இதைத்தான் எதிர்பார்த்தோம்... 'சுந்தரா டிராவல்ஸ்' பஸ்களை எல்லாம் தூக்கி வீசுங்க... மத்திய அரசு அதிரடி உத்தரவு!

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி இனி அரசுகளிடம் 15 ஆண்டுகளுக்குப் பழமையான வாகனம் எதுவும் பயன்பாட்டில் இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். வாகனம் என்றால் அரசு பஸ்கள், அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் கார்கள், வேன்கள், டிரக்குகள் உள்ளிட்ட அத்தனையும் உள்ளடங்கும்.

இந்தியாவில் மாநில அரசுகள் போக்குவரத்துக் கழகங்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் பஸ்களை மாநில அரசுகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகிறது. இதே போல போலீஸ், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்துவதற்கான வாகனங்களையும் அரசுகள் வழங்கியுள்ளது. இதே போல மத்திய அரசும் அதன் அதிகாரிகளுக்கு கார்களை வழங்கியுள்ளது. அவர்களும் அதை அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் மத்திய அரசு இந்தியாவில் மாசுக் கட்டுப்பாட்டைக் கடுமையாகப் பின்பற்ற முடிவு செய்துள்ளது.

இதைத்தான் எதிர்பார்த்தோம்... சுந்தரா டிராவல்ஸ் பஸ்களை எல்லாம் தூக்கி வீசுங்க... மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு பாரத் ஸ்டேஜ் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி வாகனத்திலிருந்து வெளியேறும் மாசுவை கட்டுப்படுத்தும் விதிமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் அரசு வாகனங்களே பல மாசுவை அதிக அளவில் வெளியிட்டுவருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக அரசு பஸ்கள் பல தகுதியே இல்லாத பஸ்கள் எல்லாம் இயக்கப்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை மத்திய போக்குவரத்துத் துறை நிதின் கட்கரி நாக்பூரில் நடந்த 2022 அக்ரோவிஷன் எடிசன் கூட்டத்தில் பேசினார். அவர் பேசியபோது : "நேற்று பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு ஃபைலில் கையெழுத்திட்டேன். அதன்படி இந்திய அரசிடம் உள்ள 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை எல்லாம் கிராப் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். இதே கொள்கையை மாநில அரசுகளும் பின்பற்றக் கடிதம் எழுதியுள்ளேன் " எனக் கூறினார்.

இந்தாண்டு துவக்கத்தில் கிராப்பிங் பாலிசி ஒன்றை உரவாக்கியிருந்தது. அதன்படி பயன்பாட்டிலிருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஒவ்வொரு மாவடத்திற்கும் 2-3 ஸ்கிராபிக் மையத்தை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தது. அதன்படி வாகனத்தின் பாகங்களை அழித்து வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும். உதாரணமாக காரின் டயர்கள் சாலைகள் கட்டமைப்பிற்காகப் பயன்படும்.

கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை உருவாக்கியது. அதற்கு முன்னரே சுப்ரீம் கோர்ட் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை டில்லி என்சிஆர் பகுதியில் பயன்படுத்தத் தடை விதித்திருந்தது. 2014ம் ஆண்டு 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களைப் பொதுவெளியில் பயன்படுத்தத் தடை விதித்திருந்தது.

இதன்படி பார்த்தால் மாநில அரசுகள் தங்கள் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறது. தற்போது மத்திய அரசிடமிருந்து வந்த கடிதத்தின்படி இப்படியான பேருந்துகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டு புதிய பேருந்துகளை வாங்க வேண்டும். இதன் மூலம் விரைவில் நம்மூரில் ஓடும் "சுந்தரா டிராவல்ஸ்" பஸ்களுக்கு எல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என நம்பலாம். ஆனால் இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.

இந்த பஸ்களுக்கு மாற்றாக எலெக்டரிக் பேருந்துகள், அல்லது ஹைட்ரஜ் செல் பேருந்துகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த டீசல் பஸ்கள் பதிலாக மாற்று எரிபொருள் பஸ்களை பயன்படுத்தினால் அதிலிருந்து வெளியாகும் மாசு குறையும் என்பதால் அரசு மாற்று வழியில் யோசிக்க வேண்டும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Central sent to states the policy of 15 year old govt vehicles in scrap including govt buses
Story first published: Saturday, November 26, 2022, 12:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X