கனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?

கனரக லாரியுடன் கார் நேருக்கு நேராக மோதிய நிலையில், காரின் ஓட்டுனர் காயம் இல்லாமல் வெளியேறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?

நரேந்திரன் சந்திரமோகன் என்பவர் தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான சாலை விபத்து குறித்து, முகநூலில் பதிவிட்டுள்ளார். தவறான பாதையில் வந்த கனரக லாரி ஒன்று, அவரது டாடா டியாகோ காருடன் நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த பயங்கர விபத்து, சென்னை அவுட்டர் ரிங் ரோட்டில் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.

கனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?

விபத்து நடைபெற்றபோது நரேந்திரன் சந்திரமோகன் சீட் பெல்ட் அணிந்திருந்தார். எனவே இரண்டு ஏர்பேக்குகளும் சரியான நேரத்தில் விரிவடைந்துள்ளன. அத்துடன் அதிர்ஷ்டவசமாக நரேந்திரன் சந்திரமோகன், காயமின்றி தப்பித்துள்ளார். குறிப்பிடப்படும்படியாக அவரது உடலில் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?

விபத்தில் சிக்கிய பிறகு அவர் எக்ஸ்-ரே எடுத்து பார்த்துள்ளார். ஆனால் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் டாடா டியாகோ காரின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியிருப்பதை புகைப்படங்கள் மூலம் நம்மால் காண முடிகிறது. அப்படி இருக்கும்போது, நரேந்திரன் சந்திரமோகன் காயமின்றி தப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!

ஆனால் டாடா டியாகோ கார், சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் டாடா டியாகோ கார், கொடூரமான சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை பல முறை காப்பாற்றியுள்ளது. ஆனால் டியாகோ மட்டுமின்றி டாடா நிறுவனத்தின் மற்ற கார்களும், சாலை விபத்துக்களின்போது, பயணிகளுக்கு பல முறை கடவுளாக மாறியுள்ளன.

கனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?

குறிப்பாக டாடா நெக்ஸான், டாடா ஹாரியர் உள்ளிட்ட கார்கள் விபத்துக்களில் இருந்து பலமுறை பயணிகளை காயமின்றி காப்பாற்றிய செய்திகளை நாங்கள் கடந்த காலங்களில் வழங்கியிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வலுவான கட்டுமான தரம் கொண்ட கார்களை தயாரித்து வருகிறது.

கனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளன. தற்போது விபத்தில் இருந்து ஓட்டுனரை காப்பாற்றியுள்ள டியாகோ மற்றும் டிகோர் கார்களும் கூட குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் சிறப்பான செயல்பட்டுள்ளன.

கனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் மூன்று நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும், குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து டாடா டியாகோ/டிகோர் கார்கள் பெற்றுள்ளன. சமீபத்தில் நடைபெற்றுள்ள விபத்து, அவற்றின் வலுவான கட்டுமான தரத்தை பறைசாற்றும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?

டாடா டியாகோ காரில், 1.2 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பான பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக டாடா டியாகோ திகழ்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai: Tata Tiago Involved In Brutal Accident: Driver Escapes Without Injuries - Details. Read in Tamil
Story first published: Monday, November 30, 2020, 13:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X