தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

ஏற்கனவே இரண்டு முறை கோப்பையை தட்டிசென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தாண்டும் வீரர்கள் சிறப்பாக விளையாடி முன்னேற்ற பாதையிலேயே வைத்துள்ளனர். கேப்டன் தோனி முதல் பல வீரர்கள் இதில் கார் பிரியர்கள் அவர

By Balasubramanian

இந்தியா முழுவதும் கடந்த மாதம் முதல் ஐ.பி.எல் விளையாட்டு போட்டிகள் திருவிழா போல நடந்து வருகிறது. வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் நிலையில் இந்தாண்டு ஐ.பி.எல். கோப்பையை கைபற்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

ஏற்கனவே இரண்டு முறை கோப்பையை தட்டிசென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தாண்டும் வீரர்கள் சிறப்பாக விளையாடி முன்னேற்ற பாதையிலேயே வைத்துள்ளனர். கேப்டன் தோனி முதல் பல வீரர்கள் இதில் கார் பிரியர்கள் அவர்கள் வைத்திருக்கும் கார்களை பற்றி கீழே பார்ப்போம்.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

தோனி

ஹம்மர் எச்2

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி சிறந்த பைக் பிரியர் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். கார் என்று வந்தால் அவர் அதிகம் பயன்படுத்துவது எஸ்.யூவி ரக கார்கள் தான். தற்போது அவர் மஹேந்திரா ஸ்கார்ப்பியோ, மற்றும் பஜேரா எஸ்எப்எக்ஸ் ரக கார்களை வைத்திருக்கிறார். முக்கியமாக அவரிடம் ஹம்மர் எச்2 கார் இருக்கிறது. அவர் இதில் தான் தன் வீட்டில் இருந்து ஏர்போட்டிற்கோ அல்லது ராஞ்சி கிரிக்கெட் மைதானத்திற்கோ பயணிப்பார்.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மர் எச் 2 கார் வி8 ரக 6.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இது 393 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்ககூடியது. இந்த காரின் எடை 3 டன் கொண்டது அதனால் இது வேகமாக செல்லக்கூடிய திறன் இந்த காரில் இல்லை. எனினும் மிக அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார்.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

மெர்ஸிடியஸ் பென்ஸ் ஜிஎல்இ

மெர்ஸிடியன் பென்ஸ் ஜிஎல்இ என்பது இ கிளாஸ் கார்களின் எஸ்யூவி ரகம் இது. இந்த காரை தோனி மஹாராஷ்டிரா பதிவெண்ணில் வாங்கியுள்ளார். தோனி மும்பையில் இருக்கும் போது இந்த காரை பயன்படுத்துகிறார்.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

இந்தியாவில் இந்த கார் 3 வித இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2.1 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார் 201 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிபடுத்துகிறது. 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் கார் 255 பிஎச்பி பவரையும் 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கார் 333 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

சுரேஷ் ரெய்னா

ஃபோர்ஸ் பாக்ஸ்டர்

சுரேஷ் ரெய்னா மஞ்சள் நிற ஃபோர்ஸ் பாக்ஸ்டர் காரை வைத்திருக்கிறார். அவர் ஐ.பிஎல். தொடரில் சென்னைக்காக விளையாடும் காலங்களில் இந்த காரையே அதிகம் பயன்படுத்துகிறார். மஞ்சள் நிறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி நிறமாக இருப்பதால் சென்டிமென்டாக இந்த காரை பயன்படுத்துகிறார். மேலும் இவர் எங்கு அதிக நாட்கள் தங்க வேண்டியது வந்தாலும் அங்கு இந்த காரையும் கொண்டு செல்கிறாராம்.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

பாக்ஸ்டர் காரை பொருத்தவரை 3.4 லிட்டர் பிளாட் 6 இன்ஜின் கொண்டது. இது 326 பிஎச்பி பவரையும், 361 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் பிடிகே அல்லது 6 ஸ்பீடு மெனுவல் கியர் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது .

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் மிகச்சிலரே இந்த ரேஞ்ச் ரோவர் காரை வைத்திருக்கின்றனர். சுரேஷ் ரெய்னாவின் ரேஞ்ச் ரோவர் வாயேஜ் காரை வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு இந்த வாகனத்தில் செல்லும் போது டயர் வெடித்து விபத்து ஒன்றில் சிக்கினார். அதில் இருந்து இந்த காரை மிக குறைவாகவே பயன்படுத்துகிறார்.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

மெர்ஸிடியஸ் பென்ஸ் ஜிஎல்இ

சுரேஷ் ரெய்னா புதிதாக வாங்கியுள்ள கார் தான் மெர்ஸிடியஸ் பென்ஸ் ஜிஎல்இ கார். நீல நிறத்தில் உள்ள இந்த காரை அவரது பெற்றோர்கள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த கார் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டது. இது 255 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

ரவீந்திர ஜடேஜா

ஆடி க்யூ 7

ரவிந்திர ஜடேஜாவிற்கு ஆடி க்யூ 7 கார் மாமனார் வீட்டு சீதனமாக வந்தது. இந்த காரில் அவர் அடிக்கடி பயணம் செய்வதை நாம் பார்க்க முடியும். இந்த கார் பல இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

ஜடேஜாவிடம உள்ள காரில் 3.0 லிட்டர் வி6 டீசல் இன்ஜின் கொண்டது. இது 245 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

ஹர்பஜன் சிங்

ஹம்மர் எச் 2

பல ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங் இந்த சீசனில் சி.எஸ்.கேவிற்கு மாறியுள்ளார். கேப்டன் தோனி போலவே இவரும் ஹம்மர் எச்2 எஸ்யூவி காரையே வைத்துள்ளார். ஆடம்பர கார்களை விரும்பும் ஹர்பஜன் தனது கல்யாணத்தன்று கூட ரோல்ஸ் ராய்ஸ் ரக கார்களையே வைத்துள்ளார். அவர் வைத்துள்ள ஹம்மர் எச் 2 கார் 6.2 லிட்டர் இன்ஜின் கொண்டது. இது 393 பிஎச்பி பவரை வெளிபடுத்துகிறது.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

மெர்ஸிடியஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ்

ஹர்பஜன் சிங் எஸ்யூவி ரக கார்களின் பிரியர் அவரிடம் மெர்ஸிடியஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் காரும் உள்ளது. இந்த காரை அவர் அதிகம் பயன்படுத்தி வருகிறார்.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

வாட்சன்

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த வாட்சன் ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியுடன் விளையாடி வருகிறார். இவர் வால்வோ எக்ஸ் சி 60 என்ற காரை வைத்திருக்கிறார். இந்த கார் உலகின் பாதுகாப்பான கார்களில் ஒன்று. முதலில் இந்த ரக கார்கள் பார்க்க அவ்வளவு வசீகரமாக இல்லை பின்னர் வால்வே நிறுவனம் இந்த காரின் ஹெட்லைட், பின்பக்க லைட் ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்தது. இதையடுத்து இந்த கார் உலகின் சிறப்பான லுக் கொண்ட கார்களின் ஒன்றாக மாறிவிட்டது.

தோனியின் ஹம்மர் முதல் ஜடேஜாவின் ஆடி வரை சிஎஸ்கே வீரர்களின் கார் பட்டியல்

ஆடி க்யூ 5

வாட்சன் ஆடி க்யூ 5 நடுத்தர எஸ்யூவி காரை ஜெர்மனில் வாங்கியுள்ளார். பெரும்பாலும் பெரிய ரக எஸ்யூவி கார்களையே பிரபலமானவர்கள் வாங்கிவரும் நிலையில் இவர் நடுத்தர எஸ்யூவி காரை வாங்கியுள்ளது ஆச்சரியம் தான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Chennai Super Kings cricketers & their cars: From MS Dhoni & Harbhajan’s Hummers to Jadeja’s Audi Q7.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X