தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக மக்களின் நீண்ட நாள் கனவை வெகு விரைவில் நிறைவேற்றுவதன் மூலம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற விஷயத்தில் உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் வாகனங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடங்கியுள்ளன.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால், அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் இந்த பிரச்னை இல்லை. எனவேதான் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பார்க்கப்படுகின்றன.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் அல்லாமல், எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கான செலவு மிக மிக குறைவு என்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. எனவேதான் உலகம் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகன மயமாகி வருகிறது. இந்தியாவும் இதற்கு விதி விலக்கு அல்ல.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் ஊக்குவித்து வருகிறது. பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

இதன் ஒரு பகுதியாக டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில், சோதனை முயற்சியாகவே அல்லது முழு அளவில் வணிக ரீதியாகவோ எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், உலகம் முழுவதும் பத்தில் 9 பேர் மாசுபட்ட காற்றை சுவாசித்து வருவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஒரு ஆண்டுக்கு 70 லட்சம் (7 மில்லியன்) பேர் உயிரிழந்து வருகின்றனர்.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதே, காற்று மாசுபாட்டுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே எலெக்ட்ரிக் பஸ்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

ஆனால் எலெக்ட்ரிக் பஸ்கள் என்ற விஷயத்தில், தமிழ்நாடு மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருந்து வந்தது. இருந்தபோதும் தமிழகத்தில் எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார்.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

இந்த சூழலில், தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெகு விரைவில் அறிவிக்க உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

ஜெர்மனியின் உதவியுடன் தமிழக அரசு மொத்தம் 2,000 புதிய எலெக்ட்ரிக் பஸ்களை வாங்கவுள்ளது. இதில், முதற்கட்டமாக 500 எலெக்ட்ரிக் பஸ்கள், சென்னை, கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படவுள்ளன.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

இந்த எலெக்ட்ரிக் பஸ்களுக்கான வழித்தடங்கள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக போக்குவரத்து துறை தயாரித்துள்ளது. அத்துடன் அதனை அரசிடம் ஏற்கனவே சமர்ப்பித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் சி40 என்ற பன்னாட்டு முகமையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் 12,000 பிஎஸ்-6 பஸ்களை தமிழகத்தில் இயக்க இந்த ஒப்பந்தம் வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்குவதில் மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி விட்டு தமிழகம் முன்னுக்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுதவிர தமிழக அரசின் பல்வேறு போக்குவரத்து கழகங்களுக்கு 1,500 புதிய பஸ்கள் வாங்கப்படவுள்ளன.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஓட்டை, உடைசலான பஸ்களை அரசு இயக்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. பல்வேறு போக்குவரத்து கழங்களில் உள்ள அத்தகைய பஸ்களுக்கு மாற்றாக இந்த 1,500 புதிய பஸ்கள் சேர்க்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

இதற்காக தமிழக அரசு 1,500 கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாநில போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோது, அவர் இதனை தெரிவித்தார்.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் ஓட்டை, உடைசல்கள் இல்லாத அதி நவீன பஸ்களை தமிழக மக்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அவர்களின் கனவு விரைவில் நிறைவேற போகிறது.

தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

அத்துடன் தமிழகத்தில் எலெக்ட்ரிக் பஸ்களை மிக அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த முதல்வர் என்று வரலாற்றிலும் இடம்பிடிக்க உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இது முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கூட செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai, Coimbatore, Madurai To Get 500 Electric Buses Soon. Read in Tamil
Story first published: Wednesday, June 5, 2019, 12:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X