கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு அடிபணிந்து மத்திய அரசு விபரீத முடிவு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்

ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து மத்திய அரசு எடுத்துள்ள திடீர் முடிவால், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து மத்திய அரசு எடுத்துள்ள திடீர் முடிவால், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அடிபணிந்தது மத்திய அரசு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்..

ஸ்பீடு கவர்னர்ஸ் (Speed Governors) எனப்படும் வேக கட்டுப்பாட்டு கருவியை, வர்த்தக ரீதியிலான வாகனங்களில் (Commercial Vehicles), கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அடிபணிந்தது மத்திய அரசு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்..

சாலை பாதுகாப்பை அதிகரிக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகவே இது கருதப்படுகிறது. ஆனால் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் மாநாடு சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்றது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அடிபணிந்தது மத்திய அரசு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்..

இதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய நிதின் கட்கரி, ''வர்த்தக ரீதியிலான வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற திட்டமிட்டுள்ளோம்'' என அறிவித்தார்.

ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அடிபணிந்தது மத்திய அரசு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்..

வாகனங்களின் வேக வரம்பை உயர்த்துவது என்பது அதிக அளவிலான விபத்துக்கள் நிகழ வழிவகை செய்து விடும். ஆனால் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தே, வாகனங்களின் வேக வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அடிபணிந்தது மத்திய அரசு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்..

எனவே நிதின் கட்கரியின் அறிவிப்பிற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சூழலில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட வேண்டாம் என தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல் சோய் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அடிபணிந்தது மத்திய அரசு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்..

இதுகுறித்து கமல் சோய் கூறுகையில், ''இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். எனவே வாகனங்களின் வேக வரம்பை உயர்த்துவதன் மூலம் சீரான போக்குவரத்து இயக்கத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அடிபணிந்தது மத்திய அரசு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்..

மாறாக அதிகப்படியான சாலை விபத்துக்களுக்கே இது வழிவகை செய்யும். சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிவேகமும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணிய வேண்டாம் என நிதின் கட்கரியை கேட்டுகொள்கிறேன்.

ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அடிபணிந்தது மத்திய அரசு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்..

வளர்ச்சி அடைந்த நாடுகள் சீரான போக்குவரத்தை கொண்டிருப்பதால், அங்கு வாகனங்களின் வேக வரம்பை உயர்த்த முடியும். ஆனால் அங்கும் கூட வேக கட்டுப்பாட்டு கருவிகளை பயன்படுத்தவே செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.

ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அடிபணிந்தது மத்திய அரசு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்..

தற்போது தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக உள்ள கமல் சோய், முன்னதாக பஞ்சாப் மாநில சாலை பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் அடிபணிந்தது மத்திய அரசு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்..

இதனிடையே வர்த்தக ரீதியிலான வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் இல்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக மட்டுமே நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.

சண்டிகரை தொடர்ந்து பெங்களூருவில் வாகன ஓட்டிகளை மிரட்டும் ஆர்எஸ்எஸ்..

இனி கார்கள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால், ஆர்எஸ்எஸ் அறிவிப்பு பலகை அதனை டிஸ்ப்ளே செய்யும். இதன்மூலம் கார் டிரைவர்கள் வேகத்தை குறைத்து கொள்ள முடியும். கார்கள் மட்டுமல்லாது அனைத்து வாகனங்களின் வேகத்தையும் இது கணக்கிட்டு காட்டும்.

Most Read Articles

ரூ.40 கோடி விலையில் அண்மையில் அறிமுகமான புதிய புகாட்டி டிவோ ஹைப்பர் கார் குறித்த அட்டகாசமான படங்களை மேலே உள்ள கேலரியில் காணலாம். இந்த புதிய புகாட்டி டிவோ ஹைப்பர் காரின் டாப் ஸ்பீடு உள்ளிட்ட தொழில்நுட்ப விபரங்கள், முக்கிய சிறப்பம்சங்கள் விபரங்களை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Central Government Decided to Increase Speed Limit of Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X