தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

சென்னையை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவர் தினமும் 40 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி வருகிறார். இதுகுறித்த தகவல்களை வீடியோவுக்கு கீழே தொடர்ந்து செய்தியை விரிவாகப் படிக்கலாம்.

Recommended Video

பிரபலங்கள் காரின் பின்சீட்டில் அமர்வதற்கு என்ன காரணம்? தெரிந்தால் வியந்து போவீர்கள்
தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

இன்று கார் அல்லது பைக் என்று ஏதேனும் ஒரு வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது. ஒரு சில வீடுகளிலோ, கார் மற்றும் பைக் என இரண்டு வாகனங்களும் இருக்கின்றன. உடல் பருமன் உள்பட உடல் நலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு, வாகனங்களும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

நாம் அனைவரும் சைக்கிள் மிதித்து கொண்டிருந்தவரை இந்த பிரச்னையெல்லாம் கிடையாது. தற்போதைய சூழலில், சாலையில் சைக்கிள்களை பார்ப்பதே அரிதான விஷயமாக உள்ளது. உடற்பயிற்சிக்காக ஒரு சிலர் மட்டும் சைக்கிள் மிதித்து கொண்டுள்ளனர். ஆனால் அன்றாட அலுவல் பணிகளுக்காக சைக்கிள் ஓட்டுபவர்களை காண்பது அரிதாகதான் உள்ளது.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

அதிலும் காவல் துறையினர் தற்போது பல்சர், அப்பாச்சி என நவநாகரீக வாகனங்களுக்கு மாறி விட்டனர். ஒரு காலத்தில் காவல் துறையினர் சைக்கிள்களைதான் அதிகம் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காவல் துறையினர் சைக்கிள் ஓட்டும் காட்சிகளை இன்று பழைய திரைப்படங்களில் மட்டுமே காண முடிகிறது.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

இன்றைய அவசர உலகத்தில் காவல் துறையினரால், சைக்கிளை பயன்படுத்த முடியாது என்ற நடைமுறை உண்மையை நாம் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அந்த இலக்கணத்தை தகர்த்து எறிந்து வருகிறார் சரவணன். 51 வயதாகும் இவர், சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

இவர் தனது அன்றாட பணிகளுக்கு இன்னமும் சைக்கிளைதான் பயன்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ''சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக என்னால் ஃபிட்-ஆக இருக்க முடிகிறது. இன்னமும் எனக்கு தொப்பை இல்லை. மேலும் வாழ்க்கை முறை நோய்களும் எனக்கு இல்லை. என்னால் இப்படி இருக்க முடிவதற்கு, நான் சைக்கிள் ஓட்டுவதே காரணம்'' என்றார்.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள தலைமை காவலர் சரவணனின் வீடு ஆதம்பாக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர் தினமும் சைக்கிளில்தான் வருகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''ஒவ்வொரு நாளும் 40 கிலோ மீட்டருக்கு நெருக்கமாக சைக்கிள் ஓட்டுகிறேன். பணி நேரத்தின்போது கூட, நான் பைக்கை பயன்படுத்துவது கிடையாது.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

நான் சைக்கிள் ஓட்டுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சைக்கிள் ஓட்டுவதை தொடங்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக என்னிடம் பலர் கூறியுள்ளனர். சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இரவில் நல்ல உறக்கத்தை என்னால் பெற முடிகிறது. அத்துடன் குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் எனக்கு இல்லை. மேலும் நாம் சைக்கிள் பயணம் மேற்கொண்டால், அது சுற்றுச்சூழலை பாதிக்காது.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத போக்குவரத்தின் ஒரு வகையாக இது உள்ளது'' என்றார். இவர் சொல்வது சரியே. தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களே இதற்கு முக்கிய காரணம்.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சைக்கிள் பயன்பாடு மூலமும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கலாம். சைக்கிள் ஓட்டுவது குறித்து சரவணன் மேலும் கூறுகையில், ''பணத்தை சேமிப்பதற்காக மட்டும் நான் சைக்கிள் ஓட்டவில்லை.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

எனது உடல் நலத்தை பாதுகாக்கவும், மருத்துவ செலவுகளை தவிர்க்கவும் சைக்கிள் ஓட்டுகிறேன். ஓய்விற்கு பின்னரும், நான் சைக்கிள் ஓட்டுவேன்'' என்றார். இது தொடர்பாக தலைமை காவலர் சரவணனுடன் பணியாற்றி வருபவரும், நந்தம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டருமான சக்ரவர்த்தி கூறுகையில், ''ஆரம்ப வருடங்களில் வேலைக்கு வர நானும் சைக்கிள்தான் பயன்படுத்தினேன்.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

எனினும் பின்னர் பைக்கிற்கு மாறி விட்டேன். ஆனால் சரவணன் இன்னும் சைக்கிள் பயன்படுத்துவது எனக்கு பெருமையாக உள்ளது'' என்றார். இன்னமும் சைக்கிள் பயன்படுத்தி வரும் தலைமை காவலர் சரவணன் பற்றிய செய்தியை தி இந்து வெளியிட்டுள்ளது. சைக்கிள் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளை கொடுத்தாலும், இன்றைய அவசர சூழலில் நடைமுறையில் பல சிரமங்களும் ஏற்படலாம்.

தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...

எனினும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சைக்கிள் பயன்படுத்தி வரும் தலைமை காவலர் சரவணன் பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான். தற்போதைய சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. எனவே மோட்டார் வாகனங்களுக்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சைக்கிளுக்கு மாறி விடலாமா? என பலர் யோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

630 கிமீ சைக்கிள் பயணம்... ஊருக்கு வந்ததும் என்ன செஞ்சார் தெரியுமா? மக்களை பிரம்மிக்க வைத்த பெரியவர்

தினமும் 40 கிலோ மீட்டர்கள் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அனைவரின் கவனத்தையும் தலைமை காவலர் சரவணன் ஈர்த்து வரும் நிலையில், சமீபத்தில் மற்றொரு முதியவரும் சுமார் 630 கிலோ மீட்டர்கள் சைக்கிள் ஓட்டியதன் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

630 கிமீ சைக்கிள் பயணம்... ஊருக்கு வந்ததும் என்ன செஞ்சார் தெரியுமா? மக்களை பிரம்மிக்க வைத்த பெரியவர்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தெய்வநாயகப்பேரி என்ற கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு 73 வயதாகிறது. சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கி கொண்டார். ஆனால் கிராமத்து வாழ்க்கை பழகி போன அவருக்கு சென்னை ஒத்து வரவில்லை.

630 கிமீ சைக்கிள் பயணம்... ஊருக்கு வந்ததும் என்ன செஞ்சார் தெரியுமா? மக்களை பிரம்மிக்க வைத்த பெரியவர்

எனவே சமீபத்தில் சென்னையில் இருந்து சுமார் 630 கிமீ சைக்கிளில் பயணம் செய்து சொந்த ஊருக்கு அவர் வந்து விட்டார். ஊர் எல்லையில் உள்ள கோயிலில் 15 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட பின்னர்தான் அவர் தனது வீட்டிற்கே சென்றார். அவரின் இந்த செயல்பாடுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai: Police Head Constable Still Using Bicycle For Transportation. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X