Just In
- 11 min ago
அப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 2 hrs ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
Don't Miss!
- Finance
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிக நிறுத்தம்.. எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா?
சென்னையில் ரிசார்ட்கள், திருமண மண்டபங்களுக்கு தற்போது திடீரென டிமாண்ட் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் (கோவிட்-19) மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். குறிப்பாக தமிழக தலைநகர் சென்னை, கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக மாறியுள்ளது. இதனால் சென்னையை சார்ந்து இயங்கும் தொழிற்சாலைகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் தலைநகரம் சென்னைதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். 'ஆசியாவின் டெட்ராய்டு' என வர்ணிக்கப்படும் அளவிற்கு, சென்னையை சுற்றிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிரம்பி வழிகின்றன. உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும், சென்னையில் தங்கள் தொழிற்சாலையை அமைத்துள்ளன.

ஆனால் கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளால் சென்னையில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, பண புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் வாகனங்களின் விற்பனை சொல்லி கொள்ளும்படி பெரிதாக இல்லை.

ஆனால் வரும் மாதங்களில் இதே கொரோனா வைரஸ் எதிரொலியால் வாகனங்களின் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்து கொண்டுள்ள மக்கள், சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

எனவே வரும் மாதங்களில் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து, விற்பனை உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி ஒரு சூழல் உருவானால், வாகனங்களை அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய நிலை வரும். எனவே உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சென்னையில் இயங்கி வரும் வாகன நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளன.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினத்தில் இருந்து, கல்யாண மண்டபங்கள், ஹாஸ்டல்கள், கல்லூரிகள் மற்றும் ரிசார்ட்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஆனால் சென்னையின் புறநகர் பகுதிகளில் ஆட்டோமொபைல் நிறுவனங்களை ஒட்டி செயல்பட்டு வரும் திருமண மண்டபங்கள், ஹாஸ்டல்கள் ஆகியவற்றுக்கு தற்போது திடீரென டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கல்லூரி கட்டிடங்கள் மற்றும் ரிசார்ட்கள் ஆகியவற்றுக்கான தேவையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஹூண்டாய், டிவிஎஸ், ரெனால்ட்-நிஸான், ராயல் என்பீல்டு ஆகியவைதான், அவற்றை வாடகைக்கு எடுத்து வருகின்றன. தங்கள் ஊழியர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்காக அந்நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

எவ்வித பாதிப்பும் இல்லாமல் உற்பத்தி தொடர்வதை உறுதி செய்வதற்காக, இந்த நடவடிக்கையை முன்னணி நிறுவனங்கள் எடுத்துள்ளன. இதில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தொழிற்சாலைக்கு அருகே, மூன்று கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

அவர்களின் வளாகத்தை பயன்படுத்தி கொள்வதற்காக, இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இயக்குனர் (உற்பத்தி) கணேஷ் மணி இந்த தகவலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''உற்பத்தி தொடர்வதை உறுதி செய்வதற்காக தொழிற்சாலைக்கு அருகே சுமார் 1,200 ஊழியர்களுக்கு இடவசதியை உருவாக்கியுள்ளோம்'' என்றார்.

அதே சமயம் ரெனால்ட்-நிஸான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பெரும்பாலும் ஹோட்டல்களில் இடவசதி ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம், அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தனது ஊழியர்களுக்கு தேவையான இடவசதியை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண புழக்கம் இல்லாதது உள்பட பல்வேறு காரணங்களால், வாகனங்களின் விற்பனை தற்போது 'டல்' அடித்து வருகிறது. ஆனால் வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும் போது, கிடைக்கும் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதால், உற்பத்தி தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
Note: Images used are for representational purpose only.