கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

சென்னையில் போலீஸ்காரர் ஒருவர், கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் கண்டிப்பா கோவப்படுவீங்க.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றாததே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான், சாலை விபத்துக்களால் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அவர்கள் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதே காரணமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

எனினும் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவது இல்லை. ஆனால் இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க தற்போது மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

குறிப்பாக ஹெல்மெட் விதிமுறை மீறல்களுக்கு எதிராக தமிழக போலீசார் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் ஹெல்மெட் விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை, அதனை போலீசார் முறையாக அமல்படுத்தவில்லை என கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

அதன்பின்பாக போலீசார் ஹெல்மெட் வேட்டையில் இறங்கி விட்டனர். இந்த சூழலில் தலைநகர் சென்னையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியில், புளியந்தோப்பு போக்குவரத்து எஸ்எஸ்ஐ (சிறப்பு உதவி ஆய்வாளர்) ரமேஷ் என்பவர் நேற்று முன் தினம் (பிப்ரவரி 18) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

அப்போது சுரேந்தர் (19) என்ற இளைஞர் அந்த வழியாக டூவீலரில் வந்தார். இவர், ஓட்டேரி இஎஸ்ஐ குடியிருப்பு பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் ஆவார். இந்த சூழலில், டூவீலரில் வந்து கொண்டிருந்த சுரேந்தரை, எஸ்எஸ்ஐ ரமேஷ் மடக்கி பிடித்தார். அந்த சமயத்தில் சுரேந்தர் ஹெல்மெட் அணியாமல் இருந்தார்.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதன் காரணமாக சுரேந்தருக்கு அபராதம் விதிக்கப்போவதாக எஸ்எஸ்ஐ ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனால் சுரேந்தருக்கும், எஸ்எஸ்ஐ ரமேசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. அந்த சமயத்தில் ஆத்திரம் அடைந்த எஸ்எஸ்ஐ ரமேஷ், கட்டையால் சுரேந்தரின் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதனால் சுரேந்தருக்கு தலையில் பலமாக அடிபட்டது. அவர் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட நின்றதால், அந்த பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் ஒன்று கூடிய அவர்கள், எஸ்எஸ்ஐ ரமேஷை திடீரென தாக்க முயன்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறை உயரதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

பின்னர் படுகாயம் அடைந்த சுரேந்தரை மீட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் எஸ்எஸ்ஐ ரமேஷையும் அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆனால் எஸ்எஸ்ஐ ரமேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் சுரேந்தர் தற்போது புகார் அளித்துள்ளார். இதன் பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் சுரேந்தர் ஹெல்மெட் அணியாமல் வந்தது தவறுதான் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக கட்டையால் தலையில் தாக்குவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

ஆனால் இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் எந்த வகையில் ஏற்பட்டது? அவர்கள் என்ன பேசி கொண்டார்கள்? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. இருவரில் ஒருவர் மீது தவறு இருக்கலாம். ஆனால் அதற்காக கட்டையால் தாக்குவது என்பது சரியான நடவடிக்கையாக இருக்காது.

கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டையை பிளந்த சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

எனவே தவறு இருக்கும் பட்சத்தில், எஸ்எஸ்ஐ ரமேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் வாகன சோதனைகளின்போது போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் ஏற்கனவே ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இந்த சூழலில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் தமிழகத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Source: Dinakaran

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai Traffic Cop Hits Helmetless Two Wheeler Rider On Head With Lathi. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X