சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

சென்னை போர் சின்னத்தின் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய காரணத்திற்காக இரு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

சமீபகாலமாக போலீஸார் வன்முறையில் ஈடுபடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய போலீஸாரே இதுபோன்ற ஒழுங்குமீறலில் ஈடுபடுவது, பொதுமக்களிடையே வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், சமீபத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

இந்த சம்பவத்திற்கு முன்னதாக, போலீஸார்களின் அத்துமீறல் குறித்த பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் உலா வருவதை நாம் கண்டிருப்போம். அதன்படி, போலீஸார் கையூட்டு பெறுவது, வாகனங்களை ஓடி மடக்கிப்பிடித்து விபத்திற்குள்ளாக்குவது, சமயங்களில் திருட்டில் ஈடுபடுவது என பல்வேறு வீடியோக்களை நாம் காண்டிருப்போம். ஆனால், இம்முறை சற்று ஒரு படி மேலே சென்று, சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டரை, தாக்கி உடைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

இந்த சம்பவமானது சென்னை கோட்டை அருகே உள்ள சத்யா நகரில் தான் அரங்கேறியுள்ளது. பாரிமுனைியில் இருந்து மெரினா கடற்கரைக்குச் செல்லும் வழியில் இருக்கும் மீனவ குப்பம் தான் சத்யா நகர், இந்த சாலை மிகவும் முக்கியமான சாலையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த சாலையில் தான் தமிழகத்தின் தலைமை செயலகம், ஆர்மி கேம்ப் உள்ளிட்டவை உள்ளன. ஆகையால், இந்த சாலையை தமிழக முதலமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் பயன்படுத்துவது வழக்கம்.

சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

மேலும், இந்த குப்பத்தின் நுழைவாயிலிற்கு எதிரிலேயே இராணுவத்திற்குச் சொந்தமான கொடிமரம் இருக்கின்றது. இதுபோன்ற காரணங்களால், இந்த சாலையில் எப்போதும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இந்தநிலையில், சத்யாநகரின் நுழைவாயிலுக்கு முன்பாக, போலீஸாரின் பேரிகேட்டிற்கு இடையே இளைஞர் ஒருவர் தனது ஹோண்டா டியோ பைக்கை பார்க் செய்துவிட்டுச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்து போலீஸார், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டியோ பைக்கை, மின்சார பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பெரிய பழுப்பினைக் கொண்டு தாக்கி உடைத்துள்ளனர்.

சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொருக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

இதில், ஸ்கூட்டரின் பின்பக்க விளக்கு, முன்பக்க ஹெட்லைட் மற்றும் ஆகியவை நொருங்கின. மேலும், இந்த ஸ்கூட்டர் ஃபைபர் பாடியைக் கொண்டிருப்பாதல், இந்த தாக்குதலில் முன்பக்க பாடி கவர் முழுமையாக சிதிலமடைந்தது. இந்த தாக்குதலை நிகழ்த்திய ஊர் காவல்படையைச் சேர்ந்த மோகன் என கூறப்படுகிறது. சம்பவத்தின்போது, சிறப்பு துணை காவல் ஆய்வாளர் ஹரி பாபுவும் உடன் இருந்துள்ளார்.

அவர், போலீஸ் வாகனத்திற்குள் அமைதியாக அமர்ந்தபடி, இந்த சம்பவத்தை வேடிக்கைப் பார்த்துள்ளார். இவ்வாறு, போலீஸாரின் வன்முறை அரங்கேறிக்கொண்டிருக்க அவ்வழியாகச் சென்ற பாதசாரி ஒருவர் இந்த காட்சிகளை அவர் ஸ்மார்ட்போனில் படம்பிடித்துள்ளார். இதற்கிடையில், ஹோண்டா டியோவின் உரிமையாளர் வருகிறார். ஆனால், அவர் வந்த பின்னரும்கூட, தொடர்ச்சியாக ஸ்கூட்டரை அடித்து நொருக்கும் முயற்சியில் மோகன் ஈடுபடும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த தாக்குதல் குறித்து, ஸ்கூட்டரின் உரிமையாளர் எதுவும் கேட்காதவாறு அங்கிருந்து நகர்ந்து செல்பவது, நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

சமீபகாலமாக போலீஸாரால் ஏற்பட்டு வரும் விதிமீறல்கள் எல்லையே இல்லாமல் நீடித்துக்கொண்டிருக்கிறது. இவர்களின் அராஜகத்திற்கு முடிவே இல்லாததைப் போன்று தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் சாட்சியாக இருக்கின்றன. சட்டத்தைப் பாதுகாகக் வேண்டிய போலீஸாரே இதுபோன்று அத்துமீறிலில் ஈடுபடுவது முதல்முறையாக இல்லையென்றால், ஒவ்வொரு சம்பவங்களும் போலீஸார் மனிதர்களா என்ற கேள்வியைக் கேட்க தூண்டுகிறது.

சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

போலீஸார், காக்கிச் சட்டை அணிந்திருந்தால், சட்டத்தை கையிலெடுத்துக்கொள்ளலாம் என்பது அர்த்தமில்லை. விதிமீறலில் அல்லது குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவர்களை சட்டத்திற்கு முன்பாக நிறுத்தி, நீதிமன்றங்கள் மூலமாக தக்க தண்டனை வாங்கிக் கொடுப்பது அவர்களின் தலையாய பணி. அதைத்தான் சட்டங்களும் கூறுகின்றன. ஆனால், இங்கு சற்று மாறுதலாக,போலீஸாரே நீதிபதிகளாக மாறி உடனுக்குடன் தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

இவ்வாறு, அராஜகத்தில் ஈடுபடும் போலீஸாரை எதிர்த்து கேள்விக் கேட்டால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, அவர்களையும் தாக்குகின்றனர். அந்த வகையில்தான், ஸ்கூட்டரைத் தாக்கும் காட்சியைப் படம் பிடித்த இளைஞரை அந்த போலீஸார் மிரட்டி, வீடியோவை அழிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த காட்சிகளை அந்த இளைஞர் இணையத்தில் பதிவேற்றி வைரலாக்கியுள்ளார்.

சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

இந்த சம்பவத்தைத்தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட சிறப்பு துணை காவல் ஆய்வாளர் ஹரிபாபுவையும், ஊர்காவல் படையைச் சேர்ந்த மோகனையும் கோட்டைக் காவல்நிலைய ஆய்வாளர் இடைநீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணைச் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சாலையேரத்தில் நின்ற ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய போலீஸ்: வைரல் வீடியோவால் இருவர் சஸ்பெண்ட்!

இந்த சம்பவம் குறித்து வன்முறையில் ஈடுபட்ட போலீஸார் கூறியாதவது, "நாங்கள் அந்த இளைஞருக்கு பலமுறை எச்சரிக்கை செய்துள்ளோம், இதுபோன்ற வாகனத்தை நோ பார்க்கிங்கில் விடாதே என்று. இருப்பினும் அவர் இவ்வாறு ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் அந்த பகுதியில் கஞ்சா வாங்கதான் வருகிறார். அவ்வாறு, வரும்போது தான் இவ்வாறு செயல்படுகிறார்" என காரணம் தெரிவித்தனர். போலீஸாரின் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தாங்கள் செய்த தவறை மறைக்க இவ்வாறு கூறியிருக்கலாம் என சத்தியாநகர் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Source: RushLane

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Police Thrashing Honda Dio Scooter Parked On Road-Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X