இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக காஸ்ட்ரோல் எஞ்ஜின் ஆயில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

பிரபல காஸ்ட்ரோல் நிறுவனம் இருசக்கர வாகனங்களுக்கான எஞ்ஜின் ஆயிலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக காஸ்ட்ரோல் எஞ்ஜின் ஆயில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

வாகனங்களுக்கான ஆயிலை உற்பத்தி செய்து வரும் காஸ்ட்ரோல் நிறுவனம், இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக சிந்தடிக் ஆயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. பவர்1 அல்டிமேட் எனும் ஆயிலை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆயில் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக காஸ்ட்ரோல் எஞ்ஜின் ஆயில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

அதாவது, எஞ்ஜின் திறனை சிறப்பானதாக்க இந்த ஆயில் உதவும் என கூறப்படுகின்றது. கைதேர்ந்த மற்றும் இருசக்கர வாகன ஆர்வலர்களின் பரிந்துரைகளின்படி இந்த புதிய ஆயில் தயாரிக்கப்பட்டிருப்பதாக காஸ்ட்ரோல் தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக காஸ்ட்ரோல் எஞ்ஜின் ஆயில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

புதிய காஸ்ட்ரோல் பவர்1 அல்டிமேட் ஆயிலின் மூலம் பல விதமான பலன்களை அனுபவிக்க முடியும் என கூறப்படுகின்றது. சிறந்த ஆக்சலரேஷன், பாதுகாப்பு, ஸ்மூத்தான ரைடிங் அனுபவம், எஞ்ஜின் வெப்பத்தை தணித்தல் மற்றும் நீடித்த செயல்திறன் உள்ளிட்ட ஐந்து முக்கியமான பலன்களை புதிய பவர்1 அல்டிமேட் ஆயில் மூலம் பெற முடியும்.

இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக காஸ்ட்ரோல் எஞ்ஜின் ஆயில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

பன்முக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே பின்னரே இந்த தகவல்களை காஸ்ட்ரோல் உறுதிப்படுத்தியுள்ளது. காஸ்ட்ரோலின் அனைத்து விற்பனையகங்களிலும் இந்த ஆயில் விற்பனைக்குக் கிடைக்கும். இதுமட்டுமின்றி சில ஆன்லைன் தளம் மற்றும் பெட்ரோல் பங்க்குகளிலும் புதுமுக ஆயில்கள் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன.

இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக காஸ்ட்ரோல் எஞ்ஜின் ஆயில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

புதிய ஆயில் பன்முக தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. அவை, 10டபிள்யூ40, 10டபிள்யூ50, 15டபிள்யூ50 மற்றும் 20டபிள்யூ50 ஆகும். வெவ்வேறு அடர் தன்மைகளின் அடிப்படையிில் இது அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆயில்கள் வழக்கமான மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களுக்கானதாகும்.

இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக காஸ்ட்ரோல் எஞ்ஜின் ஆயில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ஆகையால், பிரத்யேகமாக ஸ்கூட்டருக்கென தனி ஆயிலையும் காஸ்ட்ரோல் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. அது 5டபிள்யூ-40 எனும் கிரேடில் கிடைக்கும். இந்த ஆயில்கள் 800 மில்லி லிட்டரில் தொடங்கி 1 லிட்டர் வரையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோன்று ரூ. 474 தொடங்கி ரூ. 594 வரையிலான விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Castrol Power1 Ultimate Two-Wheeler Engine Oil Launched in India. Read In Tamil.
Story first published: Tuesday, December 1, 2020, 17:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X