சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு மிகப்பெரிய சம்பவமாக பேசப்படுவது சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரம் தான். ஒரு பக்கம் இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தர

By Balasubramanian

தமிழ்நாட்டில் தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு மிகப்பெரிய சம்பவமாக பேசப்படுவது சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரம் தான். ஒரு பக்கம் இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலும், இந்த திட்டம்த்திற்கான ஆதரவாரளர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தால் பல இயற்கை வளங்கள் அழிப்படுவதாகவும், பல மரங்கள் வெட்டப்படவிருப்பதாகவும் அதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த விட கூடாது என்று இதை எதிர்க்கும் தரப்பினர் கூறி வருகின்றனர். அப்படி உண்மையில் அந்த திட்டம் தான் என்ன அதில் என்ன பாதிப்புகள் இருக்கிறது என்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை நாம் இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

கடந்த பிப். மாதம் 25ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான். இது தொடர்பாக முதலில் அரசு தரப்பில் இருந்து தரப்படும் விளக்கத்தை முதலில் பார்க்கலாம்.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சேலம் அருகே உள்ள அரியானூர் வரை இந்த சாலை போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ. பகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 123.9 கி.மீ. பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ பகுதியிலும், தருமபுரி மாவட்டத்தில் 56 கிமீ. பகுதியிலும், சேலம் மாவட்த்தில் 36.3 கி.மீ. பகுதி என மொத்தம் 277.3 கி.மீ பகுதியில் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

இந்த சாலைக்கான அவசியம்

தற்போது சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாகவோ அல்லது செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், ஊளுந்தூர்பேட்டை, ஆத்தூர், வழியாகவோ பணிக்க வேண்டும். இவ்விரு பாதைகளும் கிட்டத்தட்ட ஒரே தூரம் தான்.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

ஆனால் இந்த இரண்டு ரோடுகளிலும் அதன் கொள்ளளவை விட 130 -160 சதவீதம் வரை அதிகமாக போக்குவரத்து தற்போது காணப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை இன்னும் பல மடங்காகும். அதாவது தற்போது போக்குவரத்திற்கு உள்ளாகும் வாகனங்களை விட 1.5 லட்சம் பிசியூ அளவிலான வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கணிக்கப்படுகிறது. தற்போது 60 ஆயிரம் பிசியூ கொள்ளவு கொண்ட சாலைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

பிசியூ என்பது வாகனத்தின் அளவையும் அது ரோட்டில் செல்ல தேவையான இடம் ஆகியவற்றை பொருத்து வழங்கப்படும் மதிப்பீடு. உதாரணமாக டூவீலர்களுக்கு 0.5 பிசியூ, கார்களுக்கு 1 பிசியூ, பஸ்களுக்கு 3.5 பிசியூ, சிறிய ரக லாரிகளுக்கு 6 பிசியூ, பெரிய ரக லாரிகளுக்கு 8 பிசியூ என அரசு வகைப்படுத்தியுள்ளது. அதை பொருத்து தான் ரோட்டின் தேவை கணக்கிடப்படுகிறது.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

தற்போது சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவு படுத்தப்பட்டால் கூட 60 ஆயிரம் பிசியூ கொள்ளவாக உள்ள சாலையை, 1 லட்சம் பிசியூ கொள்ளவாக மாற்ற முடியும். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்சம் நமக்கு 1.5 லட்சம் பிசியூ கொள்ளவு கொண்ட சாலை தேவை

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

தற்போது இந்த பசுமை வழிச்சாலை அமைக்கப்பட்டால் அந்த சாலையே சுமார் 1.5 லட்சம் பிசியூ கொள்ளவை கொண்டதாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் வரும் காலத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை விரிவு படுத்தினால் அதன் கொள்ளவான 1 லட்சம் பிசியூவையும் சேர்த்து மொத்தம் சென்னை - சேலம் சாலையில் 2.5 லட்சம் பிசியூவாக இருக்கும் இதனால் இன்னும் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு எந்தவித கவலையும் இல்லாமல் இப்பகுதி வேகமாக முன்னேற்றமடையும்.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

ஏன் தனியாக பசுமை சாலை?

தற்போது உள்ள சாலையை அதிக பிசியூ கொள்ளவை தாங்கும் படி விரிவாக்கம் செய்தால் 2200 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் மேலும் சாலையின் அருகே உள்ள பகுதிகளில் நிறைய வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் வந்துவிட்டதால் சுமார் 40 ஆயிரம் வீடுகள் வரை இடிக்கப்படவேண்டியது வரும்.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

ஆனால் இந்த பசுமை சாலை 1900 ஹெக்டேர் நிலத்தில் தான் அமைகிறது. அதில் 400 ஹெக்டேர் நிலம் ஏற்கனவே அரசிற்கு சொந்தமானது. மக்கள் பயன்பாட்டில் உள்ள 300 ஹெக்டேர் நிலங்களை தான் கையகப்படுத்த வேண்டியது வரும். ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை திட்டமிடுவதை விட இந்த திட்டத்தை செயல்படுத்துவது தான் சிறந்தது.மேலும் இது பசுமை வழிச்சாலையாகவும் அமைக்கிறது.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறதா?

இந்த சாலை அமையவுள்ள 277.3 கி.மீ தூரத்தில் 9.955 கிமீ. தூரம் மட்டுமே வனப்பகுதி வழியாக செயல்படுத்தப்படுகிறது. அதாவது மொத்தமுள்ள 1900 ஹெக்டேர் நிலங்களில் 49 ஹெக்டேர் நிலம் மட்டும் தான். அதிலும் சாதாரணமாக 70 மீட்டர் அகலத்தில் இருக்கும் ஆனால் வனப்பகுதிக்குள் அது 45-50 மீட்டர்களாக சுருங்கி விடும். இதனால் வனங்களுக்கு குறைந்த அளவு பதிப்பு தான் ஏற்படுகிறது. மேலும் எவ்வளவு வனங்கள் கையகப்படுத்தப்படுகிறதோ அதே அளவு இடங்களை வேறு பகுதியில் வனங்களை விரிவுபடுத்துவதற்காக ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

மேலும் வனப்பகுதிக்குள் அமைக்கப்படும் சாலையில் 3.1 கிமீ. சுரங்கப்பாதை வழியாக தான் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இயற்கை வளங்கள் மிக குறைந்த அளவில்தான் பாதிப்படையும். மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது வனத்தை பாதுகாக்கும் சிறந்த முறை என உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

இவை எல்லாம் அரசு தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி சட்டமன்றத்தில் கூறியது தான். ஆனால் இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் அதிக இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாகவும். இந்த சாலை அமைந்தால் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் அழிக்கப்படும். என குற்றம் சாட்டு கின்றனர்.

சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..!

நாட்டிற்கான தேவையும் அதிகமாக இருக்கிறது அதே நேரத்தில் இயற்கை வளங்களையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் இதனால் எதிர்பார்கள் நியாயமான எதிர்ப்பாக பதிவிடும். விஷயங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் இத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்து இயற்கை வளங்களை கெட்டுபோகாத வண்ணம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதே சிறந்தது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்.

  1. உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!
  2. இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'
  3. தலையில் லாரி ஏறியும் எதுவும் ஆகவில்லை! ஹெல்மெட் போட்டதால் தப்பிய உயிர்..! பதற வைக்கும் வீடியோ..!
  4. எலக்ட்ரிக் வாகன போட்டியில் சீனாவை விரட்டும் போதி தர்மர் மண்... சென்னை, கிருஷ்ணகிரியில் முதல் திட்டம்
  5. மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
what is there in chennai - salem 8 way green highway road?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X