Just In
- 1 hr ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 8 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 10 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 13 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- News
அரசியல்வாதிகளை விடாமல் துரத்தும் கொரோனா..பல்லடம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு தொற்று உறுதி!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?
கோபக்கார பூனையால் வானில் வட்டமடிக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் தரையிறங்கிய சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சம்பவம்குறித்த மேலும் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

கோபக்கார பூனை ஒன்றால் வானில் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களியே விமானம் ஒன்று தரையிறங்கியதாக வியத்தகு தகவல் ஒன்று இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றது. சூடான் நாட்டிலேயே இந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

கத்தாரின் தலைநகரான தோஹாவில் (Doha) இருந்து சூடான் தலைநகர் கர்டூம் (Khartoum)-க்கு சென்ற விமானமே கோபக்கார பூனையால் மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கியிருக்கின்றது. சம்பவத்தின்போது பூனை ஒன்று காக்பிட் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இதையறியாத பைலட்டுகள் விமானத்தை கர்டூம் நோக்கி பறக்க ஆரம்பித்திருக்கின்றனர். விமானம் வானில் பறக்க ஆரம்பித்த அரை மணி நேரத்தில், விமானத்திற்குள் பூனை இருப்பதை விமானிகள் உணர்ந்திருக்கின்றார். அதனை உடனடியாக வெளியேற்றவில்லை என்றால் நிலைமை சிக்கலாகிவிடும் என்பதை உணர்ந்த விமானி, சற்று சுறு சுறுப்பாக அதனை வெளியேற்ற ஆரம்பித்திருக்கின்றார்.

ஆனால், பூனையே விமானி முகம் தெரியாத நபர் என்பதால் அவரை பதிலுக்கு தாக்க தொடங்கியிருக்கின்றது. இதில் விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே, பூனையை அப்புறப்படுத்துவதற்காக புறப்பட்ட இடத்திற்கே விமானிகள் மீண்டும் விமானத்தை தரையிருக்கின்றனர்.

கடைசி வரை பூனை எப்படி காக்பிட் பகுதிக்குள் நுழைந்தது என்பது பற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிந்த விமான நிலைய போலீஸார், சம்பவம்குறித்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். பூனையையும் தற்போது அவர்கள் (போலீஸார்) வசமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோபக்கார பூனையால் விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து, நெட்டிசன்கள் சிலர் 'பூனையால் எமர்ஜென்சி லேண்டிங்கா!' என நக்கலடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

விமானத்தை பார்க் செய்திருந்தபோதோ அல்லது தூய்மைப்படுத்தும் போதோ பூனை விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சம்பவத்திற்கு முந்தைய தினம் இரவு ஹன்கர் விமான நிலையத்தில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கே, பூனை விமானத்திற்குள் ஏறியிருக்கும் என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும், யாராலும் துள்ளியமான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.