ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

தமிழகத்தில் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

சென்னை பெருநகரில் போக்குவரத்து காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதுதான் அந்த விதிமுறை. இந்த விதிமுறையை கடந்த திங்கள் கிழமை (மே 23) முதல் போக்குவரத்து காவல் துறையினர் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக, சிறப்பு வாகன தணிக்கையை காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். இந்த வாகன தணிக்கையில் ஒரே நாளில் 3,926 அபராத ரசீதுகளை காவல் துறையினர் வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் ஹெல்மெட் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதற்காக வழங்கப்பட்டவையாகும்.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

இதில், 2,023 அபராத ரசீதுகள், இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற காரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வாகன தணிக்கை, நாங்கள் ஏற்கனவே கூறியபடி, கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. இரு சக்கர வாகனங்களின் பின்னால் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை குறிவைத்தே இந்த வாகன தணிக்கை நடைபெறுகிறது.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

இந்த சிறப்பு வாகன தணிக்கை தொடங்கப்படுவதற்கு முன்பாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் போதுமான அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டனர். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் மாநகர போக்குவரத்து காவல் துறையினரால் எடுத்துரைக்கப்பட்டது.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

இந்த விதிமுறையை மீறினால், மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்தே, தற்போது காவல் துறையினர் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

இதில், ''அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மனித உயிர்களை காப்பாற்றவும், விபத்துக்கள் இல்லாத நகரமாக சென்னையை மாற்றவும், சென்னை பெருநகர காவல் துறைக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வாகன தணிக்கை தொடங்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக காவல் துறையினர் 3,000க்கும் மேற்பட்ட ஹெல்மெட் தொடர்பான வழக்குகளை பதிவு செய்தனர்.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

இதில் பெரும்பாலான வழக்குகள், இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது தொடரப்பட்டவை ஆகும். இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், ஆயிரக்கணக்கானோருக்கு அபராதங்களை விதிப்பது எங்கள் நோக்கமல்ல. வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைப்பதுதான் எங்கள் நோக்கம்'' என்றனர்.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

இதற்கிடையே சென்னையை தொடர்ந்து மும்பை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரும் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இதன்படி மும்பையிலும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

இதை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் ஓட்டுனர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். இந்த விதிமுறை அடுத்த 2 வாரங்களில் அமலுக்கு கொண்டு வரப்படும் என மும்பை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் மற்ற நகரங்களிலும் இந்த விதிமுறைகள் கட்டாயமாக்கப்படலாம்.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!

போக்குவரத்து காவல் துறையினரிடம் அபராதம் கட்ட வேண்டுமே என்பதற்காக மட்டுமல்லாது, விலை மதிப்பில்லாத உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் ஹெல்மெட் அணிந்தால், இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai police issue over 2000 challans in one day here is the reason why
Story first published: Wednesday, May 25, 2022, 22:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X