2023ல் இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்.... அதிலும் ஷேர் ரைடிங் செய்யலாம்...

வரும் 2023ம் ஆண்டிற்குள் இந்தியா உட்பட 5 நாடுகளில் பறக்கும் கார்களை களம் இறக்க உபேர் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது எந்த நகரத்தில் அதை செயல்பாட்டிற்கு கொண்டு

By Balasubramanian

வரும் 2023ம் ஆண்டிற்குள் இந்தியா உட்பட 5 நாடுகளில் பறக்கும் கார்களை களம் இறக்க உபேர் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது எந்த நகரத்தில் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என்ற ஆய்வு நடப்பதாகவும், பறக்கும் கார்கள் டாக்ஸி பயன்பாட்டிற்காக வரும் போது அதில் ஷேர் ரைடிங் உம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2023 இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்

உபேர் நிறுவனம் இன்னும் 5 ஆண்டுகளில் பறக்கும் கார்களை தயாரித்து அதன் மூலம் டாக்ஸிகளை இயக்குவதற்காக திட்டமிட்டு தற்போது பறக்கும் காருக்கான தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.

2023 இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்

2023ம் ஆண்டிற்குள் அந்நிறுவனம் பறக்கும் கார்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது. தற்போது அமெரிக்கா, பாரீஸ், மற்றும் பிரான்ஸ் போன்ற நகரங்களில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனம் தற்போது இந்தியாவையும் அந்த பட்டியலில் சேர்த்து தெரியவந்துள்ளது.

2023 இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்

இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில் :"கடந்த பிப்., மாதம் உபேர் நிறுவனத்தின் சிஇஓ வை சந்தித்த போது பறக்கும் கார்களை தயாரிப்பது குறித்தும், அதை இந்தியாவில் செயல்படுத்துவது குறித்தும் பேசினோம். அந்நிறுவனம் முதலில் 5 நாடுகளில் இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதில் இந்தியாவும் அடங்கும். " என கூறினார்.

2023 இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்

முன்னதாக கடந்த பிப்., மாதம் சின்ஹா உபேர் நிறுவன சிஇஓவை சந்தித்த பின்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பறக்கும் கார்கள், மற்றும் எதிர்கால கமர்ஷியல் ஏர் டிராவல் குறித்து பேசியதாக பதிவிட்டிருந்தார்.

2023 இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்

பறக்கும் கார்கள் என்பது பயணிகளை ஏற்றிக்கொண்டு பறக்கும் வகையிலான ஒரு ட்ரோன், இது ஹெலிகாப்டர் போல நேராக மேல டேக் ஆப் செய்யவும், கீழே லோண்ட் ஆகவும் முடியும் இது முழுவதும் எலெக்ட்ரிக் திறன் மூலம் இயங்ககூடியது.

2023 இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்

இதனால் இந்த பறக்கும் டாக்ஸிகள் இயங்கும் போது அதில் இருந்து மெஷின் செயல்படும் சத்தம் மிக குறைவாக இருக்கும். பறக்கும் போது மட்டும் மிக குறைவான சத்தம் வரும்.

2023 இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்

தற்போது அந்நிறுவனம் உருவாக்கி வரும் இந்த பறக்கும் கார் சுமார் 250-300 கி.மீ வேகத்தில் சுமார் 2000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 100 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் திறன் கொண்டதாக இந்த பறக்கும் கார்கள் வடிவமைக்கப்படுகிறது.

2023 இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்

இதற்கிடையில் பறக்கும் ட்ரோன்களுக்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகளை களம் இறக்க மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் சின்ஹார் தற்போது வெளியாகியுள்ள ட்ரோன் குறித்த சட்டம் தற்போதைய சூழ்நிலைக்கானது மட்டுமே எதிர்காலத்தில் உபேரோ அல்லது உபேர் போன்று வேறு ஒரு நிறுவனமோ தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அரசை அனுகினால் அதற்கு தகுந்தார் போல் சட்டதிருத்தங்கள் செய்யப்படும் பறக்கும் டாக்ஸிகளுக்கு வழிவிடப்படும். என கூறினார்.

2023 இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்

மேலும் அவர் கூறுகையில் தற்போது இந்தியாவில் எந்த நகரில் இதை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. பெரும்பாலும் டிராபிக் அதிகமாக உள்ள பகுதிகளில் செயல்படுத்த முடிவு செய்ப்படும் எனவும் மக்கள் இந்த பறக்கும் டாக்ஸியை பயன்படுத்தி சுமார் 30-50 கி.மீ. வரை மற்ற போக்குவரத்தை விட வேகமாக பயணிக்க முடியம். இந்தியாவில் தற்போது ட்ரோன்கள் குறித்து இருக்கும் சட்டம் இந்த பறக்கும் கார்கள் வந்தால் விரைவில் மாற்றியமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

2023 இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்

தற்போது உபேர் நிறுவனம் இந்தியாவில் இந்த திட்டத்தை செயல்படுத்த பெரிய மெட்ரோபோலிடன் நகராகவும், சுமார் 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் வாழும் நகராகவும், ஒரு சதுர மைலுக்கு 2000 பேர் வாழும் நகராகவும், குறிப்பாக ஏர் டிராவலுக்கு சாதகரமான நகராகவும் பார்த்து வருகிறது. மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது அதிலும் ஷேர் ரைடிங் சர்வீஸ் வசதி இருக்கும் எனவும், இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் பறக்கும் காரை டாக்ஸி போல பயன்படுத்தலாம் எனவும் நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Cars will fly in india by 2023, UBER planning to bring Pool Ride on that. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X