காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

காரில் சன்ரூஃப் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

கார்கள் இன்று நவீனமாக மாறி விட்டன. இதன் ஒரு பகுதியாக நிறைய கார்களில் சன்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது வரும் கார்களில் மின்னணு முறையில் இயக்கப்படும் சன்ரூஃப்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் பழைய கார்களில் மேனுவலாக இயக்கப்படும் சன்ரூஃப்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் தற்போது வரும் கார்களில் பல்வேறு வடிவங்கள், பல்வேறு அளவுகள் மற்றும் பல்வேறு ஸ்டைல்களில் சன்ரூஃப்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் சன்ரூஃப் இருக்கும் கார்களை வாங்குவது நல்லதா? அல்லது சன்ரூஃப் இல்லாத கார்களை வாங்குவது நல்லதா? என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. அந்த குழப்பத்திற்கு இந்த செய்தியில் நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கிறோம்.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆம், காரில் சன்ரூஃப் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளையும், தீமைகளையும் இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம். இதை பொறுத்து நீங்கள் சன்ரூஃப் உள்ள காரை வாங்குவதா? அல்லது சன்ரூஃப் இல்லாத காரை வாங்குவதா? என தெளிவாக முடிவு செய்ய முடியும். சரி, வாருங்கள் நாம் இனி செய்திக்குள் செல்வோம்.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

முதலில் சன்ரூஃப் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்த்து விடலாம். சன்ரூஃப் இருந்தால், காருக்கு நல்ல லுக் கிடைக்கும். இது முதல் நன்மை. அத்துடன் நீங்கள் கார் ஓட்டும்போது, புத்துணர்ச்சியான காற்று கேபினுக்கு உள்ளே வருவதற்கு சன்ரூஃப் அனுமதிக்கிறது. இது உங்கள் மனதை இதமாக வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் நீங்கள் ஜன்னல்களை திறந்து வைக்க முடிவு செய்தால், வேகமாக வீசும் காற்றின் சத்தம் பிரச்னைகளை ஏற்படுத்தும். நீங்கள் சக பயணிகளுடன் பேசுவதில் கூட பிரச்னைகள் ஏற்படலாம். இதுபோன்ற சூழல்களில் சன்ரூஃப் நல்ல மாற்றாக இருக்கும். நீங்கள் சன்ரூஃப்பை திறந்து வைப்பதன் மூலம் இரைச்சல் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் கேபின் காற்றோட்டமாகவும் இருக்கும்.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஜன்னல்களை திறந்து வைப்பதன் மூலம் ஏற்படும் சத்தத்தை விட, சன்ரூஃப்பை திறந்து வைப்பதால் ஏற்படும் சத்தம் குறைவான என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சன்ரூஃப் என்பது உங்கள் காரின் மேற்கூரையில் இருக்கும் கண்ணாடி அமைப்பாகும். மழை பெய்யும்போது அந்த கண்ணாடியில் மழை துளிகள் விழுவதை கேபினில் இருந்து பார்ப்பது உங்கள் மனதிற்கு இதமான அனுபவத்தை வழங்கும்.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் சன்ரூஃப் இருப்பதால் உங்கள் காரின் மதிப்பு உயரும். குறிப்பாக நீங்கள் அதனை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடிவு செய்தால், அப்போது நல்ல விலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இனி காரில் சன்ரூஃப் இருப்பதால் உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பார்க்கலாம்.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

சன்ரூஃப் உடன் கூடிய புதிய காரை வாங்கும்போது நீங்கள் அதனை அடிக்கடி பயன்படுத்துவீர்கள். ஆனால் கொஞ்ச நாட்கள் கடந்த பிறகு சன்ரூஃப் இருப்பதையே மறந்து விடுவீர்கள். அனைவரையும் அப்படி கூற முடியாது என்றாலும், பெரும்பாலானவர்கள் இப்படிதான் நடந்து கொள்கின்றனர். குறிப்பாக அதிக வெப்ப நிலை இருக்கும் நகரங்களில் சன்ரூஃப்பின் பயன்பாடு மிகவும் குறைவாகவே இருக்கும்.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் நீங்கள் அதிவேகத்தில் பயணிக்கும்போது சன்ரூஃப் திறந்து இருந்தால், அது காரின் ஏரோடைனமிக்ஸில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அத்துடன் சன்ரூஃப் அதிக எடை கொண்டவை என்பதால், அது காரின் மைலேஜில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ரெகுலர் சன்ரூஃப்பின் எடை 25 முதல் 35 கிலோ வரை இருக்கும். அதே சமயம் பனரோமின் சன்ரூஃப்பின் எடை 90 கிலோ வரை இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சன்ரூஃப் என்பது காரின் மேற்கூரையில் இருக்கும் கண்ணாடி என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். இது கண்ணாடி என்பதால் உடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அப்படி உடையும்பட்சத்தில், அதை சரி செய்வதற்கு அதிக செலவு ஆகும். அதேபோல் உங்கள் காருக்கு வயது ஆக ஆக, சன்ரூஃப்பில் கசிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மழை பெய்யும் சமயங்களிலும், நீங்கள் காரை கழுவும் சமயங்களிலும் பிரச்னைகள் ஏற்படலாம். கார் புதியதாக இருக்கும்போதுதான், சன்ரூஃப் எந்த பிரச்னையும் இல்லாமல் நன்றாக வேலை செய்யும்.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் காருக்கு வயது ஆக ஆக சன்ரூஃப்பில் பிரச்னைகள் ஏற்படலாம். அந்த சமயத்தில் நீங்கள் காரை விற்பனை செய்ய நினைத்தால், சன்ரூஃப் பழுது காரணமாக அதில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சன்ரூஃப் பழுது இல்லாமல் இருந்தால் நல்ல விலை கிடைக்கும் என்பது எவ்வளோ உண்மையோ, அதே அளவிற்கு இதுவும் உண்மைதான்.

காரில் சன்ரூஃப் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பதை போல், சன்ரூஃப்பிலும் நிறை, குறைகள் உள்ளன. எனவே சன்ரூஃப் உள்ள காரை வாங்குவதா? அல்லது வேண்டாமா? என்பது முழுக்க முழுக்க உங்கள் தேவைகளை பொறுத்தது. உங்களுக்கு தேவை என்றால், நிச்சயமாக சன்ரூஃப் உள்ள காரை வாங்குங்கள். சன்ரூஃப் உள்ள காரை வாங்குவது பிரச்னை என்றால் விட்டு விடுங்கள். இது முழுக்க முழுக்க உங்கள் தேவைகளை பொறுத்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cars with a sunroof feature pros and cons
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X