6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

நாட்டின் 6 மாநிலங்களில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படுகிறது.

நாட்டின் 6 மாநிலங்களில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழக அரசு வாட் வரியை குறைக்கும் பட்சத்தில், இங்கும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அனைத்து கண்களும் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே உற்று நோக்கி கொண்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இதுதவிர மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரிகளும் பெட்ரோல், டீசல் ஆகியவை அதிக விலையில் விற்பனையாவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. தற்போதைய நிலையில் மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படுகின்றன.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

எனவே பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் அதற்கும் மத்திய அரசு செவிமடுக்கவில்லை. எனவே மிக அதிகப்படியான விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டுள்ளது.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இந்த சூழலில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று (அக்டோபர் 4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்து வரும் கலால் வரியில் இருந்து லிட்டருக்கு 1.50 ரூபாய் குறைக்கப்படுகிறது.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இதுதவிர பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு 1 ரூபாயை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது'' என்றார். ஆக மொத்தம் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு லிட்டருக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மேலும் கூறுகையில், ''விற்பனை வரி அல்லது வாட் வரிகளை குறைப்பதன் மூலமாக பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு மேலும் ரூ.2.50 வரை குறைக்கும்படி மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது'' என்றார்.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

மத்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், அஸ்ஸாம் மற்றும் திரிபுரா ஆகிய 6 மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் விலையை ஒரு லிட்டருக்கு மேலும் ரூ.2.50 குறைப்பதாக அறிவித்துள்ளன.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இதனால் இந்த 6 மாநிலங்களிலும், இன்று நள்ளிரவு முதல், பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.5 குறைகிறது. இந்த 6 மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இந்த சூழலில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்ட் டீசல் விலையில் மட்டும் மேலும் 2.50 ரூபாயை குறைப்பதாக அறிவித்துள்ளது. எனவே அங்கு டீசல் விலை மட்டும் ரூ.5 குறைகிறது. ஆனால் ஜார்கண்ட் மாநில அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கவில்லை.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

எனவே மத்திய அரசு குறைத்த ரூ.2.50 மட்டுமே ஜார்கண்ட் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. இதனிடையே பாஜக ஆட்சி செய்து வரும் இதர மாநிலங்களும், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பான அறிவிப்பை வெகு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

அதே நேரத்தில் பாஜக ஆட்சி செய்யாத இதர மாநிலங்களின் நிலை குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆனால் இதில் கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க முடியாது என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

கர்நாடக அரசு சமீபத்தில்தான் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 வரை குறைத்தது. எனவே கர்நாடக அரசும் மேலும் விலையை குறைக்குமா? என்பது சந்தேகமே. இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்க போகிறது? என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (அக்.4) ஒரு லிட்டர் பெட்ரோல் 87.33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 79.79 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

மத்திய அரசு வரியை குறைத்துள்ளதால், இந்த விலையில் இருந்து ரூ.2.50 குறைவது உறுதியாகியுள்ளது. தமிழக அரசு தனது வரிகளை குறைத்து கொண்டால், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இந்த சூழலில் மத்திய அரசு விலையை குறைத்திருப்பது கண் துடைப்பு எனவும், பதற்றத்தில் எடுத்த முடிவு எனவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கலால் வரியை மிக அதிக அளவில் உயர்த்தி விட்டு, சற்று மட்டுமே குறைத்திருப்பதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Most Read Articles

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக கருதப்படும் ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Center and 6 BJP Ruled Stats are Cuts Petrol, Diesel Prices By Rs 2.50. Read in Tamil
Story first published: Thursday, October 4, 2018, 19:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X