அபிமான கிரிக்கெட் நட்சத்திரங்களின் கார் ஷெட் ரவுண்டு-அப்

Dhoni
உலககோப்பை கிரிக்கெட், அடுத்து வர இருக்கும் ஐபிஎல் போட்டிகள் என கிரிக்கெட் வீரர்கள் படு பிசியாக இருக்கும் இந்த நேரத்தில், அவர்கள் வைத்திருக்கும் கார்களை பற்றி அறிந்துகொள்ளும் நோக்கில் ஒரு ரவுண்டு வந்தோம். ஒவ்வொருவர் வீட்டு ஷெட்டிலும் நின்ற கார்களை பார்த்தவுடன், அவர்களுக்கு கிரிக்கெட் மீது மட்டுமல்ல கார்கள் மீதும் இருக்கும் அலாதி ஆர்வத்தை கண்கூடாக காண முடிந்தது.

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, கார் ஓட்டுவதிலும் சச்சின் மாஸ்டர் பிளாஸ்டர். அதிவேகமாக கார் ஓட்டுவது சச்சினுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு என நண்பர்கள் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டு ஷெட்டில் நின்ற கார்களை பார்த்தவுடன் நமக்கே அவரது அந்த ஆர்வத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் அடித்த 29 சதங்கள் சாதனையை சமன் செய்ததற்காக ஃபியட் நிறுவனம் பரிசாக வழங்கிய ஃபெராரி 360 மொடெனா கார் சச்சின் வீட்டு கார் ஷெட்டை பளிச்சென அலங்கரிக்கிறது. இந்த காரில் பயணம் செய்வதென்றால் சச்சினுக்கு கொள்ளை ஆசை. ஓய்வு நேரங்களில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் இந்த காரில் ஒரு ரவுண்டு வருவதை சச்சின் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இதுதவிர,சார்ஜா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்ததற்காக பரிசாக வழங்கப்பட்ட ஒபல் அஸ்ட்ரா மற்றும் சில்வர் கலர் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் சச்சின் கார் ஷெட்டுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

கேப்டன் தோனி

ரூ.ஒரு கோடி மதிப்புடைய ஹம்மர் காரை இறக்குமதி செய்த தோனி டெல்லியிலிருந்து லக்னோ வழியாக தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு அவரே ஓட்டி வந்து அசத்தினார். இதுதவிர, மிட்சுபிஷி பஜேரோவும் ஷெட்டில் நிற்கிறது. என்னதான் விலைமதிக்க முடியாத கார்கள் இருந்தாலும், ஸ்போர்ட்ஸ் பைக்கில் செல்வதே தோனிக்கு அலாதி பிரியம். எனவே, ஹார்லி டேவிட்சன், யமஹா 650 ஸ்போர்ட்ஸ்பைக் மற்றும் கவாசாகி நிஞ்சா என விதவிதமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளை சாரை சாரையாக வாங்கி ஷெட்டில் நிறுத்தி மிரள வைத்திருக்கிறார்.

ராகுல் டிராவிட்

டிராவிட் வீட்டு ஷெட்டில், ஹூண்டாய் டுஸ்கான் கார் கம்பீரமாக நிற்கிறது. 2004 ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்ட டிராவிட்டுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசாக வழங்கிய கார் அது என்பது கூடுதல் சிறப்பு.

யுவராஜ்சிங்

யூவீ வீட்டு ஷெட்டையும் விதவிதமான கார்கள் அலங்கரிக்கின்றன. பிஎம்டபிள்யூ எம்-5 மற்றும் எம்3 மாடல்களும், மெர்க் மற்றும் போர்ச்சே 911 கார்கள் ஒய்யாரமாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. இதில்,போர்ச்சே 911 கார், ட்வென்ட்டி 20 உலககோப்பை போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விலாசியதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) அப்போதைய துணைத் தலைவராக இருந்த லலித் மோடி யூவீக்கு பரிசாக வழங்கியது.

இவர்களை தவிர, வீரேந்திர சேவாக் வீட்டில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரும், கவுதம் கம்பீர் வீட்டில் டொயோட்டோ கரோல்லா, மாருதி எஸ்எக்ஸ்-4 மற்றும் ஹூண்டாய் சான்ட்ரோ கார்களும், ஹர்பஜன்சிங் ஷெட்டில் சில்வர் கலர் ஹம்மர் மற்றும் ஃபோர்டு என்டவர் கார்களும் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது.

Most Read Articles

English summary
Along with their love for the game, Indian cricketers are known for their craze for cars. Cricket being a glamour sports is always in limelight for one or the other reason. Cricketers are believed to get enchanted by beautiful and attractive things whether they are Bollywood heroines or seducing cars.
Story first published: Thursday, March 24, 2011, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X