தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

பிரபல நிறுவனம் ஒன்று தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

உலகின் மிக பழமையான மற்றும் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சியட் (CEAT). சியட் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு 95 ஆண்டுகள் கடந்து விட்டன. இத்தாலியில் உள்ள துரின் நகரில், கடந்த 1924ம் ஆண்டு சியட் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

ஆனால் இந்தியாவை சேர்ந்த ஆர்பிஜி குழுமம், கடந்த 1982ம் ஆண்டு சியட் நிறுவனத்தை கைப்பற்றி விட்டது. தற்போது ஆர்பிஜி குழுமத்தின் ஒரு அங்கமாக சியட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ளது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

டூவீலர்கள், கார்கள், லாரிகள், பேருந்துகள், இலகு ரக வர்த்தக வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஸாக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களுக்கு சியட் நிறுவனம் டயர்களை தயாரித்து வருகிறது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

தற்போதைய நிலையில் இந்தியாவின் முக்கியமான டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக சியட் திகழ்ந்து வருகிறது. இதுதவிர சர்வதேச மார்க்கெட்டிகளிலும் சியட் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 165 மில்லியனுக்கு மேற்பட்ட டயர்களை சியட் உற்பத்தி செய்கிறது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

இந்தியாவில் தற்போதைய நிலையில் 5 இடங்களில் சியட் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அவை நாசிக், பந்தப், அம்பெர்நாத், நாக்பூர் (இவை நான்கும் மஹாராஷ்டிர மாநிலம்) மற்றும் ஹலோல் (குஜராத்) உள்ளிட்ட இடங்களில் இயங்கி கொண்டுள்ளன.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

இதுதவிர இலங்கையிலும் கூட சியட் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. சியட் தொழிற்சாலைகள் ஒரு நாளைக்கு 800 டன் டயர்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவையாக உள்ளன. இந்த சூழலில் தமிழக தலைநகர் சென்னைக்கு அருகே புதிய டயர் தொழிற்சாலை ஒன்றை அமைக்க சியட் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

சென்னையின் புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் அருகே சியட் நிறுவனத்தின் புதிய டயர் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசுடன் சியட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

புதிய தொழிற்சாலைக்காக சியட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் கட்டமாக (First Phase) 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

முதல் பேஸ் முடிவில் 1,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பேஸ் தொழிற்சாலை ஒரு நாளைக்கு 200 முதல் 250 டன்கள் வரையிலான டயர்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

சென்னை அருகே புதிதாக அமையவுள்ள சியட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் கார்களுக்கான ரேடியல் டயர்களை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் அமையவுள்ள சியட் நிறுவனத்தின் 6வது தொழிற்சாலையாக சென்னை பிளாண்ட் இருக்கும்.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

இதுதவிர தமிழ்நாட்டில் ''ட்ரக் சர்வீஸ் ஹப்'' (Truck Service Hub) ஒன்றை உருவாக்கும் விஷயத்திலும் சியட் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதால், தமிழகத்தில் முதலீடு குவிவது நல்ல விஷயமே. ஏற்கனவே ''ஆசியாவின் டெட்ராய்டு'' என குறிப்பிடப்படும் அளவிற்கு சென்னையில் ஹூண்டாய் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிறைந்துள்ளன. இந்த சூழலில் ஆட்டோமொபைல் சார்ந்த முதலீடுகள் தொடர்ந்து குவிந்து வருவது சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
CEAT To Set Up New Tyre Factory Near Chennai In Tamil Nadu. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X