சென்னையை அடுத்து புனேவுக்கு செல்லும் பிரபல கார் நிறுவனம்: காரணம் தெரிந்தால் ஆச்சரியம் அடைவீர்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் கார்களைத் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனைச் செய்து வருகின்றது. இதற்காக பல நாடுகளில் கார் தயாரிப்புத் தொழிற்சாலையையும் அந்த நிறுவனம் ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 1903ம் ஆண்டு ஹென்றி ஃபோர்டு என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

ஃபோர்டு பஸ் சர்வீஸ்

இந்நிலையில், ஃபோர்டு நிறுவனம் கால் டாக்ஸி சேவையிலும் களமிறங்கியுள்ளது. ஆனால், இது மற்ற கமர்ஷியல் டாக்ஸி சேவையைப் போன்று அல்லாமல், அலுவலக தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் வகையில் இயங்கி வருகிறது. அதன்படி, பேருந்து சேவையை வழங்கும் ஃபோர்டு நிறுவனம், பணியாளர்களை அலுவலகம் கொண்டுச் செல்வது, மீண்டும் அவர்களைச் சேர வேண்டிய இடத்தில் டிராப் செய்வது உள்ளிட்ட பணியை செய்து வருகிறது.

மொபைல் போன் ஆப் மூலம் அளிக்கப்படும் இந்த சேவையை 'ஆபிஸ் ரைட்' என்னும் பெயரில் இந்த நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக ஹெச்ஐஏ என்ற ஐடி நிறுவனத்துடன் ஃபோர்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஃபோர்டு பஸ் சர்வீஸ்

நகர் பகுதிகளை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த திட்டம் தற்போது சென்னையில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் இந்த சேவையை, ஃபோர்டு நிறுவனம் ஆரம்பத்தில் 100 மினி பஸ்களுடன் ஆரம்பித்தது. ஆனால், தற்போது அது 450 பஸ்களாக அதிகரித்து உள்ளது என ஃபோர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்த சேவையை ஃபோர்டு நிறுவனம் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஃபோர்டு ஸ்மார்ட் மொபிலிட்டியின் இந்திய இயக்குனர் மஹாதேவன் ராமமூர்த்தி கூறியதாவது,

"ஆரம்பத்தில் சென்னையின் சிறுசிறு பகுதிகளை மட்டுமே கவர் செய்யும் வகையில் தொடங்கப்பட்ட இந்த சேவை, தற்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், இந்த சேவையில் நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஃபோர்டு பஸ் சர்வீஸ்

அலுவலகம் சார்ந்து செய்யப்படும் இந்த சேவையில், அதி நவீன பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு, பேருந்துகளில், வைபை வசதி, சொகுசான இருக்கை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அலுவலக பஸ் எந்த இடத்தில் உள்ளது என்ற தகவலை பணியாளர்கள் அறிந்துகொள்ள முடியும். மேலும், பஸ்ஸை தவறவிடும் அவலமும் தவிர்க்கப்படும்.

இந்த சேவையைப் பெற ஃபோர்டின் 'ஆபிஸ் ரைட்' ஆப் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். அவ்வாறு, ஒரு நாள், மாதம் அல்லது அதற்கும் மேலான நாட்களுக்கு இதில் விண்ணப்பித்துக்கொள்ள முடியும்.

ஃபோர்டு பஸ் சர்வீஸ்

மற்ற டாக்ஸி சர்வீஸில் இருந்து சற்று மாறுபடும் வகையில், எங்கள் சேவையில் கேன்சல் உள்ளிட்ட சில கட்டணங்களை ரத்து செய்துள்ளோம். வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மேலும் பல்வேறு சிறப்பு சலுகைகளும் இதில் வழங்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, சிறப்பு சேவையை வழங்கும் விதமாக சில டேட்டாக்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். அதன்படி, அனைத்து ரக மாடல் வாகனங்களையும் இந்த சேவையில் பயன்படுத்த உள்ளோம். மேலும், இந்த சேவையை மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக புனே ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் கார்பரேஷன் லிமிடெட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்". என்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Carmaker Ford Offers Shared Mobility To Techies. Read In Tamil.
Story first published: Thursday, February 14, 2019, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X