பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

சென்னை போலீஸுக்கு கூடுதல் பலமளிக்கும் வகையில் புதிய ரக மின் வாகனம் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும், அண்மைக் காலங்களாக இது விஷ்வரூபம் எடுத்துள்ளது. பெரும்பாலும், வட மாநிலங்களில் மட்டுமே அரங்கேறி வந்த கொடூர சம்பவங்கள் தற்போது தென் மாநிலங்களிலும் பரவ தொடங்கியுள்ளது.

அந்தவகையில், சமீபத்தில் நாட்டை நடு நடுங்க வைக்கின்ற வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஓர் சம்பவம் நடைபெற்றது.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

இந்த சம்பவத்தில், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கால்நாடை மருத்துவர், வன்புணர்வு செய்யப்பட்டவர்களாலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் கொதிப்பு அடங்காத நிலையில் உன்னாவ் இளம்பெண்ணும் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரர்களாலேயே எரித்துக் கொல்லப்பட்டார்.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

இவ்வாறு தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்வங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

ஆகையால், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வல்லுறவு மற்றும் ஆசிட் வீச்சு போன்ற கொடூரமான குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கின்ற வகையில், திஷா சட்ட மசோதாவிற்கு ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

குற்றவாளிக்கு எதிராக அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே இச்சட்டத்தின் மூலம் மரண தன்டனை வாங்கி தர முடியும். இதற்கான மசோதாவிற்கு அம்மாநில அரசு கடந்த 11ம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், மறுநாளே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநில அரசும் இதேபோன்றதொரு சட்டத்தை அம்மாநிலத்தில் கொண்டுவர இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் இதேபோன்றதொரு முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கின்ற வகையில், பெண் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 'செக்வே ஹோவர் போர்டு' ரகத்திலான இ-ஸ்கூட்டர் புதிதாக ரோந்து பணிக்கு இணைக்கப்பட்டுள்ளது.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

இந்தியாவிலேயே முதல்முறையாக ஹோவர் போர்டு ரகத்திலான இ-ஸ்கூட்டரை ரோந்து பணிக்காக பயன்படுத்துவது தமிழகத்தில்தான். இந்த இ-ஸ்கூட்டரில் போலீஸார் நின்றவாறே 20 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

மேலும், இதன் மீது ஏறி ஒரு போலீஸார் நின்றவாறு செல்வதால் அவரால் 8 அடி உயரத்தில் அனைத்தையும் கண்கானிக்க முடியும். எனவே, 500 மீட்டர் சுற்றளவில் நடைபெறும் சம்பவங்களைக்கூட மிக சுலபமாக நோட்டமிட முடியும். அதுமட்டுமின்றி, நின்ற இடத்திலிருந்தே 360 டிகிரி சுழலும் தன்மையை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

இதுமட்டுமின்றி, போலீஸாருக்கு தேவையான ஸ்பீக்கர், வாக்கி டாக்கி, முதலுதவிக்கான மருந்துகள் உள்ளிட்டவை இ-ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்றன.

இருசக்கரங்களைக் கொண்ட இந்த இ-ஸ்கூட்டரை அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில்கூட எளிதில் பயன்படுத்த முடியும். ஆகையால், திருவிழாக் காலம் மற்றும் பண்டிகைக் காலங்களில் இதனைப் பயன்படுத்துவது சுலபம் என்று கூறுகின்றனர் போலீஸார்.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

ஏற்கனவே, இதுபோன்ற இ-ஸ்கூட்டர்களை மும்பை நகர போலீஸார் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், தொழில்நுட்பம் குறைபாட்டின் காரணமாக அவை கை விடப்பட்டன. எனவே, தற்போது சென்னை போலீஸார் சோதனையோட்டம் முறையில் 10 இ-ஸ்கூட்டர்களை மட்டுமே வாங்கியுள்ளனர்.

இது வெற்றிப் பெறுமேயானால் மேலும் இதன் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

மேலும், இ-ஸ்கூட்டர்கள் பெண்களின் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் பெண்களை கையும் களவுமாக பிடிப்பதற்காகவும் பயன்படுத்த இருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

இதற்கு சமீபகாலமாக சென்னை போலீஸார் சந்தித்து வரும் சிக்கலான சூழலே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. மது அருந்திவிட்டு விலையுயர்ந்த கார்களில் சீறிப் பாய்ந்து வரும் பெண்கள், போலீஸாரின் சோதனையில் சிக்கும்போது வாக்குவாதத்தில் ஈடுபடுவது மட்டுமின்றி போலீஸார் அத்துமீறுவதாக பொய் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகக் கூறப்படுகின்றது.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

அத்தகைய பெண்களைக் கையாள்வதற்காகவும் இரவு நேர பெண் போலீஸார் ரோந்து பணியை அறிமுகம் செய்திருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்காக சென்னையின் ஒவ்வொரு சரகத்திற்கும் நான்கு பெண் போலீஸ் படைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அதில், ஒரு உதவி பெண் ஆய்வாளர், ஒரு பெண் ஏட்டு, இரண்டு பெண் கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்கியிருப்பர். ஷிஃப்ட் முறையில் பணியை மேற்கொள்ளும் இவர்கள் தேவைப்படும்போது குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று பணியை மேற்கொள்வர்.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

குறிப்பாக பெண்கள் கல்லூரி, பள்ளி, பெண்கள் போராட்டம் நடத்துமிடம் என பெண்கள் அதிகம் குழுமிடங்களில் இவர்கள் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

தொடர்ந்து, மது போதையில் வாகனங்களை இயக்கும் பெண்களையும் இவர்கள் கையாள இருக்கின்றனர். இதற்காக பிரத்யேக பயிற்சி தயார் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

தற்போது, அறிமுகம் செய்யப்பட்டுள்ள இ-ஸ்கூட்டர்கள் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் ஆகிய இரு கடற்கரை பகுதியிலும் ரோந்து பணிக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

இதுமட்டுமின்றி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக காவலன் SOS என்ற செயலி, 75300 01100 என்ற பிரத்யேக வாட்ஸ் அப் எண் உள்ளிட்டவற்றை சென்னை மாநகரக் காவல்துறை அறிமகும் செய்துள்ளது. இதுமட்டுமின்றி, www.facebook.com/chennai.police என்ற முகப்புத்தகம் பக்கத்தின் வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளது.

தொடர்ந்து, [email protected] என்கிற மின்னஞ்சல் மூலமாகவும் புகாரளிக்கும் வசதியையும் சென்னை மாநகர போலீஸ் ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai Police Launched E Scooter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X