விற்பனை செய்த நிலையில் இந்தாண்டு ஏப். மாதம் 48,097 வாகனங்களை விற்பனை செய்து 22 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

கமர்ஷியல் வாகனங்களுக்கான பிரிவில் இந்நிறுவனம் 18,963 கார்களை விற்கு 26 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. அதே நேரத்தில் 2,880 வாகனங்களை ஏற்றுமதி செய்து ஏற்றுமதியில் 88 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார் நிறுவனம் பயணிகள் வாகனத்தில் 34 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்தாண்டு ஏப். மாதம் 12,827வாகனங்களை விற்ற இந்நிறுவனம் இந்தாண்டு ஏப்ரலில் 17,235 வாகனங்களை விற்றுள்ளது. டியாகோ நெக்ஸான் ஆகிய கார்கள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

நெக்ஸான் கார்களுக்கு அதிக வரவேற்ப்பு இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது சராசரியாக மாதம் சுமார் 4,100 நெக்ஸான் கார்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது இந்நிறுவனம்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

ஃபோர்டு

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 25,149 பயணிகள் கார்களை விற்பனை செய்த ஃபோர்டு நிறுவனம் இந்தாண்டு ஏப்ரலில் 15,281 கார்களை மட்டுமே விற்பனை செய்து 40 சதவீத பின்னடைவை சந்திதுள்ளது. இந்நிறுவனத்தில் மொத்த விற்பனையிலும் 2.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

அதே போல் ஏற்றுமதியிலும் கடந்தாண்டு ஏப்ரலில் 17,531 கார்களை ஏற்றுமதி செய்த நிலையில் இந்தாண்டு வெறும் 7,853 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது. இது 55 சதவீத வீழ்ச்சியாகும்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்த ஏப்ரலில் 9,595 கார்களை மட்டுமே விற்று 35 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்தாண்டு ஏப். மாதம் 14,922 கார்களை விற்பனை செய்திருந்தது. அதே நேரத்தில் ஏற்றுமதியில் கடந்தாண்டு 442 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்த நிலையில் இந்தாண்டு 452 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2.2 சதவீத வளர்ச்சியாகும்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள் என்னென்ன?

மொத்தத்தில் ஏப்ரல் மாதம் ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சியடந்தவர்களை விட வளர்ச்சியடைந்தவர்களே அதிகம் உள்ளனர். சில கார் நிறுவனங்கள் விழ்ச்சியை சந்தித்தற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நம்பிக்கை, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ், சர்வீஸிற்கான செலவு, தயாரிப்பு தரம் உள்ளிட்ட காரணங்களாலேயே விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top Selling Cars In India For April 2018: Maruti Still Leads; Honda Cars India Tumbles.Read in Tamil
Story first published: Wednesday, May 2, 2018, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X